உங்க தலைவருக்கு மடக்கு ஊதியை சரியா ஊதுங்க.. எனக்கு இவர் 3வது புருஷன்! தவெகவை வெளுத்து வாங்கிய ஜூலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் மூலம் அறிமுகமாகி, பிறகு சமூக வலைத்தளங்களில் தன் கருத்துகளை தைரியமாக சொல்லும் நபராக மாறிய ஜூலி, மீண்டும் ஒரு வீடியோவால் பேசுபொருளாகி இருக்கிறார். இந்த முறை காரணம் - அவருடைய "மூன்றாவது கணவர்" கமெண்ட்!

Julie Vijay

விஜய் பேச்சை விமர்சித்த ஜூலி

சில நாட்களுக்கு முன்பு வேலூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் விஜய் ஜல்லிக்கட்டு காளையை ஒரு சிறுவன் புல்லுக்கட்டு கொடுத்து சமாதானப்படுத்திய கதை பற்றி பேசியிருந்தார்.

அந்த பேச்சை குறித்து ஜூலி வெளியிட்ட வீடியோவில், "இப்படி காளை கதை சொல்லி மைனர்களை தூண்டினால் ஏதாவது பிரச்சனை நடந்தால் என்ன செய்வது? ஜல்லிக்கட்டுக்காக எவ்வளவு போராடி அனுமதி வாங்கினோம்" என்று கேள்வி எழுப்பினார்.

அந்த வீடியோ வைரலானதும், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜூலியை கடுமையாக விமர்சித்தனர். சிலர் திட்டியும், சிலர் மிரட்டலும் விடுத்ததாக அவர் கூறினார்.

ஜூலியின் சவால்

இதற்குப் பிறகு அவர் வெளியிட்ட இன்னொரு வீடியோவில், "என்னை பழிவாங்கணும்னா நான் வீட்ல இருப்பேன், இல்லனா என் ஆபீஸ்ல இருப்பேன். நீங்க தான் பனையூரை விட்டு வர மாட்டீங்களே விஜய்ணா, நான் வேண்டுமானால் வர்றேன்" என்று சவால் விட்டார்.

இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு பதிலாக சில ரசிகர்கள், "மூன்று கல்யாணம் செய்த ஜூலி எங்கள் அண்ணனை பற்றி பேச கூடாது" என்று விமர்சித்தனர்.

கிண்டலுடன் பதில்

இந்த விமர்சனங்களுக்கு பதிலாக, ஜூலி தற்போது வெளியிட்ட வீடியோ தான் பெரிய அளவில் பேசப்படுகிறது. சமையல் செய்து கொண்டிருந்த தனது காதல் கணவர் முகமது இக்ரீமை காட்டி, ஹாய் ஹலோ வணக்கம், வெர்ச்சுவல் சாரி வல்கர் வாரியர்ஸ். இவர் தான் என் மூன்றாவது கணவர். ஆனால் எங்களுக்கு இப்பொழுது தான் முதல் முறை திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு முன்பு தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் எனக்கு திருமணம் நடந்தது.

அதற்கும் முன்பு அம்மன் தாயி படத்தில் திருமணம் நடைபெற்றது. தவெக வல்கர் வாரியர்களின் ரெக்கார்டின்படி இது மூன்றாவது திருமணம். முகம் கூடவா வித்தியாசம் தெரியாமல் இருக்கும்?. இதே போன்று தேர்தல் நேரத்தில் வேறு எதிலும் ஊதிவிடப் போகிறீர்கள். சரியாக மடக்கு ஊதியில் ஊதிட்டு வாங்க. அப்புறம் உங்கள் தலைவருக்கு டெபாசிட் கிடைக்காமல் போய்விடப் போகிறது என்று அரசியல் ரீதியாகவும் கிண்டல் செய்தார்.

ரசிகர்கள் கருத்துகள்

ஜூலியின் இந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட்ஸ் வெடித்து சிதறி வருகின்றன. விஜய் ரசிகர்கள் பலர், "எங்கள் தலைவரை பற்றி பேசாதீங்க" என்று கடுமையாக எழுதுகிறார்கள்.

மற்றொரு பக்கம், "தவெகவுக்கு போட்டி ஜூலிதான்" என்று சிலர் கிண்டலாக கமெண்ட் செய்கிறார்கள். இன்னும் சிலர், "எதையும் நேராகச் சொல்லும் தைரியம் ஜூலிக்கே இருக்கிறது" என்றும் ஆதரிக்கிறார்கள்.

கல்யாணம் பற்றிய முந்தைய சர்ச்சை

சமீபத்தில்தான் ஜூலி, சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகமது இக்ரீமை திருமணம் செய்துகொண்டார். நிச்சயதார்த்த புகைப்படங்களில் மாப்பிள்ளையின் முகம் தெளிவாக தெரியாததால் பல வதந்திகள் கிளம்பின.

அதே நேரத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து இருந்த பிரேக்கப் பேச்சுகளையும் இதோடு இணைத்து சிலர் கதைகள் கட்டினர். பின்னர் ஜூலி தெளிவான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிறகே அந்த வதந்திகள் அடங்கின.

இப்போது மீண்டும் ஒரு வீடியோ மூலம் ஜூலி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறார். அவர் பேச்சு சரியா? தேவையில்லாத சர்ச்சையா? என்பது வேறு விஷயம். ஆனால், தன்னிடம் வரும் விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொல்லும் பாணி அவரை தொடர்ந்து செய்திகளில் வைத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+