Kaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க!
சென்னை: மனித இனத்துக்கு குரல் என்பது உண்மையில் காற்றின் மொழிதான். நமது உடலின் பிராண சக்தியோடு நாம் பேச முயற்சிப்பதுதான் குரலும், பேச்சும்.
ஆனால், இங்கு கண்மணிக்கு பேச்சு வரவில்லை... பொம்பளைப் பிள்ளை வேற. இதனால் பெற்ற அப்பாவும், பாட்டியும் அவளை வெறுக்கறாங்க. இவங்களுக்கு பிடிச்சது ஆண் பிள்ளையும், முதலில் பிறந்த பெண் பிள்ளையும்தான்.
புதுசா வேலைக்கு போனா கண்மணி குழந்தை முகத்தில் விழிச்சுட்டு போனதனுனால வேலை கிடைக்காதாம். இப்படி பல விஷயத்துல பொம்பளைப் பிள்ளையை கொடுமை பண்ணி போரடிக்கறாங்க.

குழந்தையை கருவில்
குழந்தையை கருவில் அழிச்சுட முடிவு செய்து மருந்து கொடுத்தும் கண்மணி நல்ல படியாக பிறந்துவிடுகிறாள். மருந்து கொடுத்ததில் எதுவும் பிரச்சனை வந்திருச்சா என்று கூட குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சோதனை செய்யாமல் குழந்தைக்கு பேச்சு வராதுன்னு ஒரே வார்த்தையில் சொல்லி அனுப்பறாங்க..
செல்லம் ஆண் குழந்தை
புதுசா வேலை கேட்டு போகப்போறே என் பேரன் முகத்துல முழிச்சுட்டு போடான்னு அம்மா சொல்ல, எங்கே அவன்னு தேடிகிட்டு வெளியில் வர்றார் அப்பா. பார்த்தால் பவம் பேச முடியாத ராசி இல்லைன்னு சொல்ற கண்மணி எதிரில் வர்றா. பாவ,ம் குழந்தை பயத்தில் பால் கேனை கூட கீழே போட்டுட்டு நிக்குது.

கிடைச்சுருது கிடைக்கலை
வேலை கேட்டுப்போன பெரிய கம்பெனியில் வேலை இல்லேன்னு சொல்லிடறாங்களாம். எல்லாம் அவ முகத்தில் முழுச்சதுன்னு சொல்லிகிட்டே வர. அதே கம்பெனியின் முதலாளி அம்மாவின் கார் வழியில நின்னு போகுது. அதை இவன் சரி செய்ய, இவங்க சிபாரிசில் அதே கம்பெனியில் வேலை கிடைக்குது.
அப்போது சொல்றான்.. என் பையன் பிறந்த நேரம்தான் என்னை வாழ்க்கையில் உயர உயர கொண்டு போகுதுன்னு சந்தோஷப்படறான். இதை பார்க்கையில் நமக்கு கஷ்டமா இருக்கு.இப்படிப்பட்ட குழந்தைகளை வெறுக்கும் பெற்றோர் இன்னுமா இருக்கிறார்கள்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications