தன்னுடைய உடல்நிலை குறித்து கடந்த மாதம் கோவை குணா அளித்த கடைசி பேட்டி..அவர் சொன்னது இப்படி ஆகிடுச்சே!
மறைந்த நடிகர் கோவை குணா கடந்த மாதம் அளித்த பேட்டியில் தான் நல்லா gun மாதிரி இருக்கேன் என்று கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா காலமாகி இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை குணாவின் உடல்நலம் பற்றி பலரும் பலவிதமான கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் அவர், சொல்றவன் ஆயிரம் சொல்லுவான் நான் நல்லா இருக்கேன் என்று பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

டைட்டில் வின்னர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி 90ஸ் கிட்ஸ்களின் அதிகமான ஆதரவை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருந்தனர். கலக்கப்போவது யாரு சீசன் 1 நிகழ்ச்சியில் தான் ரோபோ சங்கர், மதுரை முத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் கவுண்டமணி, ஜனகராஜ் குரலில் பேசி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர் தான் கோவை குணா. இந்த சீசனின் இறுதி போட்டியில் ரோபோ சங்கர், மதுரை முத்து ,கோவை குனா ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கோவை குணா முதல் பரிசை வென்றார். தனது திறமையின் மூலமாக பல கலைஞர்களின் மனதையும் கோவை குணா சம்பாதித்து இருந்தார்.

திரைப்பட வாய்ப்பு
அது மட்டுமல்லாமல் பல மிமிக்ரி கலைஞர்களுக்கு இவர்தான் முன்னோடியாக இருக்கிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணற்ற போட்டியாளர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ரோபோ சங்கர், அமுதவாணன், பழனி பட்டாளம், வடிவேல் பாலாஜி என்று பலரும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நல்ல நிலையில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் கோவை குணாவிற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சென்னை காதல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.

சில காலம் காணவில்லை
ஆனால் முதல் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் கோவை குணா நடிக்கவில்லை. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குப் பிறகு பலர் சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள். அந்த வகையில் குணாவும் அதில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளாக இவர் சமூக வலைத்தளத்தில் தென்படாமல் இருந்து வந்தார். இதனால் இவரை பற்றி பல்வேறு வதந்திகள் மற்றும் இவருடைய தற்போதைய நிலை என்று பலவிதமான வீடியோக்கள் பரவி வந்தது.

உடல்நிலை குறித்து தகவல்
இந்த நிலையில் தான் கடந்த மாதம் ஒரு youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் நான் நலமாக தான் இருக்கிறேன். நான் நலமாக இல்லை என்றால் இப்படி gun மாதிரி உட்கார்ந்து பேச முடியுமா? சொல்றவன் சொல்லிக் கொண்டுதான் இருப்பான். இந்த காதில் வாங்கி இந்த காதில விட்டுட்டு போயிட்டே இருக்கணும். நான் அப்போது உச்சத்தில் இருந்த நேரம் என்னை லிங்குசாமி சார் அழைத்தார், சாலமன் சார் அழைத்தார், இவர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு பழக்கமானவர்கள் தான். எனக்கு மிமிக்ரி தவிர வேறு எதுவும் தெரியாது 36 ஆண்டுகளாக அதைத்தான் செய்து வருகிறேன்.

இதை எதிர்பார்க்கலையே
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும். நான் மிகவும் பிசியாகி விட்டேன். சிங்கப்பூர் மலேசியா எல்லாம் திருப்பூர் பொள்ளாச்சி போயிட்டு வர மாதிரி ஆயிடுச்சு என்று அதில் பேசியிருந்தார். மேலும் அந்த பேட்டியில் முடிவில் இவர் மேடை கலைஞர்களை வாழ வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இந்த நிலையில் கோவை குணா கடந்த மாதம் நலமுடன் இருப்பதாக பேட்டி கொடுத்த நிலையில் தற்போது இவர் திடீரென மரணம் அடைந்து உள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications