காதலிக்க நேரமில்லை செம.. பெரிய பாய் கலக்கிட்டாரு.. ஜெயம் ரவி சோகமாகவே இருக்காரே: பிரபலம் தந்த ரிவ்யூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்திருக்கும், காதலிக்க நேரமில்லை படம் சிறப்பாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். நடிப்பு ராட்சசி என்று சொல்லக்கூடிய நித்யா மேனனுக்கு, எந்த கேரக்டர் தந்தாலும், அந்த கேரக்டராகவே மாறிவிடுகிறார் என்றும் கூறியிருக்கிறார்.

Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "ஜெயம் ரவி தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருக்கிறார்.. தற்போது நடித்து வெளிவந்திருக்கும் காதலிக்க நேரமில்லை படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வந்தது.

Television Kadhalikka Neramillai Jayam Ravi

இதற்கு காரணம், கிருத்திகா உதயநிதி இந்த படத்தை டைரக்ட செய்திருக்கிறார்.. ஏஆர் ரஹ்மான் பாடல் ஒன்று ஏற்கனவே இந்த படத்திலிருந்து ஹிட்டாகிவிட்டது. ஜெயம் ரவியின் பர்சனல் வாழ்க்கை பிரச்சனைகளை தாண்டி, இந்த படம் அவருக்கு கம்பேக் தரக்கூடும் என்று சொல்லப்பட்டது. இப்படி பலதரப்பட்ட காரணங்களால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்தபடியே இருந்தது. ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், யோகிபாபு, லால் என பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

கேம் சேஞ்சர்: மாற்றுத் திறனாளிகளுக்கான, விளிம்பு நிலை மக்களுக்கான மக்களை பற்றி வெளிவந்துள்ள படம் வணங்கான். அதேபோல, கேம்சேஞ்சர் படமும் வேற மாதிரியான கோணத்தில் உள்ளது.. 12 வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் மதகஜராஜா மற்றொரு கோணத்தில் உள்ளது. அதுபோல, இந்த காதலிக்க நேரமில்லை படமும் எலைட் மக்களுக்கான படமாக இருக்கிறது.

நடிகர், நடிகைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.. அதற்கேற்றவாறு அனைவருமே தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.. ஜெயம் ரவி, நித்யா மேனன் இருவருக்குமே நல்ல ரோல்..

பர்சனல் கதை: முதல்பாதி படம், ஜெயம்ரவியின் பர்சனல் கதையை டச் செய்வது மாதிரி இருந்தது.. அதனால்தானோ என்னவோ, படம் முழுக்க சோகமாகவே இருக்கிறார் ஜெயம் ரவி. நடிப்பு ராட்சசி என்று சொல்லக்கூடிய நித்யா மேனனுக்கு, எந்த கேரக்டர் தந்தாலும், அந்த கேரக்டராகவே மாறிவிடுகிறார். பிரம்மாதமாக நடித்திருக்கிறார்.

முதல் பாதி படத்தை பார்த்தால், என்றென்றும் புன்னகை சாயல் போல தெரிந்தாலும், 2வது பாகத்தில் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.. போர் எங்குமே அடிக்கவில்லை. டெக்னிக்கல் விஷயங்கள் மிகவும் அருமையாக இருக்கு.. கலர்டோன், கேமரா இப்படி எல்லாமே சூப்பரா இருக்கு.. அனைவரையும் உட்கார வைத்துவிடுகிறது இந்த படம்.

ரஹ்மான் இசை: எந்த படத்துக்கும் இசையை சூப்பராக தருவேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் பெரிய பாய் ஏஆர் ரஹ்மான்.. ஆங்காங்கே படம் சோர்வு தட்டும்போதெல்லாம ரஹ்மானின் இசையே தூக்கி நிறுத்துகிறது" என்றெல்லாம் கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+