Kalyana Veedu Serial: மறு வீட்டு விருந்துக்கு வந்துருங்க.. எத்தனை தடவை?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் எந்த அளவுக்கு கதை இருக்கிறது.கதையில் இருக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறதோ,அந்த லெவலுக்கு நகைச்சுவையும் இருக்கிறது.
தங்கச்சி சவீதா கல்யாணத்தை நடத்தி முடிச்சாச்சுன்னு அப்பாடான்னு நிம்மதியா இருக்க முடியலை நாயகன் கோபியால். மண்டபத்தில் நடந்த கொலைகளை கோபி செய்திருக்கலாம் என்று போலீசுக்கு ஒரு எண்ணம் வருகிறது.
கல்யாண மண்டபத்தில் கொலைகள் நடந்ததையே அனைவரிடமும் இதுவரை சொல்லாமல் இருக்கும் கோபியைத் தேடிப் போலீஸ் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்காங்க. அதுவும் புது மாப்பிள்ளை பிச்சைமணியுடன்.

விருந்து மறுவீடு
பெண் வீட்டில் கல்யாணத்துக்கு மறுநாள் மறு வீட்டு விருந்து வச்சு இருக்காங்களாம் .அதைப்பெண் மாப்பிள்ளையிடமும் சொல்லியாச்சு. சம்பந்தி, அந்த வீட்டு மாப்பிள்ளை பேரிடமும் சொல்லியாச்சு. இருந்தாலும் முறைப்படி கூப்பிடாமப் போகக் கூடாதுன்னு சவீதாவின் மாமியாரும் , நாத்தனாரும் பேசிக்கிறாங்க .இதை ஒட்டு கேட்டுவிட்டு சம்பந்தி வீட்டு மாப்பிள்ளை கோபி வீட்டாரிடம் சொல்லிவிட்டு, வந்துடறார்.

தெரியும் சிவகாமி
மறுவீட்டு விருந்து நம்ம வீட்டு பொண்ணு மாப்பிள்ளைக்கு வச்சுருக்கோம் வந்திருங்க சம்பந்தின்னு சொல்றாங்க.பரவால்லை சிவகாமி உனக்கு கூட முறை தெரியுதே...எங்கே கூப்பிடாமல்; விட்டுடுவியோன்னு நினைச்சேன்னு சொல்றாங்க சம்பந்தி. டெல்லியில இருந்தாலும் நம்ம பழக்க வழக்கம் மறந்து போகுமா மீனாட்சின்னு சிவகாமி சொல்றாங்க.

பெண் வீட்டு பலகாரம்
என்ன முறை தெரியும்? பெண் வீட்டு பலகாரம் பெரிய தூக்கு வாளியில் தரணும், அது தெரிஞ்சுதா உனக்கு. நாத்தனார் மூணு தடவை உன் பொண்ணுக்கு ஹாரத்தி எடுத்திருக்கா என் பொண்ணு, அவளுக்கு தட்டுல காசு போட்டீங்களா? இப்படி என்ன முறையை சரியா செய்தே? இனியாவது இதை செய்யின்னு சொல்லிட்டு, மறு வீட்டு விருந்துக்கு உன் பொண்ணு ரூமிலிருக்கா அவளையும் கூப்பிடுன்னு சொல்றாங்க.

என்னங்க அவளையுமா?
என்னங்க அவளையுமா கூப்பிடணும்...அவ எங்க வீட்டு பொண்ணாச்சேன்னு சிவகாமி சொல்ல ,இத்தனை நாளாவே உங்க வீட்டு பொண்ணு. இப்போ என் மருமக. கூப்பிட்டுத்தான் ஆகணும் சிவகாமின்னு சொல்றாங்க. சவீதாகிட்டே நம்ம வீட்டில் மறுவீட்டு விருந்து வச்சு இருக்கோம் வந்துருடீ மாப்பிள்ளையோடன்னு சொல்றாங்க. என்னம்மா நீ, நம்ம வீட்டுக்கு நீ கூப்பிட்டுத்தான் வரணுமான்னு சவீதா கேட்க, ஏய் உன் மாமியார்தாண்டி உன்னையும் கூப்பிட சொல்றாங்க. சத்தமா பேசாதே...அதுக்கும் ஏதாவது சொல்லப் போறான்னு சொல்றாங்க.

கூப்பிடட்டும் கோபியும்
ஒரு வழியா சம்பந்தி வீட்டாரின் மறுவீட்டு விருந்துக்கு சவீதா,அவளின் நாத்தனார், மாமியார் மூவரும் வந்து இருக்காங்க.அதுக்குள் கோபி தலையைக் கண்ட மீனாட்சி, மகளிடம் காதில கிசுகிசுத்துவிட்டு சவீதாவை அழைச்சுக்கிட்டு போயிடறாங்க.கோபி வந்தும் எங்கேன்னு கேட்க வீடு வரைக்கும் போயிருக்காங்கன்னு சொல்லிய நாத்தனார்.கோபி நீயும் விருந்துக்கு போயி அம்மாவை கூப்பிட்டுட்டு வந்துருன்னு சொல்றா.

மாமியார் லூசு
அதே மாதிரி வீட்டுக்கு போயி, மீனாட்சி அம்மாவையும கூப்பிட்டுட்டு, தங்கச்சியையும் ஒரு வார்த்தை கூப்பிடுன்னு அவங்க சொல்ல, சவீதாவை கூப்பிட உள்ளே போறான்.தங்கச்சி மறு வீட்டு விருந்துக்கு வந்திருன்னு சொல்ல, லூசாண்ணே நீ? என்னையே விருந்துக்கு கூப்பிடறேன்னு கேட்கறா.இல்லை உன் மாமியார்தான்னு சொல்ல, லூசா அந்த பொம்பளைன்னு கத்த, அங்கே வந்த மீனாட்சி என்னையத்தனே கோபி லூசானு உன் தங்கச்சி கேட்டான்னு கேட்கறாங்க.அது என்னைத்தாங்க சொல்லுச்சுன்னு சமாளிச்சு கோபி வர.அவனை கைது செய்ய மாப்பிள்ளை பிச்சை போலீசுடன் வர்றான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications