விஜயால் தான் ரசிகர்கள் கெட்டு போறாங்க.. அஜித்தை பாருங்க, சந்தோசத்தில் ஷாலினி! வெளுத்து வாங்கிய நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு சேர்ந்து சென்றனர், அதனைத் தொடர்ந்து பரவும் மீம்ஸ்கள், கருத்துக்கள் ஆகியவை தொடர்ந்து விவாதத்தை கிளப்பி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் நடிகை காஜல் பசுபதி அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் விஜய் ரசிகையாக இருந்த காலத்தையும், தற்போது அவரை குறித்து உருவாகியுள்ள தனது எண்ணங்களையும் திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.

Vijay Trisha Kajal Pasupathi Ajith Kumar

நானும் முன்னாள் அணில் தான்

அந்த பேட்டியில் காஜல் பசுபதி பேசும்போது, "நானும் ஒருகாலத்தில் விஜய்யின் தீவிர ரசிகை தான். சொல்லப்போனால் நான் கூட ஒரு முன்னாள் 'அணில் குஞ்சு' என்று சொல்லிக்கொள்ளலாம். விஜய் ரசிகர்களை பொதுவாக 'அணில்கள்' என்று சொல்லுவார்கள். அதனால் தான் அவர் அப்படி சொல்கிறார். ஆனால் தற்போது அந்த ரசிகை மனநிலையிலிருந்து விலகி விட்டதாகவும் அவர் கூறினார்.

மகளிர் தின விழா பேச்சு சர்ச்சை

சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது கட்சியின் பெண் தொண்டர்களுடன் விஜய் கொண்டாடிய நிகழ்ச்சி குறித்து பேசும்போது தான் பல பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாக காஜல் பசுபதி கூறினார்.

அப்போது விஜய் பேசிய ஒரு கருத்தை அவர் குறிப்பிட்டார். அதாவது தனது குடும்ப விவகாரத்தை பார்த்து யாரும் கவலைப்பட வேண்டாம், அதெல்லாம் அவ்வளவு பொறுத்து இல்ல என்று பேசி இருந்தார். இதுபற்றி காஜல் பசுபதி கூறும்போது, "இத்தனை வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த மனைவி பற்றி இப்படி பேசுவது சரியா? ஒரு குடும்பத்தில் பிரச்சனை இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி இப்படி பொதுவாக பேசுவது பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

ரசிகை என்று சொல்லவே வருத்தமாக இருக்கிறது

மேலும் அவர் கூறியதாவது: "நான் ஒருகாலத்தில் அவருடைய ரசிகை என்று சொன்னேன். ஆனால் இப்போது அதை சொல்லவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவி இப்போது பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி இப்படி பேசலாமா? அப்படியானால் பெண்களுக்கு அவர் என்ன மரியாதை கொடுக்கப் போகிறார்? என்ன பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விஜய் - த்ரிஷா நிகழ்ச்சி விவகாரம்

அதே பேட்டியில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் சேர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி அவர் கூறும்போது, "சோசியல் மீடியாவில் எல்லோரும் திரிஷா ஏன் விஜய்யுடன் போனார் என்று கேட்கிறார்கள். ஆனால் யாரும் விஜய் ஏன் திரிஷாவை கூட்டிக் கொண்டு சென்றார் என்று கேட்கவில்லை," என்று அவர் கூறினார்.

முதல்வர் ஆக நினைக்கிறவருக்கு இது சரியா?

மேலும் அவர், "விஜய் தன்னை எதிர்காலத்தில் முதல்வராக பார்க்கிறாரே. அப்படி இருக்கும்போது நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எப்படி புரியப்படும் என்று யோசிக்க வேண்டாமா? இப்போது நாம் இப்படிச் செய்தால் அது சரியாக இருக்கும் தானா என்று அவர் நினைத்திருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

ரசிகர்கள் குறித்து கடும் விமர்சனம்

விஜய் ரசிகர்கள் குறித்து பேசும்போது காஜல் பசுபதி மேலும் கடுமையாக விமர்சித்தார். "ரசிகர்கள் எதை செய்தாலும் அவருக்கு ஆதரவாகவே பேசுவார்கள் என்று விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இப்போது இப்படி நடந்து கொள்கிறார் போல தெரிகிறது. ரசிகர்களை இப்படி கெடுத்தது விஜய் தான்," என்று அவர் கூறினார்.

அஜித் குறித்து பாராட்டு

அதே நேரத்தில் நடிகர் அஜித் குமார் குறித்து அவர் பாராட்டியும் பேசினார். "அஜித் ரசிகர்கள் ஏதாவது தவறு செய்தால் உடனே அவர் கண்டித்துவிடுவார். யார் என்று பார்க்க மாட்டார். அவர் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதனால் தான் அவரை பார்க்கும்போது எனக்கு மரியாதை வருகிறது," என்று அவர் கூறினார்.

மேலும் அஜித் தனது மனைவி ஷாலினியை எப்படி கவனித்து வருகிறார் என்பதையும் குறிப்பிட்டார். "ஷாலினியின் முகத்தில் எப்போதும் ஒரு சந்தோஷம் இருக்கும். அதை பார்க்கும்போது அஜித் மீது இன்னும் மரியாதை அதிகமாகிறது," என்று காஜல் பசுபதி கூறினார்.

வைரலாகும் பேட்டி

காஜல் பசுபதி அளித்த இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் அவரது கருத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் இந்த கருத்தை எதிர்த்து பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். இதனால் நடிகர் விஜய், த்ரிஷா மற்றும் அவர்களை சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் பெரிய விவாதம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+