Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாலியாக நடிகையுடன் தனிக்குடித்தனம்.. தங்க நகைகள், லட்சம் லட்சமாய் பணத்தை ஆட்டய போட்ட நடிகர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சுகுமார் காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், பரத் நடித்த காதல் படம்தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அதன் காரணமாகவே அவர் காதல் சுகுமார் என்று அழைக்கப்படுகிறார். இப்போது இவர் மீது மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த அந்த பெண், சில படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆனவர்.. குழந்தையும் இருக்கிறது.. ஆனால், கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.. அப்போதுதான், அந்த நடிகைக்கும், காதல் சுகுமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலிப்பதாக கூறிய காதல் சுகுமார், தனியாக வீடு எடுத்து அந்த நடிகையுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்ததாகவும் தெரிகிறது.

Television Junior Artist Gold Jewellery

மேலும் அடிக்கடி அந்த நடிகையிடம் இருந்து நகை பணம் உள்ளிட்டவற்றையும் சுகுமார் வாங்கியுள்ளார். எனினும், சில நாட்களாக அந்த நடிகையுடன் சுகுமார் பேசவில்லை என்றும், அந்த பெண்ணின் செல்போன் நம்பரையும் பிளாக் செய்ததாகவும் கூறப்படுகிறது.

நகை, பணம் மோசடி

தன்னை திருமணம் செய்து கொள்வதாக பணம், நகை உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு தன்னிடம் பேசாதது ஏன் என நடிகை கேட்டதற்கு, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என சுகுமார் சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ந்த துணை நடிகை, தன்னை ஏமாற்றிய நடிகர் சுகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார்.. பணத்தை திருப்பித் தருவதாக செக் தந்துள்ளார் சுகுமார். ஆனால் அது பவுன்ஸ் ஆகிவிட்டது. இப்போது துணை நடிகை மறுபடியும் புகார் தரவும், சுகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்குப் பிறகு கைது நடவடிக்கையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம் இல்லை, காமெடியும் இல்லை

இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, காதல் படத்தின் மூலமாக, அதுவும் அந்த படம் நன்றாக ஓடியதால்தான் சுகுமாரின் பெயர் வெளியே தெரிந்தது. அதற்கு பிறகும்கூட பெரிதாக சுகுமாருக்கு சம்பளம் இல்லை.. அதேபோல 2 படங்கள் எடுத்ததாக தெரிகிறது. அதுவும் உப்புமா படம் போல இருந்ததால், அதுவும் சரியாக போகல..

அதனால் இதுபோன்றவர்களுக்கு பணத்தேவை எப்போதுமே இருக்கும்.. சினிமாவை பொறுத்தவரை 2 படம் நடிச்சதாலேயே, எல்லாரும் நம்மள தேடி வருவாங்க என்று கணக்கு போட்டுட முடியாது.. அனைவருடனும் நட்பாக இருக்கணும், பப்ளிசிட்டி செய்வது டைரக்டர்களை சந்திப்பது என்று பல விஷயங்கள் இருக்கு.. நடிகர் சூரி ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும், தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக்கிட்டார்.. ஆனால், காமெடி நடிகராக சுகுமார் இருந்தாலும், காமெடியிலும் சரியாக மிளிரவில்லை..

லிவிங் டூ கெதர்

அதேபோல திருமணமான சுகுமார், துணை நடிகையுடன் 3 வருடம் லிவிங் டூ கெதர்.. வாழ்ந்துள்ளார்.. தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, துணை நடிகையை திருமணம் செய்வதாக கூறியிருக்கிறார். ஆனால், சுகுமாரை ஏன் முன்னமே துணை நடிகை கண்காணிக்கவில்லை, கண்டிக்கவில்லை. குடும்பத்தை பற்றியெல்லாம் அந்த துணை நடிகை ஏன் அவரிடம் விசாரிக்கவில்லை?

ஏற்கனவே திருமணமானது தெரிந்தாலும், சிலர் 2வது மனைவியாக ஒப்புக் கொள்ள சம்மதிப்பார்கள். சாவித்திரி அப்படித்தான் நினைத்தார்.. முதலில் ஜெமினிக்கு திருமணமாகவில்லை என்று நினைத்து, பிறகு உண்மை தெரிந்ததுமே, 2வது மனைவியாக வாக்கப்பட முடிவு செய்தார்.. ஆனால் கல்யாணத்துக்கு பிறகுதான் தெரிந்தது, தான் 3வது மனைவியாக வந்துள்ளோம் என்று.

பெண்ணின் வாழ்க்கை

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக சுகுமார் சொன்னாலும், அது ஒரு பெண்ணின் வாழ்க்கையை இன்னொரு பெண் கெடுப்பதாகத்தானே அர்த்தம்? அதாவது மனைவியை விவாகரத்து செய்வதற்கு ஒரு பெண்ணே இங்கு தூண்டுதலாக இருந்திருக்கிறார்.. மொத்தத்தில் சுகுமார் இந்த துணை நடிகையை பயன்படுத்தி கொண்டுவிட்டார்.
இதற்கெல்லாம் காரணம், பொருளாதார வீழ்ச்சியும், சரியாக படங்களில் வாய்ப்புகளும் இல்லாததும்தான்..
இப்போது பெண் வன்கொடுமை, மோசடி, வழக்குகள் சுகுமார் மீது பாய்ந்துள்ளது.. இதுபோக தாலி கட்டிய மனைவி புகார் தந்தால், அதுவும் சுகுமாருக்கு சிக்கலாயிரும்.

2 பெண்களின் வாழ்க்கை

படங்கள் வாய்ப்பும் இல்லை, மனைவியை விவாகரத்தும் செய்ய முடியல.. மனைவி ஏற்கனவே இருக்கும்போது, இன்னொரு பெண்ணிடம் வாழ நினைத்து, அவரிடமே பணம், நகை வாங்கி செலவு செய்யும் நிலைமைக்கு சென்றுள்ளார்..

இப்படி தேவையில்லாமல் தானும் சிக்கி, தேவையில்லாமல் 2 பெண்களின் வாழ்க்கையையும் கெடுத்துள்ளார் சுகுமார். துணை நடிகையிடம் வாங்கிய பணத்தை திருப்பி தந்தாலே, பிரச்சனை முடிந்துவிடும்.. அவரும் வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வார். இதற்கு நடுவில் மனைவியும் சுகுமார் மீது கேஸ் தந்தால் சிக்கல்தான்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+