Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலி கூலி? நிரூபித்த நடிகர் சௌபின் சாஹிர்.. வின்டேஜ் ரஜினிகாந்த் அதே லுக்! அடுத்த ஹீரோ அன்பறிவு தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்துள்ள படம் கூலி. பிரபல நடிகர்கள், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் பலரும் கூலி படத்தில் நடித்துள்ளனர்.. அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டாக தயாரித்துள்ளது. இன்று கூலி படம் ரிலீஸாகி உள்ள நிலையில், இப்படத்தை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, 74 வயதில் சூப்பராக நடித்துள்ளார்.. மாஸான ரஜினியை கூலியில் பார்க்கலாம்..

Television Coolie actor Soubin Shahir Anbarivu

மொத்த படத்திலுமே ரஜினியை கொண்டாடுவதுபோல நடித்துள்ளார்.. விண்டேஜ் ரஜினி அதாவது பிளாஷ்பேக் ரஜினியை, பிரம்மாதமாக De-aging செய்திருக்கிறார்கள்.. இதற்கு முன்பு லியோவில் De-aging செய்திருந்தாலும், அது அவ்வளவாக பொருந்தவில்லை என்ற பேச்சு இருந்தது. ஆனால் இதில் 80's ரஜினியை படம் முழுக்க கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். எனர்ஜிடிக் பெர்பார்மன்ஸ் செய்துள்ளார்.. எல்லா சீன்களையுமே தெறிக்க விட்டுள்ளார்.

லோகேஷ் + ரஜினி படம்

லோகேஷ் படமாகவும், ரஜினி படமாகவும் கூலி உள்ளது.. சூப்பர் ஸ்டாரை எங்கியுமே மிஸ் செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.. முதல் 20 நிமிடம் கதை மெதுவாக நகர்வது போல இருந்தாலும், அதற்குபிறகு கதைக்களமே மாறி,
அதிரிபுதிரியான ஸ்கிரீன்பிளே நகர்கிறது.. இறுக்கமான ஸ்கிரீன்பிளே உள்ளது..

2 மணி நேரம் 50 நிமிஷமாக இருந்தாலும், கடைசிவரை டெம்போ குறையாமல் படத்தை எடுத்து சென்றுள்ளார்கள். கமலுக்கு விக்ரம் கிடைத்ததுபோல, ரஜினிக்கு கூலி படம் நிச்சயம் கொண்டாடப்படக்கூடிய படமாக இருக்கிறது..

சௌபின் அபார நடிப்பு

கூலி படத்தை பேச வேண்டுமானால், நடிகர் சௌபின் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது..மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்.. காமெடியனாக வரப்போகிறார் என்று அனைவரும் கணித்திருந்தால், பட்டாசு தெறிப்பது நடித்துள்ளார் சௌபின்..

முதலில் இந்த கேரக்டரில் பகத் பாசில் நடிப்பதாக இருந்தது.. ஆனால் அவர் நடித்திருந்தாலும்கூட, இந்த அளவுக்கு நடித்திருப்பாரா தெரியவில்லை.. காரணம், பகத் பாசில் இதே போன்று பல படங்களில் நடித்துவிட்டார்.. அப்படியே நடித்திருந்தாலும் ஒரே டெம்பிளேட்டிற்குள் சென்றிருக்கும்.. ஆனால் சௌபின் நடிக்கும்போது, வித்தியாசமாக இருந்தது.

ரகுவரனுக்கு பிறகு நடிக்கக்கூடிய வில்லன்கள் யாரும் தமிழ் சினிமாவில் இல்லை.. எனவே ரகுவரன் இடத்தை சௌபின் நிச்சயம் பிடிப்பார். தமிழ் சினிமாவில் இனி முக்கிய வில்லனாக சௌபின் இருப்பார்.

நாகர்ஜூனா ஸ்டைலிஷ் வில்லன்

அதேபோல நாகர்ஜூனா, ஸ்டைலிஷான வில்லனாக செய்திருக்கிறார்.. உபேந்திரா, அமீர்கான் வரும் காட்சிகள் பிரம்மாதமாக இருக்கிறது.. இத்தனை நடிகர்கள் இருப்பதால், ரஜினிக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், படம் முழுக்க ரஜினியை கொண்டு வந்துள்ளதுடன், மற்ற பிரபலங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ரஜினிக்கு அடுத்த ஹீரோ லோகேஷ் கனகராஜ் என்றால், லோகேஷூக்கு அடுத்த ஹீரோ அன்பறிவு என்றே சொல்லலாம்.. சண்டை காட்சிகள் அவ்வளவு பிரம்மாதமாக உள்ளது.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு அன்பறிவு சண்டைப்பயிற்சி செய்துள்ளார்.. தமிழ் படத்தை, ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிரீஷ் கங்காதரன் கேமரா பணியை சிறப்பாக செய்துள்ளார்.. மொத்தத்தில் விக்ரம் படம் எப்படி வெற்றியடைந்ததோ, அந்த அளவுக்கு கூலி படம் பேசப்படும்....

ஹாலிவுட் ரேஞ்சுக்கு கூலி

ரஜினிக்கு அடுத்த ஹீரோ லோகேஷ் கனகராஜ் என்றால், லோகேஷூக்கு அடுத்த ஹீரோ அன்பறிவு என்றே சொல்லலாம்.. சண்டை காட்சிகள் அவ்வளவு பிரம்மாதமாக உள்ளது.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு அன்பறிவு சண்டைப்பயிற்சி செய்துள்ளார்.. தமிழ் படத்தை, ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிரீஷ் கங்காதரன் கேமரா பணியை சிறப்பாக செய்துள்ளார்..

நீண்ட நாட்களுக்கு பிறகு சத்யராஜ் நடிப்பு அருமையாக இருந்தது. ஸ்ருதிஹாசன் தன்னுடைய படங்களில் கிளாமராக நடிப்பார்.. ஆனால், தன்னாலும் நடிக்க முடியும் என்று கூலியில் நிரூபித்துள்ளார். பின்னணி இசையில் அனிருத் சிறப்பாக செய்துள்ளார்..

கூலி படத்திலும் வன்முறை இருந்தாலும், மற்ற படங்களை போல அதிகமாக இல்லை.. பிறகு எதுக்காக A certificate தந்தார்கள் என்று தெரியவில்லை.. குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய படம்தான் கூலி.. மொத்தத்தில் கமலுக்கு விக்ரம் படம் எப்படி வெற்றியடைந்ததோ, அந்த அளவுக்கு ரஜினியின் கூலி படம் பேசப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+