Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலாங்கரையில் ஜாய் கிரிசில்டா தந்த ஆதாரங்கள்.. மாதம்பட்டி ரங்கராஜூக்கு சென்னை போலீஸ் அனுப்பிய சம்மன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் தந்த புகாரின் பேரில் அதிகாரிகளின் விசாரணை நடைபெற்றது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் எனக்கு உறுதி தந்துள்ளனர்.. சட்டப்படியாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். என்னை தான் பலரும் குற்றம்சாட்டுகிறீர்களே தவிர, மாதம்பட்டி ரங்கராஜிடம் எதுவுமே, யாருமே கேட்பதில்லை என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கண்ணீருடன் நேற்றைய தினம் பேட்டி தந்திருந்தார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர், தயாரிப்பாளர், சமையல் கலை நிபுணர், டிவி செலிபிரிட்டி என பல்வேறு முகங்களை கொண்டவர் மாதம்பட்டி ரங்கராஜ்... காஸ்ட்லி குக் என்ற பெயரையும் பெற்றவர்.. விஐபிகளின் வீடுகளில் நடக்கும் சமையல் நிகழ்ச்சிகளுக்கு ஹெலிகாப்டரிலேயே சென்று வருபவர் என்றும் கூறப்படுகிறது.

Joy crizildaa madhampatti rangaraj chennai

மாலையும் கழுத்துமாய் திருமணம், கர்ப்பம்

சமீபகாலமாகவே ரங்கராஜ் மீது புகார் கிளம்பியிருக்கிறது.. ஏற்கெனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்வதாக சொல்லி, தன்னோடு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பொதுவெளியிலேயே பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

பிறகு இது தொடர்பாக கமிஷனர் அலுவலத்திலும் புகார் அளித்தார். பிறகு, தன்னுடைய புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, முதல்வர் ஸ்டாலினுக்கு தன்னுடைய சோஷியல் மீடியா பக்கம் கோரிக்கை வைத்தார். "நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஜாய் கிரிசில்டாவிடம் விசாரணை

இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா 2 நாட்களுக்கு முன்பு ஆஜரானார். காலை 11 மணி முதல் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது..

அப்போது ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள்? திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் குறித்து 50க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை ஆரம்பமானது.. AI தொழில் நுட்பம் தற்போது கையாளப்படுவதால், திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கான தரவுகள் குறித்தும் துணை கமிஷனர் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்த ஆதாரங்களை ஜாய் சமர்ப்பித்தார்.

சும்மா விட மாட்டேன்

இந்த விசாரணை முடிந்து வெளியே வந்த ஜாய், செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கும் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நீதி வேண்டும்.. இந்த பாவம் மாதம்பட்டி ரங்கராஜை சும்மா விடாது. எனக்காகவும், என்னுடைய குழந்தைக்காகவும் எந்த உச்சத்துக்கும் சென்று நீதி கேட்பேன்.. நிச்சயம் போலீசார் இதில் நடவடிக்கை எடுப்பார்கள். எனக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது' என்று கூறியிருந்தார்.

ஜாயிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.. எனவே அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பி ஓரிரு நாளில் விசாரணை நடத்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வட்டமடித்தன.

இந்நிலையில், திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் வருகிற 26ம் தேதி ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜூக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

மாதம்பட்டி தொடுத்த வழக்கு

இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் புகார் சொல்லி வந்த ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் ஒரு பதிவில் டேக் செய்திருந்தார். இதனால் கடுப்பான மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு, இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார்..

கேட்டரிங் தொழில் பாதிப்பு

அப்போது, ஜாய் கிரிசில்டாவின் சோஷியல்மீடியாவில் பதிவிட்ட பதிவுகளால், ஆகஸ்ட் 3ம் முதல் செப்டம்பர் வரை ரூ.11 கோடியே 21 லட்சத்து 25000 கேட்டரிங் ஆர்டர்கள் கேன்சல் ஆகிவிட்டன.. அந்தவகையில், நிறுவனத்தின் ஒரு இயக்குநரின் தனிப்பட்ட விவகாரத்துக்காக நிறுவனத்துக்கே இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்சைட்டில் கம்பெனி பற்றி தேடினால், மெனு கார்டுக்கு பதில், கிரிசில்டாவின் வீடியோ தான் வருகிறது இது எல்லாமே பணத்துக்காக செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் சோஷியல்மீடியாவில் அவர்கள் 2 பரை பற்றி செய்தி வெளியிட சென்னை ஹைகோர்ட் தடை விதித்திருக்கிறது..

கேட்டரிங் தொழில், திருமணம் சம்பந்தப்பட்டது என்பதால், கிரிசில்டாவின் வீடியோக்களை பார்க்கும்போது எப்படி ஆர்டர் கொடுப்பார்கள்? எனவே ஜாய் பதிவிட்ட பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்த தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம்

இதையடுத்து, கிரிசில்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், சோஷியல் மீடியா பக்கத்தில், பாகசாலா நிறுவனம் பற்றியோ, அதன் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எந்த பதிவும் போடப்படவில்லை.. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அப்படியானால் கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர்? எப்போது ரத்து செய்தனர்? எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது? எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப தரப்பட்டது? போன்ற விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக போலீசில் ஜாய் புகார் தந்த, 3 நாட்களிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பேயே "மிசஸ் ரங்கராஜ்" என போட்டோவுடன் ஜாய் பதிவிட்டுவிட்டார்..

எனவே, கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும், கிரிசில்டா கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மோசடிக்குள்ளான கிரிசில்டா, கருவிலுள்ள குழந்தைக்காக நீதி கேட்டு ஓடிக்கொண்டிருக்கிறார். ரவி மோகன் வழக்கின் தீர்ப்பு இந்த வழக்குக்கு பொருந்தாது" என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+