கல்பனா உடைத்த உண்மை.. 18 மாத்திரையா? பாடகிக்கு இதுதான் காரணமா? அதைவிடுங்க, இங்க பிரபலம் வேற சொல்றாரே
சென்னை: எட்டிப்பிடிக்க முடியாதபடி நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் பாடகி கல்பனா. அவரது அப்பா ராகவேந்திரா இருந்திருந்தால் இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்.. இசை மேடையில் நன்றாக இன்ட்ராக் செய்யக்கூடியவர் கல்பனா.. இதை பலரும் செய்வதில்லை என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
King 24x7 சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "ராகவேந்திராவின் மகள் கல்பனா.. அடிப்படையிலேயே ராகவேந்திரா ஒரு மியூசிக் டைரக்டர்.. அந்த காலத்தில் தூர்தர்ஷனில் மாலை நேரங்களில் ராகவேந்திரா இசையமைத்து பல பாடகர்களை பாட வைப்பார்.. அடிப்படையிலேயே இசை ஆளுமை மிக்கவர். அதனால்தான், ராகங்களை தெரிந்தவர் என்பதால், சிந்து பைரவி படத்தில் மியூசிக் ரோலில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.

அருமையான பெண் கல்பனா
அவரது அருமையான பெண்தான் கல்பனா. எட்டிப்பிடிக்க முடியாதபடி 100 பாடல்களை பாடியிருக்கிறார். ராகவேந்திரா இருந்திருந்தால் இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்.. இசை மேடையில் நன்றாக இன்ட்ராக் செய்யக்கூடியவர் கல்பனா.. இதை பலரும் செய்வதில்லை.. கல்பனாவின் பாடும் ஸ்டைலே சிறப்பாக இருக்கும்.
கணவனுடன் குடும்பத்தில் உரசல் இருப்பது போல தெரிகிறது. தூக்க மாத்திரையை போட்டுக் கொண்டு, 2 நாள் விழுந்து கிடந்துள்ளார்.. தற்கொலை முயற்சியைதான் எடுத்துள்ளார்.. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு, அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு நினைவு திரும்பியிருக்கிறது. தற்போது குணமடைந்து வருகிறார்.
வாட்ஸ்அப் மெசேஜ்
ஆனால், கல்பனா வீட்டிற்குள் விழுந்து கிடந்த தகவலை, அவரது கணவனுக்கு தெரிவித்து போலீசார் வரவழைத்துள்ளனர்.. முதல்கட்ட விசாரணையில் அவரை கைது செய்திருக்கிறார்கள். ஏதோ ஒரு தகவல் கிடைத்துள்ளதால்தான், போலீசார் அவரை கைது செய்திருக்க முடியும். அல்லது கல்பனாவின் செல்போனில் ஏதாவது மெசேஜ் இருந்திருக்கலாம்.
கல்பனாவுடன் போன் தொடர்பிலும் கணவன் இல்லை போலும். கணவனுக்கு போலீசார்தான் போனை போட்டு விஷயத்தை சொல்லி உள்ளனர்.. கல்பனாவிடம் வாக்குமூலம் பெறாமலேயே அவரது கணவரை கைது செய்துள்ளனர்.. முகாந்திரம் இல்லாமல் போலீசார் இப்படி யாரையுமே அரெஸ்ட் செய்ய முடியாது. எதற்காக இந்த முடிவு என்பதை கல்பனா, அறிக்கை வெளியிட்டால்தான் உண்மை தெரியும்.. எனினும் சிறந்த பாடகி உடனடியாக காப்பாற்றப்பட்டுள்ளது அனைவருக்குமே மகிழ்ச்சியே" என்று தெரிவித்துள்ளார்.
கல்பனா பரபரப்பு வாக்குமூலம்
இதனிடையே, சிகிச்சையில் இருக்கும்போதே கல்பனா பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.. இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "கல்பனா உடல்நலம் தேறிய பிறகு அவரிடம் நாங்கள் விசாரித்தோம்.. தான் தற்கொலை செய்யவில்லை அவரும் சொல்கிறார்.. அவருடைய மகள் தயா, கேரளாவில் தங்கியிருந்து படித்து வருகிறார். கல்பனாவுக்கு உடன்பாடு இல்லை. தன்னுடனேயே தங்கியிருந்து படிக்க வேண்டும் என்று ஹைதராபாத் அழைத்துள்ளார் கல்பனா.
இதற்காக கடந்த திங்கட்கிழமை மகளை பார்க்க கேரளா எர்ணாகுளம் சென்று மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், கேரளாவில் தான் படிப்பேன் என்று திட்டவட்டமாக மகள் சொல்லவும், மகளுடன் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் மீண்டும் ஹைதராபாத் திரும்பிய கல்பனாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது..
தூக்கமின்மை பிரச்சனை
ஏற்கனவே தூக்கமின்மை பிரச்சனைக்காக மாத்திரை சாப்பிட்டு வருகிறார். செவ்வாய்கிழமை தூக்கம் வராமல், 8 மாத்திரை போட்டிருக்கிறார்.. பிறகு 10 மாத்திரை சாப்பிட்டுள்ளார். அடுத்து என்ன நடந்தது என்று தெரியாமல் சுயநினைவு இழந்துவிட்டதாக சொல்கிறார்.. கணவர் போன் போட்டும் இவரால் எடுக்க முடியவில்லையாம்.. முதல் கட்ட விசாரணையில் எந்த பிரச்சனையும் இவர்களுக்குள் இல்லை என்பது தெரியவவந்துள்ளது" என்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications