அக்கா மாமியார் வம்புக்காரி.. தங்கச்சியோட வருங்கால மாமியார் பெரிய வம்புக்காரி.. கலகல கல்யாண வீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாண வீடு சீரியலில் எந்த அளவுக்கு சீரியஸ்னஸ் இருக்கோ, அந்த அளவுக்கு அப்பப்போ காமெடியும் சக்கை போடு போடுகிறது. இப்போ சொல்றதை சரியா புரிஞ்சுக்கோங்க...

கோபி கதையின் நாயகன், இவனின் இரண்டாவது தங்கச்சிய கட்டிக் குடுத்த வீட்டுல, அவளின் மாமியார் ஒரு வம்பு காரி. மூணாவது தங்கையை பேசி முடிச்சிருக்கற தங்கச்சியோட வருங்கால மாமியார் அதை விட பெரிய வம்புக்காரி.

இரண்டு பேரும் கோபி வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம். வரும்கால மாமியார் தனது பிள்ளையின் போலீஸ் வேலையைக் காப்பாத்திக் குடுத்த காரணத்தினால் வரும் கால மருமகளுக்கு இப்பவே வீட்டு வேலைகள் அதாவது துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, முக்கியமா சமைக்கறதுன்னு எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சிடறாங்க.

வம்பு

வம்பு

துணி துவைக்கும் வரும்கால சம்பந்தியை ஏற்கனவே இருக்கும் சம்பந்தி கேலி செய்கிறார். அதாவது கோபியின் இரண்டாவது தங்கச்சியை கல்யாணம் செய்து இருக்கும் மாமியார். இதை பார்த்து நமுட்டு சிரிப்பு, நக்கல் சிரிப்பு நையாண்டி சிரிப்புன்னு ஒரே நக்கல்.

சூடு

சூடு

துணி துவைத்துக்கொண்டு இருக்கும் இன்னொரு வம்புக்காரிக்கு இவளின் நமட்டு, நக்கல் சிரிப்பைப் பார்த்து ஆத்திரம் பொங்கி வழிகிறது.கண்களை உருட்டி, பற்களைக் கடித்தும் பயனில்லை.அடுப்பு தகதகவென்று எரிவதை பார்த்த வரும்கால சம்பந்தி, முதல் சம்பந்தியை பழிவாங்க கரண்டி காம்பை அடுப்பில் வைத்து, சூடு போட திட்டமிடுகிறார்..

காபி குடிங்க

காபி குடிங்க

விறுவிறுவென்று சென்று, கரண்டி காம்பை அடுப்பில் வைத்துவிட்டு, என்னங்க சம்பந்தி காபி குடிக்க வாங்கன்னு கூப்பிட, தோதோ வரேன்னு சொல்லிட்டு அவங்களும் வராங்க..இதோ இங்க உட்காருங்கன்னு வாசல் படியை காமிக்க, அவர் உட்காருவதற்குள் வாட்டமாக சூடு கரண்டியை படியில் வைக்க, தகதகவென்ற நெருப்பில் பழுத்து இருக்கும் கரண்டி காம்பு, சம்பந்தியின் பின்புறத்தை பதம் பார்த்துவிடுகிறது.

தங்கையின் நாத்தனாருடன்

தங்கையின் நாத்தனாருடன்

அந்த சூடு பட்ட சம்பந்தி இருக்காங்களே அவங்க, கோபியும், சூரியாவும் தனியா பேசிக்கிட்டு இருந்ததை பார்த்து, கோபியை வம்புக்கு இழுக்கறாங்க. ஏன் கோபி, சூர்யாகிட்ட தனியா பேசிகிட்டு இருந்தியே... என்ன பேசிகிட்டு இருந்தேன்னு ..

வம்புக்காரி

வம்புக்காரி

ரோஜா உண்மையாலுமே அந்த ராஜாகிட்ட கெட்டுத்தான் போயிட்டான்னு சூர்யா சொன்னாளா, இல்லை சூரியா தான்தான் ராஜாகிட்ட கெட்டு போயிட்டேன்னு சொல்லி அழுதாளா, இல்லை உங்க ரெண்டு பேருக்குள்ள கசமுசா நடந்து அதை உன்கிட்ட சொல்லி சூர்யா அழுதாளான்னு வரம்பு மீறி வம்பு பேச கோபியால் பொறுத்துக்க முடியலை.

கோபி

கோபி

என்ன இந்தம்மா இப்படி வம்பு பேசுதுன்னு நினைச்ச கோபி, அந்தம்மாவின் மகளைத் தனியாக அழைச்சு, வம்புக்கார அம்மாவைப் பார்த்து பார்த்து இருவரும் பேசி சிரிக்க ககடுப்பாகும் அந்த அம்மாவுக்கு இன்னமும் தன் கேள்விக்கு கோபி பதில் சொல்லவில்லைன்ற ஆத்திரம்

கோபி வர

கோபி வர

மறுபடியும் கோபி ஒன்றும் பேசாமல் கிளம்ப, என்ன கோபி நான் சூரியாக்கூட தனியா என்ன பேசினேன்னு கேட்டேன், ஒண்ணும் சொல்லாம போறேன்னு கேட்கிறாள். என்னங்க நீங்க, உங்க பொண்ணை தனியா அழைச்சுக்கிட்டு போயி பேசினேன் அதை கேட்கலை, இதை கேட்கறீங்க.

சூரியகிட்டயும்

சூரியகிட்டயும்


உங்க பொண்ணுகிட்ட நான் தப்பா பேசியிருந்தா, சூர்யா கிட்டயும் தப்பாத்தான் பேசி இருப்பேன், உங்க பொண்ணுகிட்ட சரியா பேசி இருந்தா, சூர்யாகிட்டயும் சரியா பேசி இருப்பேன்ன்னு சொல்ல வாயை பொத்திக் கொள்கிறாள் வம்புக்காரி.

வம்புக்காரிகள் இப்படியும் இருக்கத்தானே செய்கிறார்கள்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+