மறைந்த நடிகர் கலாபவன் மணியின் மகள் செய்த சாதனை..! தந்தையின் கனவை நிறைவேற்றிய செல்ல மகள்
சென்னை: மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்த கலாபவன் மணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானார். அவருடைய ஆசையை இப்போது அவருடைய மகள் நிறைவேற்றி இருக்கிறார். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கங்களில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட தங்களுக்கென்று தனித்திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார். அதில் பலரும் பாராட்டும் நடிகர்களில் ஒருவர்தான் கலாபவன் மணி. இவர் வில்லனாக கொடுத்தால் அதற்கு கச்சிதமாக பொருந்தி விடுகிறார். அதே நேரத்தில் வில்லனாக இருந்தாலும் காமெடி கலந்த வில்லனாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

திறமையான நடிகர்
ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்த மாதிரி அவருடைய முக அசைவு மற்றும் உடல்மொழி காட்டி பலரையும் வியக்க வைத்த கலாபவன் மணி கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் தேதி திடீரென காலமானார். இந்த செய்தி அந்த நேரத்தில் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகில் உள்ள கலாபவனின் பண்ணை வீட்டில் அவருடைய நண்பர்களுடன் மது அருந்திய போது அவர் மயங்கி விழுந்தார்.
மரணத்தில் சந்தேகம்
அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஆனால் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர். பிறகு உடற்கூறாய்வில் அவருடைய உடலில் காய்கறிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

வருத்தமான செய்தி
இதனால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்தது. பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ கொச்சியில் உள்ள கேரளா நீதிமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் கலாபவன் மணி கொல்லப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. கலாபவன் மறைவு திரை துறையினர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரையும் அதிகமாக பாதித்தது.
மகள் செய்த சாதனை
கலாபவன் மணிக்கு ஒரு மகள் இருக்கிறார். கலாபவன் இறக்கும்போது அவருடைய மகள் பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருந்தார். கலாபவன் மணி கட்டிய வீட்டில் மனைவி மற்றும் மகள் பெற்றோருடன் தங்கி இருந்தனர். பிறகு எர்ணாகுளத்திற்கு குடும்பத்தோடு குடி பெயர்ந்து இருந்தனர். இந்த நிலையில் கலாபவன் மகள் குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தந்தையின் கனவு
அதாவது கலாபவனின் மகள் ஸ்ரீ லட்சுமி இப்போது எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. கலாபவன் மணி உயிருடன் இருக்கும் போது ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கட்ட வேண்டும், என்னுடைய மகளை மருத்துவராக வேண்டும் என்று பல பேட்டிகளில் தன்னுடைய கனவு பற்றி பேசி இருக்கிறார். இப்போது அவருடைய தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக மகள் ஸ்ரீ லட்சுமி மருத்துவராகி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications