Kaantha OTT: துல்கர் சல்மானின் “காந்தா” ஓடிடிக்கு வந்தாச்சு! எதில், எப்போ பார்க்கலாம்?
சென்னை: நடிகர் துல்கர் சல்மான், பாக்கியஸ்ரீ போஸே நடிப்பில் காந்தா திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் இப்போது ஓடிடிக்கு வரப்போகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மலையாள நடிகரான துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா ரசிகர்களை கவரும் நட்சத்திரமாக மாறி இருக்கிறார். அவருடைய சமீபத்திய படம் தான் காந்தா. இந்த திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை. ஆனாலும் விமர்சனங்கள் கலவையாகவே இருந்தது.

செல்வமணி செல்வராஜ் இயக்கிய காந்தா படத்தில் துல்கர் சல்மானுடன், பாக்கியஸ்ரீ கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ராணா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்திருக்கின்றனர். 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் இடையே உருவாகும் ஈகோ மோதலே இந்த படத்தின் கதையாக இருக்கிறது.
இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல பாராட்டை பெற்றது. ஆனால் வசூல் தான் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை. இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடித்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கொடுத்தது. ஆனால் இந்த படம் அவருக்கு வசூலில் சரிவு தான் கொடுத்தது. இந்த படம் உலக அளவில் சுமார் 30 கோடி வசூலை மட்டுமே பெற்று வந்தது. இந்தியாவில் 20 கோடி வசூல் செய்ததால் முதலீட்டில் பாதியை கூட எடுக்க முடியாத சூழல் உருவானது.
இதனால் காந்தா திரையரங்கு வர்த்தகத்தில் தோல்வியாக பார்க்கப்படுகிறது. லக்கி பாஸ்கர் படம் துல்கர் சல்மானுக்கு பெரிய ஹிட்டு கொடுத்தது. அதிக அளவில் வசூலும் பெற்றது. அந்த படத்திற்கு பிறகு இந்த படம் வெளியானதால் இதைப் பற்றிய எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த படத்திற்காக துல்கர் சல்மான் பிரமோஷன்களிலும் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் இந்த படம் சருக்கலை சந்தித்து விட்டது. இந்த நிலையில் இந்த படம் ஓடிடி உரிமையை netflix வாங்கி இருக்கிறது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications