பிரபாஸின் “கல்கி 2898 ஏடி” படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு.. அதுவும் இத்தனை மொழிகளில் வருகிறதா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்த "கல்கி 2898 ஏடி" திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் (Kalki OTT Release date) வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் இந்த திரைப்படத்தை மிஸ் பண்ணிய ரசிகர்கள் வீட்டிலேயே இனி பார்த்துக் கொள்ளலாம். அது எந்த ஓடிடியில் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
கல்கி 2898 ஏடி திரைப்படம் பிரம்மாண்டமான பொருள் செலவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி நெடுநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியானது. இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். மகாபாரத யுத்தமான குருஷேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கதையாக இந்த திரைப்படம் இருக்கிறது.

கல்கி, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியான வெளியான முதல் நாளிலேயே 180 கோடி வசூலுடன் ஆட்டத்தை தொடங்கி பரபரப்பு ஏற்படுத்தியது. அதோடு கல்கி திரைப்படம் இதுவரைக்கும் உலகெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. படத்தின் இரண்டாவது பாகத்தை நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கல்வி 2898 ஏடி திரைப்படத்தில் இந்தி மொழி ஓடிடி உரிமையை netflix நிறுவனம் வாங்கியுள்ளது. அதுபோல தென்னிந்திய மொழி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் பிரைமில் "கல்கி 2898 ஏடி" திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று மணி ஒரு நிமிடத்திற்கு ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் 2டி மற்றும் 3dயில் வெளியாகி இருந்தது. பிரம்மாண்டமான இசை மற்றும் காட்சி அமைப்புகள் இந்த திரைப்படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்த நிலையில் இதை வீட்டில் பார்க்கும்போது திரையில் பார்த்த அனுபவம் கிடைக்குமா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கல்கி திரைப்பட ஓடிடி ரிலீஸுக்காக காத்திருக்கிறீர்களா மக்களே? அந்தப் படத்தை யாருக்காக பார்க்கணும்னு ஆசைப்படுறீங்கன்னு கமெண்ட் தட்டி விடுங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications