பிறந்த நாளுக்காக.. உதடு குவித்து ரசிகர்களுக்கு.. முத்தம் கொடுத்த ஜூலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறந்தநாளுக்காக தனக்கு பரிசுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கிய ரசிகர்களுக்கு என்னால் முடிந்தது என உதடு குவித்து முத்தத்தை அனுப்பியுள்ளார் ஜூலி .

ஜூலியின் இந்த அன்பை ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். அதேசமயம், பிறந்தநாள் அன்று கூட ரெஸ்ட் இல்லாமல் கலாய்க்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

குழந்தையாக இருந்தாலும் சரி குமரியாக இருந்தாலும் சரி பிறந்தநாளை யாராலயும் மறக்க முடியாது .அதுவும் தனக்கு பிடித்தவர்களின் பிறந்தநளை அனைவரும் நினைவில் வைத்து அசத்தி விடுவார்கள்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

அது போலத்தான் தற்போது ஜூலி யின் பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவருக்காக பலர் பரிசுகளையும் கேக்குகளையும் அனுப்பி இருக்கின்றார்களாம் .அவர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமின் போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார் .

கேக் அனுப்பி கொண்டாட்டம்

கேக் அனுப்பி கொண்டாட்டம்

அதுவும் கேக் வெட்டுவது காட்டாமல் கேக்கை சாப்பிட்டுவிட்டு அந்த கீரிமை மட்டும் முகத்தில் பூசியபடி விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைவருக்கும் பாப்புலரான பெயராக ஜூலி மாறிவிட்டார் .இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் முதல் சீசனை யாரும் மறக்க முடியாது

ரசிகர்களால் மறக்க முடியாது

ரசிகர்களால் மறக்க முடியாது

அதிலும் அதில் கலந்துகொண்ட ஜூலியை எளிதில் மறக்காமல் தான் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .தனக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் இல்லை நான் பிரபஷனல் செவிலியர் என கூறி வந்த இவர் தற்போது முழு நேரமாக மாடலிங்கில் கலக்க ஆரம்பித்து விட்டார் .பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒருவரை மக்கள் அதிகமாக திட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர் .

அதிக வெறுப்பு

அதிக வெறுப்பு

அதுவும் முதல் சீசனில் ஜூலியை தான் மக்கள் அதிகமாக வெறுத்து திட்டி வந்தனர். ஆனாலும் தன்னைப்பற்றி நெகட்டிவாக திட்டின ரசிகர்களின் கமெண்டுகளை பாசிட்டிவாக நினைத்துக்கொண்டு தனக்கான பாதையில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கும் இவருடைய பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்களும் வாழ்த்துக்களை வாரி வழங்கி வருகின்றனர்.

பாப்புலர்

பாப்புலர்

ஏதாவது ஒரு சில செயல்களாக இருந்தாலும் சரி ஒரு சில நபர்களாக இருந்தாலும் சரி அதிகமாக நெகட்டிவாக பேசப்பட்டு பேசப்பட்டு பிரபலமாகி விடும். அதுபோல ஜூலியை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் அதிகமாக பேசி பேசி அவரை பாப்புலராக்கி விட்டார் .அதனால்தான் அவர் தொழில் முறையை தாண்டி அதிகமாக அவருடைய சொந்த கேரக்டரை பற்றி ரசிகர்களும் நெட்டிசன்களும் கலாய்த்து வந்ததால் நன்றாக பிரபலம் அடைந்து விட்டார்.

வெறுப்பாளர்கள்

வெறுப்பாளர்கள்

தற்போது வரைக்கும் இவருக்கு அதிகமாக ஹேட்டர்ஸ் இருந்து வந்தனர் .ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தட்டி விட்டு விட்டு தனக்கிருக்கும் ரசிகர்களே தனக்குப் போதும் என்று தன்னுடைய வேலையை செய்து வருகிறார் .அதனால்தான் தற்போது இவருக்கு மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிராக்டிஸ் செய்து வந்தவர்

பிராக்டிஸ் செய்து வந்தவர்

அதனால் இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிராக்டீஸ் பண்ணி அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் அதிகமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். தற்போது அதை எல்லாம் தாண்டி இவர் அவருடைய ரசிகர்களின், அனைத்து வாழ்த்துகளுக்கும் பரிசு களுக்கும் நன்றி ,ஒவ்வொருவரின் விருப்பத்தையும் ஆசீர்வாதங்களையும் நன்றிகளையும் மதிக்கிறேன் என்று கேப்ஷனோடு தனக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார்.

எங்களுக்கு இல்லையா

எங்களுக்கு இல்லையா

இவருடைய பிறந்தநாள் போட்டோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அப்போ எங்களுக்கு கேக் கிடையாதா என்று கேட்டிருக்கின்றனர் .அதற்கு அசால்ட்டாக கையிரண்டும் விரித்தபடி பப்பரப்பா என இவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ஆனாலும் இந்தக் சேட்டை ஆகாது என்று செல்லமாக ரசிகர்கள் கோபப்பட்டு வருகின்றனர். ஜூலி என்ன செஞ்சாலும் ஜாலிதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+