தனுஷ் மட்டுமல்ல சிம்புவும் அப்படித்தான்.. விஜயை பார்த்தாலே தெரிந்துவிடும்.. கலா மாஸ்டர் ஓபன்
சென்னை: கலா மாஸ்டர் பல நடிகர், நடிகைகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதிலும் நடிகர் தனுஷ், சிம்பு, பிரபு, ரஜினி, அஜித் போன்ற பல நடிகர்கள் பற்றி அந்த பேட்டியில் பல விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
இப்போது உள்ள பல துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்து வருகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பெண் சினிமா துறையில் வரவேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் அந்த நேரத்தில் சினிமா துறையில் வரவேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் 80ஸ் காலகட்டத்தில் எல்லாம் அங்கு விரல்விட்டு எண்ணும் வகையில் தான் சினிமா துறையில் பெண்கள் இருந்தனர்.

ஆனால் இப்போது 100 பேர் ஒரு சூட்டிங்கில் ஸ்பாட்டில் இருந்தால் அதில் பாதிக்கு பாதி பேர் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த நிலைமை இல்லை. ஆனாலும் அந்த நேரத்திலேயே குரூப் டான்ஸராக ஆக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராக மாறியவர்தான் கலா மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.
அதற்கு பிறகு ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று தன்னுடைய அறிவுரையை பல போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் இவருடைய வழக்கமாக பேசும் "கிழி கிழின்னு கிழிச்சிட்ட" என்ற வார்த்தை இவருக்கே டிரேடு மார்க்காக உருவானது. அதுபோல சூப்பர் டான்சர், சூப்பர் டான்சர் ஜூனியர், ஓடி விளையாடு பாப்பா மற்றும் மானாட மயிலாட போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலா மாஸ்டர் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.
அதோடு பல படங்களிலும் வெற்றி பாடல்களுக்கு இவர் நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் பணியாற்றிய நடிகர்கள் பற்றி பேசியிருக்கிறார். அதில் தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படத்தில் நான் அவருக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க போயிருந்த போது என்னை ஞாபகம் இருக்கா நான் உங்களிடம் ஏற்கனவே டான்ஸ் கிளாஸில் சேர்ந்து இருந்தேன் என்று தனுஷ் என்னிடம் சொன்னார்.
அதற்கு நான் நன்றாகவே உன்னை ஞாபகம் இருக்கிறது என்று சொன்னதும் அவர் அந்த நேரத்தில் எல்லாம் நீங்க இவன் எல்லாம் எப்படி ஹீரோவா ஆக போறான்னு சொன்னிங்களே என்று சொல்லிவிட்டார். எனக்கு அது ரொம்ப சங்கடமா போயிடுச்சு. ஆனால் நான் தனுஷை பற்றி அப்படி ஒரு நாளும் நினைத்ததே கிடையாது. நானும் குரூப் டான்ஸராக ஆக இருக்கும்போது பல அவமானங்களை தாண்டி தான் வந்திருக்கிறேன்.
நான் எப்படி ஒருவரை பார்த்து இப்படி தவறாக நினைப்பேன் என்று பிறகு தனுஷிற்க்கு புரிய வைத்தேன். அவர் நான் சும்மா சொன்னேன் என்று சொல்லிவிட்டார். அதுபோல தனுஷ் திறமையையும் அபரிமிதமாக இருக்கும். அவருடைய டான்ஸ் ப்ரொபஷனல் டான்சராக இருக்கும். அதுபோல விஜய் உடைய டான்ஸை பார்த்தால் அவருடைய பேக்ரவுண்டில் ஆடுகிறவர்களின் டான்ஸை பார்க்கவே வேண்டாம், அவ்வளவு பெர்பெக்ட்டாக அவருடைய டான்ஸ் இருக்கும்.
தனுஷ் போல தான் சிம்புவும் ஒரு டான்சருக்கு என்ன தேவையோ அத்தனையும் இருக்கும். என்ன ஸ்டெப் கொடுத்தாலும் அதை ரொம்ப சந்தோசமா செய்வாங்க. முட்டி மூவ்மென்ட் வேணும் என்று கேட்டால் கூட உடனே அதை செய்துவிடுவார்கள். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை இருக்கும் அதிலும் விஜயிடம் நாங்கள் 5% ஒரு பாடலை கம்போசிங் செய்து கொடுத்தாலே போதும் அவர் 100% அந்த பாடலுக்கு டான்ஸ் கொடுத்து விடுவார்.
அதுபோல அஜித் சாரை பார்த்தா அவர் ஒரு ஸ்டைலிஷ் டான்ஸர் ஆக இருப்பார். சூர்யா மேனஸான ஒரு டான்ஸராக இருப்பார். அது மட்டும் அல்ல பிரபு சார் சொல்லணும்னா அவர் அந்த உடம்பை வைத்துக்கொண்டு அழகாக ஆட முடியும் என்று ஒரு அழகை காட்டுவார். இதுபோல பல நடிகர்களுக்கு அவர்களுக்கு என்றும் ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. அதை நாங்கள் வெளியே கொண்டு வருவது தான் எங்களுடைய வேலை என்று அந்த பேட்டியில் கலா மாஸ்டர் பேசி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications