அது என்ன அவ்வளவு பெருசா இருக்கு?...கண்ணாடியை காட்டி கலாய்க்கும் ஜூலியின் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலக்கலாக முகத்தில் பெரிய கண்ணாடியை மாட்டிக் கொண்டு வந்த ஜூலியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள் கூட்டம் இன்ஸ்டாகிராமை ரவுண்ட் கட்டி வருகிறது.

முகத்தில் எந்த மேக்கப் போடாவிட்டாலும் ஸ்டைலாக போட்டோ வெளியிட்ட ஜூலிக்கு ரொம்பவே தைரியம் தான் என அவருடைய ரசிகர்கள் போட்டோவை வைரலாகி வருகின்றனர்.

இதுவரைக்கும் இல்லாத வகையில் எளிமையான உருவத்தில் மாறியிருக்கும் ஜூலிக்கு அவருடைய ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் தான்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் தான்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்ன செய்தாலும் கலாய்த்து வரும் நெட்டிசன்கள் ஜூலிக்கு அதிகமானாலும் அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்டாக ஒரு போட்டோவைப் போஸ்ட் பண்ணி இருக்கிறார். இவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தன்னைப்பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களை சமாதானப் படுத்துவதற்காக இவர் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக போஸ்ட் போட்டு வருகிறார்.

கமெண்ட்களில் போர் நடக்குது

கமெண்ட்களில் போர் நடக்குது

ஆரம்பத்தில் இவரை அதிகமாக கலாய்த்துக் கொண்டு இருந்தவர்கள் கூட தற்போது அடங்கிவிட்டார்கள். நாட்கள் செல்ல செல்ல இவர் மீது இருந்த கோபம் குறைந்து கொண்டே இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் இன்னும் இவர் மீது இருந்த நெகட்டிவ் சிந்தனைகள் மாறவில்லை போல, அதனால்தான் தற்போது இவர் வெளியிட்ட ஒரு போட்டோக்கு கண்ட மேனிக்கு திட்டி ஒரு ரசிகர் கமெண்ட் போட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு ஜூலி தான் கோபப்படுவார் என்று பார்த்தால் அவருக்கு பதிலாக ஜூலியின் ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட் போட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டார்கள். ரசிகர்களும் நெட்டிசன்களும் போட்டிப்போட்டு கமெண்டுகளை குவித்து இன்ஸ்டாகிராமை பரபரப்பாகி வருகின்றனர்.

ஜூலிக்கும் ஓவியாவுக்கும் சண்டை

ஜூலிக்கும் ஓவியாவுக்கும் சண்டை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் ஜூலி என்றால் அந்த அளவிற்கு பெரியதாக யாருக்கும் தெரியாமல் தான் இருந்து வந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். ஆரம்பத்தில் இவருடைய குழந்தை தனத்தை ரசித்து வந்த ரசிகர்கள் இவருக்கும் ஓவியாவிற்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு இவரை வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். ரசிகர்கள் பலர் இவரை வெறுத்து இவருக்கு எதிராக நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்தனர். இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தவரைக்கும் இவரைப் பற்றி இந்த மாதிரி நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்று தெரியாது. ஆனால் வெளியே வந்த பிறகு ரசிகர்களின் மனநிலையை நன்றாகவே புரிந்து கொண்டார். ஆனால் அதைப்பற்றி அவர் கொஞ்சம் கூட கவலைப் படவும் இல்லை.

வித்தியாசமான போட்டோசூட்

வித்தியாசமான போட்டோசூட்

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ஒருவரை ஹீரோவாக உருவாக்கிவிடுகிறது. அதுவரைக்கும் ஹீரோவாக இருந்தவர்களை ஜீரோ ஆக்கி இவரா இப்படி என்று ரசிகர்கள் முகம் சுளிக்க வைத்து விடுகிறது. அதில் ஜூலிக்கு இரண்டாவது கேரக்டர் செட் ஆகிவிட்டது, ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு போட்டோஷூட்டில் பிஸியாக மாறிவிட்டார். மாடலிங்கில் காலடி எடுத்து வைத்த இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்ததால் அதில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்தார். வித்தியாசமாக இவர் நடத்தும் போட்டோ ஷூட் போட்டோக்களை பார்த்து கலாய்க்க ஒரு கூட்டம் என்றால் அதனை வரவேற்பதற்கு இன்னொரு பெரிய கூட்டமே உருவாகிவிட்டது. தற்போது இவர் விஜய் டிவியில் மீண்டும் காலடி எடுத்து வைத்து இருந்தார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+