மலையாளம் மனம் வீச மரிய ஜூலி...பொங்கும் அழகைப் பார்த்து பூரித்துப் போன ரசிகர்கள்!
சென்னை : ஜூலியின் கூந்தலில் சூடிய மல்லிகைப்பூவும் கூட தகிட திமி பாட்டு பாடுதாமே அவருடைய அழகை பார்த்து என ரசிகர்கள் உருகிறார்கள்.
கேரளத்திற்கு சென்றிருக்கும் ஜூலி அங்கு மக்களோடு சேர்ந்து அப்படியே கேரளத்துப் பைங்கிளியாக வட்டமிட்டு கொண்டிருக்கிறார்.
இவரை எந்த போஸில் பார்த்தாலும் அழகு இப்போம் கொஞ்சம் அள்ளுதே என்று ஆதரிக்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

அப்படியே மாறி விட்டாரே
ஒரு சில நாட்களாக கன்னியாகுமரி மார்த்தாண்டம் பகுதிகளிலிருந்து போட்டோக்களை வெளியிட்டு கொண்டிருந்த ஜூலி தற்போது அங்கேயே அழகாக ஓணம் பண்டிகையை கொண்டாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்களாம். அந்த அளவிற்கு தன்னுடைய கியூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இதற்கு முன்பு இவர் எத்தனையோ வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தாலும் அதில் பல வைரலாகி இருக்கிறது. ஆனால் தற்போது இவர் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பார்த்துப் பார்த்து எடுத்திருக்கும் வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.

நெகட்டிவ்களை குறைத்த பொறுமை
ஓணம் பண்டிகைக்கு உரித்தான நேரியல் புடவையில் நேர்த்தியாக களமிறங்கியிருக்கும் ஜூலியை பார்த்து அசந்து போன ரசிகர்களால் அவருக்கு லைக்களை போடாமல் இருக்க முடியவில்லையாம். அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் வந்து கொண்டிருந்தாலும் தற்போது ரசிகர்கள் கமெண்டுகளில் தங்களுடைய அன்பை கொட்டுகின்றனர். அதுவும் இவர் எந்த போஸ்ட் போட்டாலும் அதற்கு கமெண்ட் போட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து கொஞ்ச நாட்களாகவே இவருடைய போஸ்ட்களுக்கு நெகட்டிவ் காமெண்ட்கள் குறைந்து விட்டது. இது ஜூலியின் பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இவரை ஆரம்பத்தில் எவ்வளவோ ரசிகர்களை திட்டித் தீர்த்தாலும் அதற்கு எல்லாம் சிரித்தபடியே இவர் பதில் கூறிக் கொண்டு இருந்ததால் தான் இந்த அளவிற்கு வந்து இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கூறுகின்றனர்.

கோதாவில் இறங்கிய ஜூலி
இன்று ஓணம் பண்டிகை வந்ததும் தான் வந்தது,சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனைத்து செலிபிரிட்டி களும் தங்கள் பங்கிற்கு விதவிதமாக கேரளா காஸ்ட்யூம் உடன் போட்டோ போட்டு வாழ்த்துக்கள் கூறி வரும் பொழுது நான் மட்டும் என்ன சும்மாவா..!..?... நானும் செலிபிரிட்டி தாங்க என்று தன் பங்கிற்கும் ஜூலியும் தளதளவென்று பட்டையை கிளப்பும் கேரளா புடவை உடுத்திக் கொண்டு.. 'உயிரே'படத்தில் வரும் 'நெஞ்சினிலே' பாடலுடன் ஸ்லோமோஷனில் கும்மென்று இவர் போட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ ஜூலியின் மற்ற வீடியோக்களை போன்றே அனைத்து விதமான கமெண்ட் களையும் பெற்று வைரலாகி வருகிறது. கொஞ்ச நாட்களாகவே மாடர்ன் டிரஸ்ஸில் மட்டுமே வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு வந்த ஜூலி சில நாட்களுக்குப் பிறகு சேலையில் அப்லோடு செய்துள்ள இந்த வீடியோ மற்றவர்களுக்கு எப்படியோ அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணமே இருக்கிறது.

அம்சங்கள் எல்லாம் அள்ளுது
தங்களது விருப்பத்திற்குரிய செலிபிரிட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு சேலையில் அதுவும் கேரளா ஸ்டைலில் பார்த்த அவரது ரசிகர்கள் வரவேற்பு கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள். வழக்கம்போல் ஜூலிக்கு என்றே காத்திருக்கும் அவரது ஹேட்டர்ஸ்கள் ஜூலியின் இந்த வீடியோவை பதம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் .அதிலும் ஒருவர் இந்த கேரளா பொண்ணுங்க எல்லாம் சும்மா தான் பா இருக்காங்க இங்கு இருக்கவங்க அலப்பறை தாங்க முடியல ஓவரா சீன் போடுறாங்க என்று குதர்க்கமாக கமென்ட் பண்ண,.....ஓ!!அப்படியா!? இதனால உங்களுக்கு என்ன பிரச்சனை? சில்.. ப்ரோ.. என்று அவருக்கு கூலாக பதில் அளித்துள்ளார் ஜூலி. எந்தவிதமான அலப்பறையோ ஆர்ப்பாட்டமும் இல்லாமல் போட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து நடுநிலையான ரசிகர்கள் கூட ஜூலி மேடம் நீங்கள் இதுவரை போட்டதிலேயே உருப்படியான வீடியோ இதுதானென்று புகழ்ந்தும் வருகின்றனர்.மலையாளிகளே இந்த வீடியோவை பார்த்து நன்றாக இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டாலும் ஏற்று விடுவார்கள் போல,ஆனால் இங்கு இருக்கும் ஜூலி ஹேட்டர்ஸ்கள் அவர் போடும் போஸ்ட்டை கடித்து குதராமல் இருக்க மாட்டார்கள் போல....எது எப்படியோ கேரளா பெண்களுக்கான அனைத்து அம்சங்களுடன் ஜூலி போட்டுள்ள வீடியோ ஜூலி அவர்களின் ரசிகர்களுக்கு நல்ல ஓணம் விருந்து தான்!
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications