Kamal Haasan: ரோபோ சங்கரின் ஆசையை நிறைவேற்றிய கமல்ஹாசன்! அதுவும் அடுத்த படத்திலேயே எடுத்த முடிவு!
சென்னை: சில உறவுகள் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது வெறும் ரசிகன் - நடிகர் உறவு மட்டுமல்ல, அதைத் தாண்டி ஆழமான அன்பும், பாசமும் நிறைந்த ஒரு பிணைப்பு. அப்படி ஒரு பிணைப்பு, நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கருக்கும், கலைக்கடல் கமல்ஹாசனுக்கும் இருந்தது. ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, கமல்ஹாசன் அவருக்குச் செய்த ஒரு செயல், அந்த ஆழமான பாசத்தை உணர்த்துகிறது.

மதுரை ரசிகனின் ஆசான்
சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே, ரோபோ சங்கர் ஒரு தீவிரமான கமல்ஹாசன் ரசிகராக இருந்தார். மதுரை போன்ற நகரங்களில் மேடை நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருந்தபோது, அவர் பல இடங்களில், "கமல்ஹாசன் தான் என்னுடைய ஆஸ்தான குரு" என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம்.
ஆரம்ப காலத்தில், உடலில் எல்லாம் பெயிண்ட் பூசிக்கொண்டு, ரோபோ சங்கர் மேடையில் நடனமாடினார். அப்போதுகூட, அவர் அதிகமாக கமல் பாடல்களுக்குதான் நடனமாடுவாராம். முக்கியமாக, ஆளவந்தான் படம் வந்த புதிதில், கமல்ஹாசனைப் போலவே மொட்டை அடித்துக் கொண்டு, உடம்பில் பெயிண்ட் பூசிக்கொண்டு மேடை நிகழ்ச்சிகளை அவர் செய்திருக்கிறார். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் தான், அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. ஒரு ரசிகனின் பக்தி, அவனது சினிமா கனவுக்கு ஒரு என்ட்ரி கார்டு ஆக மாறியது ஒரு ஆச்சரியமான விஷயம்.
உலகநாயகன் தந்த ஆச்சரியம்
சினிமாவிற்கு வந்த பிறகும், ரோபோ சங்கர் தான் ஒரு கமல் ரசிகன் என்பதைப் பெருமையாக எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டே இருந்தார். அது இது எது என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கமல்ஹாசனைப் போலப் பேசியதை, கமல்ஹாசன் நேரில் பார்த்து, இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார். உடனே, ரோபோ சங்கருக்கு போன் செய்து அவரைப் பாராட்டி இருக்கிறார்.
பின்னர், ரோபோ சங்கரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, தனது குருவை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றார். இது, ஒரு ரசிகனுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.
நிறைவேறாத ஆசை
கமல்ஹாசனைப் போலவே நடிப்பில் பல பரிணாமங்களை வெளிப்படுத்திய ரோபோ சங்கரின் நீண்ட நாள் ஆசை, கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும், கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கடைசி வரைக்கும் கிடைக்காமல் போய்விட்டது. இந்த ஆசை, நிறைவேறாமலேயே அவர் காலம் ஆகிவிட்டது, அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு மன வலியாகவே இருந்தது.
மரணத்திற்கு பிறகு நிறைவேறிய கனவு
இந்த நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, கமல்ஹாசன் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவை, தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ரோபோ சங்கரின் நிறைவேறாத கனவை, அவரது மகளின் மூலம் நிறைவேற்றி வைக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
இது, கமல்ஹாசனுக்கும், ரோபோ சங்கருக்கும் இடையே இருந்த ஆழமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறது. ரோபோ சங்கரின் பேரனுக்குக் கூட, கமல்ஹாசன் தான் நட்சத்திரன் என்று பெயர் சூட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகன், தனது ரசிகனின் திறமையைப் பாராட்டி, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து, மறைந்த பிறகும் அவருடைய கனவை நிறைவேற்றுவது என்பது சினிமா உலகிலேயே ஒரு அபூர்வமான சம்பவம். சக நடிகனாக மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகனின் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications