நிச்சயத்தை அறிவித்த ஜூலி.. காதலர் புகைப்படத்தை நீக்கிய நிவேதா பெத்துராஜ்! பின்னணியில் நடந்த சம்பவம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஜூலி சமீபத்தில் தான் தனக்கு எங்கேஜ்மென்ட் ஆனதை அறிவித்திருந்தார். அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் இன்னொரு சம்பவம் நடந்தது அதாவது சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதலருடன் போட்டோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் அந்த புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்திருக்கிறார். இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்று தகவல் தான் இப்போது பேசப்படுகிறது.
ஜல்லிக்கட்டு மூலமாக பெரிய அளவில் பெயர் வாங்கிய ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய திரை பயணத்தையும் தொடங்கினார். ஆனால் சினிமாவில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு வில்லியாக இமேஜை கொடுத்தது. அதுபோல இந்த சீரியலிலும் வில்லியாகவே நடித்து வந்தார். ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் தனக்கு அதுவரைக்கும் இருந்த நெகட்டிவ் இமேஜ் எல்லாம் தூக்கி வீசிவிட்டார். அதற்கு பிறகு ஜூலி பாவம்.. ஐயோ இவருக்கு வாய்ப்பு கொடுங்களேன்! என்று ரசிகர்களே கெஞ்ச தொடங்கி விட்டார்கள். அதிலும் இவர் போஸ்ட் போட்டால் ஆரம்பத்தில் எல்லாம் முழுக்க இவரை திட்டித்தான் கமெண்ட்ஸ் வரும். ஆனால் பிறகு அப்படியே நிலைமை மாறிவிட்டது.
சூழல் இப்படி இருக்க, சோசியல் மீடியாவில் சில நாட்களுக்கு முன்பு ஜூலி தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை வெளியிட்டு, தன்னுடைய வருங்கால கணவர் குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருந்தார். இதுதான் இணையத்தில் அதிகமாக பேசும் பொருளாக மாறியது. காரணம் அந்த புகைப்படத்தில் ஜூலி அவருடைய வருங்கால கணவர் முகத்தை காட்டவில்லை. அதனால் இவர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் தேட தொடங்கி விட்டனர்.
அதேபோல சில மாதங்களுக்கு முன்பு நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய காதலரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஹார்ட்டின் எல்லாம் பறக்க விட்டிருந்தார். அப்போது அவர் யாரென்று தேடிப்பர்த்த ரசிகர்கள் ஜூலியின் முன்னாள் காதலர் தான் இவர், இவரைத்தான் நிவேதா கல்யாணம் பண்ண போகிறாரா? என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் இப்போது ஜூலி தன்னுடைய எங்கேஜ்மென்ட் போட்டோவை போஸ்ட் போட்ட அடுத்த சில நாட்களில் நிவேதா தன்னுடைய காதலனோடு எடுத்த போட்டோவை டெலிட் செய்திருக்கிறார்.
இதனால் ஜூலி நிவேதாவின் காதலரைத்தான் எங்கேஜ்மென்ட் செய்திருக்கிறாரா? என்றெல்லாம் சிலர் கமெண்ட்ஸ் போட்டு வந்தனர். ஆனால் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி இப்போ ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஜூலியின் எங்கேஜ்மென்ட் வீடியோ சில லீக் ஆகி இருக்கிறது. அதில் அவருடைய வருங்கால கணவரின் முகத்தை பார்க்கும் போது அவர் நிவேதா பெத்துராஜின் காதலர் இல்லை என்பது தெளிவாக இருக்கிறது.
இதனால் நிவேதா பெத்துராஜ்க்கும் அவருடைய காதலருக்கும் ஏதோ மனஸ்தாபம் போல, அதனால் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் நிவேதாவுக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். நீங்கள் கவலைப்படாதீங்க உங்களுக்கு சீக்கிரமா நல்ல ஒரு வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்று பலர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ஜூலிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications