உடைந்த சிவகுமார் குடும்பம்? மயிலாப்பூரில் ஜோதிகா? தமிழ் சினிமாவை மட்டம் தட்டி பேசுவது சரியா: பிரபலம்
சென்னை: ஜோதிகாவுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது தமிழ் படங்கள்தான். ஆனால், இன்று மும்பையில செட்டிலாகிவிட்டதால், தமிழ் சினிமாவை மட்டம் தட்டி பேசுவது நியாயமானதாக தெரியவில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், சிம்ரனை ஆண்ட்டி என்று விமர்சித்தது ஜோதிகாவாக இருந்தால், அந்த விமர்சனம் சரி கிடையாது என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிம்ரன் - ஜோதிகா மோதல் ஏன் நடந்தது? சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சிம்ரனுக்கு ஆதரவு தருவது ஏன் என்பது குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற சிம்ரன், "என்னுடைய சக நடிகைக்கு ஒருமுறை, உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என்று மெசேஜ் செய்தேன். உடனே அவர் ஆண்ட்டி ரோலில் நடிப்பதைவிட இந்த ரோல் சிறந்தது என்று எனக்கு பதில் அனுப்பினார். அவரது பதில் எனக்கு ஷாக்கிங்காக இருந்தது..

என்னைப் பொறுத்தவரை டப்பா ரோல்களில் நடிப்பதைவிடவும் ஆண்ட்டி ரோலில் நடிக்கலாம்" என்று சிம்ரன் பேசியிருந்தார். சக நடிகை என்று சொன்னாரே தவிர, எந்த நடிகையின் பெயரையும் சிம்ரன் குறிப்பிடவில்லை.. டப்பா கார்ட்டெல் என்ற வெப்சீரிஸில் நடித்திருப்பது ஜோதிகாதான், அதனால் சிம்ரன் சொல்வது அவரது சக நடிகை ஜோதிகாவைத்தான் என்று சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டும், சிம்ரனுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.
பவர்புல் வசனம்
இந்நிலையில், Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திண்டுக்கல் வெங்கடேசன், "சிம்ரன் எந்த அளவுக்கு மனசு நொந்து போயிருந்தால், இப்படியெல்லாம் பேசியிருப்பாங்க? குட் பேட் அக்லி படத்தில் 4 சீன் வந்தாலும், பட்டைய கிளப்பிட்டார் சிம்ரன்.. அஜித் படம் என்பதுடன், பவர்புல் வசனம் என்பதால், உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.. இந்த படம் அவருக்கு பாசிட்டிவ் பெயரை பெற்றுத்தந்துள்ளது.. இப்போது நிறைய படங்களில் சிம்ரன் கமிட் ஆக துவங்கியிருக்கிறார்.
சிம்ரன் தனக்கு பிடித்த நடிகையிடம், ஒரு குறிப்பிட்ட படத்தின் பெயரை சொல்லி, அந்த படத்தில் நன்றாக செய்திருந்தீர்கள், ஆனால், அதுபோன்ற கேரக்டரில் நடித்திருக்க வேண்டுமா? என்று கேட்டு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. நல்ல எண்ணத்தில்தான் அந்த நடிகைக்கு இப்படி மெசேஜ் அனுப்பியிருக்கிறார் சிம்ரன்..
ஆண்ட்டி ரோல்
ஆனால் அந்த நடிகையோ, அதை தவறாக புரிந்துகொண்டு, "நீங்க ஆண்ட்டி ரோல் பண்ணுவதைவிட நான் நடித்தது மேல்" என்று பதிலடி தந்திருக்கிறார்.. இது சிம்ரனுக்கு அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் தந்துள்ளது. இந்த சம்பவத்தைதான், சமீபத்தில் நடந்த விழாவில் சிம்ரன் மனக்குமுறலுடன் வெளிப்படுத்தினார். அத்துடன், டப்பா நடிகை என்றும் அந்த நடிகையை மறைமுகமாக தாக்கி பேசினார் சிம்ரன்.
அந்த நடிகை யார் என்று தெரியவில்லை.. சிலர் லைலா என்றார்கள்.. ஆனால், டப்பா ரோல் என்று சிம்ரன் சொன்னது ஜோதிகாவைதான் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.. இதற்கு காரணம், ஜோதிகா மும்பைக்கு சென்று செட்டில் ஆனதிலிருந்தே, தமிழ் சினிமாவை தாக்கி பேசி வருகிறார்.. தமிழில் ஹீரோவுக்கு தரும் முக்கியத்துவம் ஹீரோயினுக்கு தரப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டி வருகிறார்.
கங்குவா படம் தோல்வி
கங்குவா படம் தோல்வியின்போது, ரசனை இல்லாத மக்கள் என்று கோபமாக அறிக்கை வெளியிட்டார்.. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், ஜோதிகா மீதான விமர்சனங்கள் அதிகரித்தபடி உள்ளன. ஆனால், ஜோதிகா ஒரு விஷயத்தை நினைத்து பார்க்க வேண்டும். சிம்ரன் அன்று டாப்பில் இருந்தபோது ஹீரோயினாக நடித்த வாலி படத்தில், புதிதாக அறிமுகமாகி கெஸ்ட்ரோல் பண்ணியிருந்தார் ஜோதிகா..
சிம்ரன் நினைத்திருந்தால், அந்த கேரக்டர் தேவையில்லை என்று முதல்படம் செய்யும் எஸ்.ஜே. சூர்யாவிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.. அதேபோல, சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் ஜோடியே சிம்ரன் தான்.. சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரை சிம்ரன்தான் நடிக்கவேண்டியது. ஆனால், பர்சனல் விஷயங்களுக்காக அதில் சிம்ரனால் நடிக்க முடியாமல் போனதால், ஜோதிகா நடிக்க வேண்டியதாயிற்று. இதிலிருந்தே சிம்ரனின் முக்கியத்துவம் தெரிகிறது.
சிம்ரனின் முக்கியத்துவம்
அதேபோல, முக்கிய கேரக்டர்களை ஹீரோயின்களுக்கு தருவதில்லை என்று ஜோதிகா சொல்லுவதும் தவறு.. சந்திரமுகி ஹீரோயின் கேரக்டர் படம்தானே? முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையா? மொழி படத்தை எடுத்துக் கொண்டால், அதுவும் ஹீரோயினுக்கான படம்தானே? இப்படி ஜோதிகாவுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது தமிழ் படங்கள்தான். ஆனால், இன்று மும்பையில செட்டிலாகிவிட்டதால், தமிழ் சினிமாவை மட்டந்தட்டி பேசுவது நியாயமானதாக தெரியவில்லை.
சென்னை அப்பார்ட்மென்ட்
இன்றுவரை சிம்ரன் டீசன்ட் ரோல்களில்தான் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால், ஜோதிகா வாயில் சிகரெட் வைத்து பிடிக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஜோதிகாவின் அம்மாவே சிம்ரனின் ரசிகைதானாம்.. சிம்ரனிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள் என்று ஜோதிகாவிடமே, நிறைய அட்வைஸ் தந்திருக்கிறாராம்.
அதேபோல, மும்பையில் இருக்கும் ஜோதிகா இன்று சென்னைக்கு வந்தாலும்கூட, மயிலாப்பூரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில்தான் தங்குகிறார்.. சிவக்குமார் வீட்டுக்குகூட வருவதில்லை.. முற்றிலுமாக அவர் விலகி சென்றுவிட்டார்.. தமிழ் சினிமாவுக்கு எதிராக ஜோதிகா பேசியதால்தான், அவருக்கு எதிரான கமெண்ட்கள் இப்போது திரும்பி வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications