ஜோதிகாவையே மொத்தமா மறைச்சிட்டாங்களே.. சிவாஜி கணேசனின் சொத்துக்களை ரஜினி மீட்டு தந்தாரா? பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரமுகி படம் மூலம் ரஜினிகாந்த், சிவாஜி குடும்பத்துக்கு ஏற்பட்ட கடனை அடைத்தார் என்ற பல்வேறு திரைப்பிரபலங்கள் சொல்லிவரும் நிலையில், இதனை டாக்டர் காந்தராஜ் மறுத்துள்ளார். அத்துடன், சில முக்கிய தகவலையும் சந்திரமுகி படம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

Behindcinema என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த தமிழா தமிழா பாண்டியன், "சிவாஜி மறைவுக்கு பிறகு, அந்த குடும்பம் கடன் தொல்லையில் சிக்கியது. சிவாஜி புரொடக்‌ஷன்ல நிறைய இழப்பு, வந்தது.. எனவே, இதனை ரஜினியிடம் பிரபு புலம்பியிருக்கிறார்.

Television Sivaji ganesan Jyothika

"கவலைப்படாதே, உன் அப்பா எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்.. உனக்கு எவ்வளவு வேணும்? கடன் அடைக்க 200 கோடி போதுமா? என்று கேட்டு அப்படி ரஜினியால் கொடுக்கப்பட்ட கால்ஷீட்தான் சந்திரமுகி.

சிவாஜி மீது ரஜினிகாந்த் மதிப்பு

அப்படி உதவி சிவாஜி புரொடக்‌ஷனில் கிடைத்த லாபத்தை வைத்துதான், சிவாஜி குடும்பத்துக்கு ஏற்பட்ட கடன் அடைக்கப்பட்டது. அந்தவகையில், சொத்துக்களை எல்லாம் மீட்டு தந்தவர் ரஜினிகாந்த்தான்" என்று கூறியிருந்தார்.

அதேபோல, மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய சேனலில் நேற்றைய தினம் பேசும்போது, "சிவாஜி குடும்பம் மீது தமிழ் சினிமா நடிகர்களுக்கு நிறைய மதிப்பு என்றுமே உள்ளது.. சில முக்கியமான நடிகர்களிடம் சென்று, நிதி சிக்கலை சொல்லி, உதவி கேட்டிருந்தால், நிச்சயம் அவர்கள் உதவியிருப்பார்கள். சந்திரமுகி படத்தில் ரஜினி மாதிரி, பல பேர் முன்வந்து உதவி செய்திருப்பார்கள்" என்று கூறியிருந்தார். இதையேதான் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவும், சந்திரமுகி படத்தில் ரஜினி கால்ஷீட் தந்து, உதவியதாக கூறியிருந்தார்.

கண்ணதாசன் - புலமைப்பித்தன்

ஆனால், இதனை மறுத்து பேசியிருக்கிறார் மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ்.. King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் டாக்டர் காந்தராஜ், "மீடியாவுக்கும் ரஜினிக்கும் உள்ள உறவுதான் இதற்கெல்லாம் காரணம்.. ஒரு விழாவில் நான் பங்கேற்றபோது, எனக்கு பக்கத்தில் பாடலாசிரியர் புலமைப்பித்தன் உட்கார்ந்திருந்தார்.. அப்போது மேடையில் பேசிய என்னுடைய நண்பர், "எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்று கண்ணதாசன் அவர்கள் எழுதினார் என்றார்.

உடனே புலமைப்பித்தன் என்னை திரும்பி பார்த்தார்.. காரணம், அந்த பாட்டை எழுதியதே புலமைப்பித்தன்தான்.. உடனே நான் எழுந்து, "இந்த பாட்டை எழுதின புலவர் இங்கே உட்கார்ந்திருக்கார்" என்றேன்.

சந்திரமுகி வெற்றி விழா

ஏனென்றால், எல்லா நல்ல பாட்டும் கண்ணதாசன் தான் எழுதினார் என்று சொல்லிவிடுகிற மாதிரி, சந்திரமுகி படத்துக்கு காரணமே ரஜினிதான் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் நடித்தார்.. அவ்வளவுதான். மற்றபடி ரஜினிக்கும், அந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை.. அந்த படத்தின் வெற்றி அனைத்துமே சிவாஜி புரடக்‌ஷனையே சாரும்.

பிரபு அந்த படத்தில் நடித்தபோது, அதில் ரஜினியை புக் செய்தார்.. வழக்கமாக, ரஜினி நடிக்கும் படங்களில், அவரது கேரக்டரில்தான் படத்தின் பெயர்கள் வைக்கப்படும்.. அண்ணாமலை, படையப்படா என்று பெயர்கள் இருக்கும். ஆனால், இதில், சந்திரமுகி என்று ஹீரோயின் டைட்டிலை வைத்தார்கள்.. அந்த படத்தின் வெற்றிக்கு காரணமே, ஜோதிகாவும், வடிவேலுவும்தான்.,

ஜோதிகா, வடிவேலு

ஜோதிகா நடிப்பு இல்லையென்றால், சந்திரமுகி படமே காலி. ஆனால், சாமர்த்தியமாக, அந்த படத்தின் வெற்றி விழாவுக்கு ஜோதிகாவையே கூப்பிடல.. வடிவேலுவையும் கூப்பிடல.. ஏனென்றால் வெற்றி விழாவில் பேசுபவர்கள் எல்லாம், வடிவேலு, ஜோதிகாவை பற்றிதான் புகழ்ந்து பேசுவார்கள். இது ரஜினிக்கு வருத்தமாக இருக்கும்.. ஜோதிகா எங்கே என்ற கேட்டதற்கு, "அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை" என்று சொல்லிவிட்டார்கள். இப்படி ரஜினி எல்லாரும் சேர்ந்து தூக்கிவிட்டாங்க.. ரஜினிக்கு வாய்ப்பு தந்ததே பிரபுதான்.

சிவாஜிக்கு பொருளாதார சிக்கல் எழ காரணம், அவர் அரசியல் கட்சியை துவங்கியதுதான்.. பலரது தூண்டுதல் பேரில் அந்த கட்சியை ஆரம்பித்தார்.. கடைசியில் தஞ்சாவூரில் இருந்த சில சொத்துக்களை இழக்கும் நிலைமையும் சிவாஜிக்கு ஏற்பட்டது" என கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+