சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி இடையேயான மோதல் தற்போது இன்னொரு கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இருந்த சர்ச்சை அடங்கும் முன்பே, ஜூலி வெளியிட்டுள்ள புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இந்த விவகாரத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவில் ஜூலி பேசும் போது, "வணக்கம் மக்களே... எல்லோரும் சிலிண்டர் வாங்கி வைத்திருப்பீங்கன்னு நம்புறேன். ஏன்னா வழக்கம் போல நரேந்திர மோடி அரசு நம்ம வயிற்றில் அடிக்க தொடங்கிட்டாங்க.

இதைப்பற்றி நம்ம அண்ணா பேச மாட்டார். 'ஜி' அவர்கள் சொல்லிட்டா சிபிஐ வந்து குடுமியை பிடித்து ஆடும். அதனால் பிஜேபி பற்றி வெளிப்படையாக பேச மாட்டார். சமீப காலமாக விஜய் பிஜேபி கூட போவாரா இல்லையா என்ற ஒரு பேச்சு போய்கிட்டு இருக்கு.. ஆனா நான் சொல்லுறேன்... கண்டிப்பா அவர் பிஜேபியுடன் சேர மாட்டார். ஏன்னா தமிழ்நாடு அந்த கட்சியை எதிர்க்கிறது.
'ஆண்டி பிஜேபி'ன்னு சொல்லி ஓட்டு வாங்கணும் என்பதற்காகவே இந்த மாதிரி நாடகம் நடக்குது. அதை நம்பி நீங்க ஏமாந்துடாதீங்க... நீங்க திமுகக்கு போய் ஓட்டு போடுங்க" என்று ஒபனாக அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதோடவே, "நம்ம 'பாஸ்கெட் பால் அண்ணா' 40 நிமிஷம் என்குயரிக்காக பிரைவேட் ஜெட்டில் சரக்கு பாட்டிலுடன் போய் மாட்டிக்கிட்டாரு... இதெல்லாம் கட்சிக்கு அவமானம் இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யும்... தீ பரவட்டும்" என்றும் அவர் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் மீண்டும் கடும் விவாதம் கிளம்பியுள்ளது.
குட்டிக்கதை பிரச்சனை
ஜூலியின் மோதலின் தொடக்கம், விஜய் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தபோது சொன்ன "குட்டிக் கதை"யிலிருந்து தான். அந்த ஜல்லிக்கட்டு காளை கதையை நேரடியாக விமர்சித்து ஜூலி வெளியிட்ட வீடியோ தான் முதல் சர்ச்சையை கிளப்பியது.
அதன் பின்னர், விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் சமூக வலைதளங்களில் ஜூலிக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட ஆரம்பித்தனர்.
விமர்சனம் எல்லை மீறிய தருணம்
முதலில் சாதாரண எதிர்ப்பு மாதிரி இருந்தது. ஆனால், சில நாட்களிலேயே அது தனிப்பட்ட தாக்குதலாக மாறியது. சிலர் ஜூலியை கிட்னி விற்பனை மோசடி விவகாரத்துடன் தொடர்புபடுத்தி பேச ஆரம்பித்தனர். அதோடு, அவரது குடும்பத்தினரையும் இழுத்து அவமரியாதையாக விமர்சனங்கள் வந்ததாக கூறப்படுகிறது.
போலீசில் ஜூலி புகார்
இந்த சம்பவங்களால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறிய ஜூலி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னை குறிவைத்து பொய்யான வீடியோக்கள் வெளியிட்டு அவதூறு பரப்பியதாகவும், கிட்னி மோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் தன்னை இணைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இப்போது நிலை
ஒரு வீடியோ விமர்சனமாக ஆரம்பித்த இந்த விவகாரம் முதலில் ரசிகர்கள் மோதல்... பின்னர் தனிப்பட்ட குற்றச்சாட்டு... இப்போது போலீஸ் புகார் மற்றும் நேரடி அரசியல் தாக்குதல்... என்று ஒவ்வொரு கட்டத்திலும் பெரிதாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராதது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் பதில் சொல்லுவாரா? அல்லது அமைதியாக இருப்பாரா? என்பதுதான் இப்போது அனைவரும் கவனித்து பார்க்கும் விஷயமாக உள்ளது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications