ரஜினி பயந்து போய் அப்படி கேட்டாரு.. ஜோதிகா என்னை கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க.. கலா மாஸ்டர் ஓபன்
சென்னை: கலா மாஸ்டர் தான் சந்திரமுகி திரைப்படத்திற்கு ஜோதிகாவிற்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது நடந்த நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது ஜோதிகா தன்னை கட்டி பிடித்து அழுதது குறித்தும், ரஜினி தன்னிடம் கேட்ட கேள்வி குறித்தும் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
குரூப் டான்ஸராக ஆக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராக மாறியவர்தான் கலா மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். அதற்கு பிறகு ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று தன்னுடைய அறிவுரையை பல போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

அதிலும் இவருடைய வழக்கமாக பேசும் "கிழி கிழின்னு கிழிச்சிட்ட" என்ற வார்த்தை இவருக்கே டிரேடு மார்க்காக உருவானது. அதுபோல சூப்பர் டான்சர், சூப்பர் டான்சர் ஜூனியர், ஓடி விளையாடு பாப்பா மற்றும் மானாட மயிலாட போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலா மாஸ்டர் நடுவராக பங்கேற்று இருக்கிறார். அதோடு பல படங்களிலும் வெற்றி பாடல்களுக்கு இவர் நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் மூலமாக டான்ஸ் மாஸ்டராக மாறிய கலா மாஸ்டர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் மாஸ்டராக இருந்திருக்கிறார். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படத்தில் இவர்தான் டான்ஸ் மாஸ்டர். இந்த திரைப்படத்திற்காக இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் சந்திரமுகி பட அனுபவம் குறித்து சமீபத்தில் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் கலா மாஸ்டர் பேசுகையில் சந்திரமுகி திரைப்படத்தில் இடம் பெற்ற "ரா ரா" பாடலை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட முடியாது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்த பாடல் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்காக பலர் காத்திருந்தனர். அதனால் இந்த பாடலில் ஜோதிகாவை சிறப்பாக ஆட வைக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லி இருந்தனர்.
அதனாலேயே நான் இந்த பாடலுக்கு ஜோதிகாவிற்கு எப்படி டான்ஸ் வருமோ அதுபோலவே அவருக்கு டான்ஸ் கம்போஸ் பண்ணி இருந்தேன். ஆனால் அதை பார்த்த அங்கிருந்தவர்கள் இந்த மாதிரி எல்லாம் ஜோதிகாவுக்கு டான்ஸ் ஆட வராது எப்படியும் சொதப்பி விடுவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு ஜோதிகா வந்து பாட்டு கம்போஸ் பண்ணியாச்சா என்று கேட்க, நான் ஜோதிகாவிடம் பாடலை காட்டினேன்.
ஜோதிகா இது என்னை மனதில் வைத்து தான் இப்படி ஸ்டெப் கிரியேட் பண்ணுனியா என்று கேட்டாங்க. ஆமாம் என்று சொல்லி அவருக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லிக் கொடுத்து பாடல் சிறப்பாக வந்திருந்தது. அப்போது ரஜினிகாந்த் வந்து என்னிடம் பாடல் முடிந்து விட்டதா? இதுதான் ரொம்ப எதிர்பார்ப்பா இருக்குற பாடலா இருக்கு. அதனால் இதில் எந்த குறையும் வந்து விடக்கூடாது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
அவரிடம் பாடல் நன்றாக வந்திருக்கிறது ஜோதிகா அருமையாக டான்ஸ் ஆடி இருக்கிறார் என்று சொன்னேன். பிறகு ரஜினிகாந்த் முன்பு ஜோதிகா டான்ஸ் ஆடி காட்டினார். டான்சை பார்த்ததும் எல்லோரும் பாராட்டினார்கள். ஜோதிகா ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்து அழுதுவிட்டார். ரொம்ப நன்றி என்று சொன்னார். அதை என்னால் மறக்க முடியாது என்று கலா மாஸ்டர் கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications