அன்று வந்ததும் "டட்டட்டா".. என்றுமே ஜூலி தானே ரசிகர்களுக்கு அழகு நிலா!
சென்னை : ப்ளாக் அண்ட் வைட் போட்டோவில் பழைய நடிகையாக மாறிய ஜூலியை பார்த்து உருகி போன அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளால் கொஞ்சி வருகின்றனர். எங்களுக்கு எப்பவுமே ஜூலிதான் அழகு நிலா என்றும் ஜொள்ளாமல் ஜொள்ளிக் கொண்டுள்ளனர்.
70ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக மாறிய ஜூலிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றது. உண்மையிலேயே அந்த பழைய நடிகை கெட்டப் சூப்பராகவே ஜூலிக்கு சூட் ஆகியுள்ளது. குறிப்பாக அந்த கொண்டை.. செம!
அடடா பார்க்கும் பார்வையாலேயே அப்படியே பழைய நடிகையாக மாறி கலக்கலாக ஆட்டம் போட்டிருக்கும் ஜூலியை பார்த்து அசந்துபோன ரசிகர்களால் மட்டுமல்லாமல் நெட்டிசன்களாலும் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

என்ன. ...எக்ஸ்பிரஷன்
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்று அழகு நிலாவாக ஜொலிக்கும் ஜூலியை பார்த்து உருகிப் போன ரசிகர்கள், நூறு நிலவின் அழகை ஒரு நிலவாக்கி செய்த அழகு ஜூலியே என்று கொஞ்சி வருகின்றனர். இவர்களின் வர்னிப்புகளை பார்த்ததும் அந்த நிலாவே கொஞ்சம் பொறாமை கொள்ளும் போல, அந்த அளவிற்கு விழுந்து விழுந்து இப்படியெல்லாம் என்னை விட அழகு என்று நீங்களே கூறிக் கொண்டால் நான் என்ன செய்ய வேண்டும்!! என்பது போல நிலாவின் மைண்ட் வாய்ஸ் இருக்கிறது. சரோஜாதேவியை மிஞ்சிட்டீங்க போங்க என்றும் பலர் குறும்பு கொப்பளிக்க கலாய்த்துள்ளனர். கொண்டைதான் காரணம் போல எல்லாத்துக்கும்.

ரீல்ஸ் வீடியோவில் கலக்கல்தான்
ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோவை ஜூலி போட்டதுதான் போட்டார், அவருடைய ரசிகர்களின் தொல்லை சமூகவலைத்தளத்தில் தாங்க முடியவில்லை. இவருடைய ரீல்ஸூக்காக காத்திருந்த ரசிகர்கள் இவரை மேலும் உசுப்பேற்றி வருகின்றனர். சும்மாவே காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஆடும் ஜூலி இப்ப கொஞ்ச நாட்களாக தான் அமைதியாக இருந்தார். மீண்டும் ரசிகர்களின் மகுடி இசைககு ஆடத் தொடங்கி விட்டார். இனி இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குவதில் இவர்களுக்கு என்னதான் கொண்டாட்டமோ என தெரியவில்லை என்று சில நெட்டிசன்கள் கதறி வருகின்றனர்.

கிடைச்ச வாய்ப்பை விடல
இவருடைய வாழ்க்கையே மாற்றிய அதே விஜய் டிவியில் மீண்டும் இவர் காலடி எடுத்து வைத்து இருப்பதை பார்த்து அவருடைய ரசிகர்கள் முதலில் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று தான் இவரிடம் கூறி வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்கு நல்ல ஒரு பிளாட்பாரம் கிடைத்து இருக்கிறது. அதை விட்டு விட மாட்டேன் என்று கூறி, இதில் தன்னுடைய திறமையை அழகாக வெளிக்காட்ட வேன்டும் என ரசிகர்களுக்கும் ஆறுதல்களை கூறியிருந்தார். தற்போது அவருடைய எண்ணத்தின் படியே ஒவ்வொருநாளும் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதை தொடங்கி மீண்டும் ஆக்டிவ் ஆக மாறி இருக்கிறார்.

தத்ரூபமாக மாறிட்டாரே.
ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விடியோவை ஜூலி அப்லோட் செய்து இருக்கிறார். அதைப் பார்த்ததும் அப்படியே ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகி விட்டனர். ஏனென்றால் தத்ரூபமாக அவர் பழைய நடிகைகளின் சாயலில் மாறி இருக்கிறார். அதுவும் பிளாக் அண்ட் ஒயிட் வீடியோவில் அப்படியே பிளாக் அண்ட் ஒயிட் படத்தை பார்ப்பது போலவே இவருடைய எக்ஸ்பிரஷன் இருக்கிறது என்று இவருடைய ரசிகர்கள் உருகி தான் போய் இருக்கிறார்கள். அதுவும் அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என இவர் விதவிதமாக போஸ் கொடுத்து அந்த நிலவை கொஞ்சம் பொறாமைப்பட வைத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

பக்கத்திலேயே இன்னொரு நிலா
இந்த பழைய நிலா ரீல்ஸுக்கு முன்னாடியே இன்னொரு நிலவுப் பாட்டையும் போட்டுள்ளார் ஜூலி. அதில் தனது முகத்தை ரொம்ப குளோஸாக வைத்துக் கொண்டு (ப்பா.. என்று வெறியான ரசிகர்களின் கமெண்ட்டுகளையும் பார்க்க முடிகிறது) டாக்கிங் டூ தி மூன் என்று கேப்ஷன் போட்டுள்ளார். பின்னணியில் ஆஙகிலப் பாட்டு அலறுகிறது. கண் மூடி நிலவை ரசிக்கிறார் ஜூலி.. பிறகு படக்கென கண்ணைத் திறக்க பாட்டும் முடிகிறது.. இந்த வீடியோவுக்கும் ஏகப்பட்ட கமெண்டுகள்.. நிலவோடு பேசுகிறாரா அல்லது தூங்கிட்டாரா என்று தொடங்கி விதம் விதமாக கமெண்ட் விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications