Kalyana Veedu Serial: சற்றே திரும்பிப் பார்த்தால் என்னவோ போல இருக்கே!
சென்னை: மெகா சீரியலுக்கு சன் டிவி மிகவும் புகப்பெற்றது. சீரியல்களில் சன் டிவியை அடிச்சுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நாள் முழுக்க சீரியல்கள் அணிவகுத்து ஒளிபரப்பாகும்.
கோவிட் 19 தொற்று காரணமாக இப்போது நாடெங்கும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் தொலைக் காட்சிகள் பழைய நிகழ்ச்சிகள், சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் லாக்டவுன் காரணமாக மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்படி ஒளிபரப்பாகும் சீரியல்களை சற்றே திரும்பிப் பார்க்கும்போதுதான் என்னவோ போல இருக்குது.

ஆரம்ப புள்ளியை விட்டு
சன் டிவியின் அழகு,நாயகி, கல்யாண வீடு, கண்மணி, ரோஜா போன்ற சீரியல்கள் மறுபடியும் முதலில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சீரியல்கள் ஆரம்ப புள்ளியை விடுத்து, காலப்போக்கில் எங்கோ பயணித்து வருவதாக இருக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு கதை
சீரியல்கள் மக்களின் நாடிப் பார்த்து எபிசோடுக்கு எபிசோட் வேறு விதமாக பயணிக்கிறது என்பதை உண்மையாக்குவது போல சீரியலின் ஆரம்பத்துக்கும், இப்போது கடைசியாக பயணித்து வருவதற்கும் துளியும் தொடர்பில்லாமல் இருக்கிறது.

காட்சிக்கு காட்சி முரண்
கல்யாண வீடு சீரியல் ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருது. டெல்லியில் ரவுடி கும்பல் பட்ட பகலில் ஒருவனைத் துரத்தி வெட்டி கொலை செய்து விடுகிறது. அந்த ரவுடிகள் முதல் சீனில் கோபியின் வீட்டுக்குள் நுழையும்போது குடும்பமே கோபியின் அம்மா உட்பட அலறுகிறது. ஆனால், அடுத்த காட்சியில் கலா சிஸ்டர்ஸிடம்...இதெல்லாம் இங்கே சகஜம்...அடிக்கடி நடக்கும் என்று சிரித்துக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல பேசுகிறார் கோபியின் அம்மா. பின் அந்த அலறல் எதற்கு?

சற்று திரும்பிப் பார்க்கையில்
ஒளிபரப்பான சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படும்போது, அதை பார்க்கும் இயக்குநர்கள் மட்டும் இல்லை பார்வையாளர்களும் தவறுகளை அறிய முடிகிறது. இதை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கே என்னவோ போல இருக்கிறது. இயக்குநர்கள் தங்களது படைப்புக்களை இப்படியா சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாற்றி முன்னுக்குப் பின் முரணாக தருவது? படைப்பாளர்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தங்களை சரி செய்துக்கொள்ள இது சரியான காலம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications