தேவா செய்த புண்ணியத்தால தான் இப்படி இறப்பு.. கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்! கேஎஸ் ரவிக்குமார் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனிசைத் தென்றல் தேவா மறைந்து சில நாட்கள் கடந்துவிட்டாலும், அவர் இனி இல்லை என்பதை இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது இசையால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தேவாவின் மறைவு, அவருடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், தேவாவின் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் பேசியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேட்டி

தேவாவின் மறைவு குறித்து மேடையில் பேசிய கே.எஸ். ரவிக்குமார், தேவா தனது தம்பி சபேஷ் மகன் ஹாஸ்பிடலில் இருப்பதைப் பார்க்க செல்வதற்காகத் தயாராகியிருக்கிறார். காலையில் ஷேவ் செய்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்த அவர், காபி கேட்டிருக்கிறார். ஆனால், அந்த நேரத்திலேயே எதிர்பாராத விதமாக அவருடைய உயிர் பிரிந்து விட்டது.

Deva KS Ravikumar Tamil Cinema Music Composer

தேவாவின் கடைசி நிமிடம்

இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கும்போதே மனதுக்கு வேதனையாக இருக்கிறது. மருத்துவமனையில் இருக்கும் தம்பி மகனை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைத்த ஒருவர், அதற்காகத் தயாராகி கொண்டிருந்தபோதே உயிரிழந்துவிட்டார் என்பது குடும்பத்தினருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

தேவா செய்த புண்ணியம்

தேவா நிறைய புண்ணியம் செஞ்சு இருக்கிறார், அதனால் தான் அவருக்கு இப்படி ஒரு இறப்பு வந்திருக்கிறது. அவர் கடைசி நேரத்தில் படுக்கையில் படுத்து யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. குடும்பத்தினருக்கு சுமையாகவும் இருக்கவில்லை. நிம்மதியாக உடனே உயிர் பிரிந்து இருக்கிறது, இது நல்ல மரணம், எல்லோருக்கும் கிடைக்காது. ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கு இது பெரிய வேதனையாக இருக்கும். அவருடைய நினைவுகளை குடும்பத்தினரால் மறக்க முடியாது அதிலிருந்து வெளியே வருவதற்கு கஷ்டம் தான். வாழ்க்கையில் யாருக்கு எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது என்று உருக்கமாக கே எஸ் ரவிக்குமார் பேசி இருக்கிறார்.

ஒருவர் மறைந்துவிட்டால் அவருக்கு ஏற்படும் துன்பம் முடிந்துவிடலாம். ஆனால், அவருடன் வாழ்ந்தவர்களுக்கு அவர் இல்லாத ஒவ்வொரு நாளும் அந்த இழப்பை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். வீட்டில் அவருடைய குரலை கேட்க முடியாது, வழக்கமாக பேசும் இடத்தில் அவரை பார்க்க முடியாது, ஒரு சிறிய விஷயத்தைக்கூட அவரிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. இப்படி அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிடம்தான் நெருக்கமானவர்களின் மனதில் ஆழமான வலியை ஏற்படுத்தும்.

தேவாவுடன் பழகியவர்களுக்கும் அவருடைய இசையில் வளர்ந்த ரசிகர்களுக்கும் இந்த இழப்பு எளிதில் மறக்கக்கூடிய ஒன்றல்ல. கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்த கடைசி நேரத் தகவல்கள், தேவாவின் மறைவு குறித்த சோகத்தை இன்னும் ஆழமாக உணர வைத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+