உடைந்த ஜோதிகா.. மீண்டும் பழைய ரூட்டில் சபாஷ்.. மாசாணி அம்மன் கோவில் மிளகாய் தூளுடன் சூர்யா: பிரபலம்
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் 'கருப்பு'. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கருப்பு' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.. இந்த படம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து பத்திரிகையாளர் வெங்கடேஷ் சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார்..
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், சூர்யாவுக்கு இந்த கடைசி 6 வருடங்கள், மோசமான காலகட்டமாகவே நான் நினைக்கிறேன்..

தமிழில் மட்டுமே சூர்யா நடித்து கொண்டிருந்தபோது, அவருடைய ரேஞ்சே வேறு மாதிரி இருந்தது.. மும்பையில் ஜோதிகா செட்டில் ஆனதுமே, சூர்யாவும் மும்பை சென்று செட்டிலாக நேரிட்டது.. வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறந்துவிட்டு, மும்பைக்கு சென்றதுமே ஜோதிகாவின் அறிக்கைகள், சற்று காட்டமாக இருந்தன..
தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம்
தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஜோதிகா முன்வைத்தார்.. இப்படி ஜோதிகா சொல்லியிருக்கக்கூடாது.. குஷி, மொழி, சந்திரமுகி, 36 வயதினிலே, இவைகளில் எல்லாம் ஜோதிகாவுக்கு முக்கியத்துவம் நிறையவே இருந்தது..
தமிழ் துறையிலிருந்து, அடுத்தக்கட்டத்துக்கு சூர்யாவை கொண்டு செல்ல ஜோதிகா விரும்புகிறார்.. எனவே, மும்பையில் படங்களை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டார். அதுக்காக தமிழை மட்டந்தட்டிவிட்டு இந்திக்கு போக வேண்டும் என்று நினைக்கக்கூடாது.. அதன் விளைவுகளை தற்போது ஜோதிகா உணர்ந்துவிட்டார்.
2 படங்களுமே தோல்வி
ஆனால், சூர்யா இந்தியில் படத்தை தயாரித்து, அக்ஷய் குமாரை வைத்து எடுக்கப்பட்ட படம் படுதோல்வியை தழுவியது.. 2 படங்களுமே தோல்வியடையவும், சூர்யா-ஜோதிகாவுக்குள் அதிருப்தி வெடிக்கிறது.
படுதோல்விக்குபிறகு, மும்பையில் அதற்கு மேல் இருக்க முடியாது என்கிற நிலைமை சூர்யாவுக்கு வந்தது.. கங்குவா படமும் இங்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து பேசப்பட்டது. ரெட்ரோ படமும் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகவில்லை என்றாலும், ஓரளவு சூர்யாவுக்கு இந்த படம் பேசப்பட்டது. எனவே, ஹிட் தரவேண்டிய கட்டாயத்துக்கு சூர்யா ஆளானார்..
ஈசிஆரில் மிகப்பெரிய பங்களா
இதற்குமேலும், மும்பையிலிருந்தால் சரிபட்டுவராது என்று நினைத்து, சென்னைக்கு வரவேண்டியிருந்தது.. சிவக்குமார் வீட்டிலும் தங்க முடியாது என்பதால், ஈசிஆரில் மிகப்பெரிய பங்களா கட்டி வருகிறார்கள்.. ஜோதிகாவுக்காகவே, இந்த வீட்டை சூர்யா கட்டி வருவதாக சொல்கிறார்கள்..
தமிழ்ப்படங்களின் கதையை மீண்டும் ஜோதிகா கேட்டு வருகிறாராம்.. ஒருவேளை ஜோதிகா மும்பை செல்லாமல் இங்கேயே இருந்திருந்தால், மூக்குத்தி அம்மன் 2 படம் ஜோதிகாதான் நடித்திருப்பார்..
இந்த நேரத்தில்தான், கருப்பு படத்தின் கதையை கேட்டார் சூர்யா.. அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. கருப்பண்ணசாமியை வைத்து எடுக்கப்படும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் என்கிறார்கள்.. சென்டிமென்ட், கண்டண்ட் உட்பட அனைத்துமே இந்த கிராமிய படத்தில் இருக்கிறது
மாசாணியம்மன் மிளகாய் பொடி
இந்த படத்தில் சூர்யாவை நான் வேறுமாதிரியாக காட்ட போகிறேன் என்று ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே சொல்லியிருந்தார்.. அதன்படியே இன்று வெளியாகியிருக்கும் கருப்ப டிரெயிலரே வித்தியாசமாகவே உள்ளது.. மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கர் தீயாய் விளையாடியிருக்கிறார்..
இந்த படத்தை துவங்குவதற்கு முன்பு, சூர்யா ஜோதிகா மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.. வழக்கமாக, மாசாணியம்மன் கோவிலில் விசேஷமே மிளகாய் பொடிதான்.. மிகவும் சக்தி வாய்ந்தது.. எனவே, இது சம்பந்தமான காட்சியும், கருப்பு படத்திலும் வைக்கப்பட்டுள்ளது.. இந்த சென்டிமென்ட் தமிழகத்தில் அனைவராலும் வரவேற்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications