பாசத்துல டி. ராஜேந்திரனையே மிஞ்சிட்டாரு சிம்பு.. கண்ணீர் கதையை சொல்லி நெகிழ்ந்த கமல்ஹாசன்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் இணைந்து நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரோமோஷன் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது. அதில் திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் அப்போது கமல்ஹாசன் சிம்பு பற்றி நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
தக் லைஃப் திரைப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கும் முன்பு வெளியானதும் இந்த திரைப்படத்தில் என்ன இருக்கப் போகிறது என்ற தேடல் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் இந்த திரைப்படத்தை பற்றி ஏற்கனவே அடிக்கடி ஏதாவது சர்ச்சைகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்றோர் நடிப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நடிகர் சிம்புவும், அசோக் செல்வமும் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தக் லைஃப் நடிகைகள்
இந்த திரைப்படத்தில் திரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். அதுபோல இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மணிரத்தினம் பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் கூட்டணியில் இணைந்து இருக்கிறார் என்றதும் இந்த திரைப்படத்தை பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சிம்பு பேச்சு
அதற்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான், கமல்ஹாசன், மணிரத்தினம், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு கமல் பற்றி பேசி இருந்தார் அதில், கமல் சார் என்னுடைய ஆன் ஸ்கிரீன் குருவாக நினைக்கிறேன். இந்த படத்தில் புதிதாக நிறைய விஷயங்கள் நடந்து இருக்கிறது. கமல் சார் கூட நடிச்சது எனக்கு பெருமை.

கமல் டான்ஸ்
படத்தை பற்றி நிறைய பேச முடியாது. தனியாக கமல் சார் கூட நடிக்கிறதே கஷ்டம்.. இதுல மணிசாரும் இருக்காரு அப்போ எப்படி இருக்கும் என்று நீங்களே புரிஞ்சுக்கோங்க. ஆனாலும் நான் ஆசிர்வதிக்கபட்டவன் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் கமல் சார் சூப்பரா டான்ஸ் ஆடி இருக்கிறார் என்று பேசி இருந்தார்.
கமல் பேச்சு
அடுத்ததாக கமல், சிம்பு பற்றி பேசி இருந்தார். அதில், "சிம்புவோட ராட்சச எனர்ஜிக்கு ஈடு கொடுக்கணும்னு தான் நானும் அப்படி ஆடினேன். என் மீது பாசம் வைப்பதில் சிம்பு அவருடைய தந்தையையே மிஞ்சிவிட்டார். ராஜேந்திரனுக்கு என் மீது அதிகப்படியான பாசம் உண்டு. எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது சட்டையை நனைத்து விடுவார்" என்று கமல்ஹாசன் பேச அதற்கு சிலம்பரசன் சிரித்தபடி தன்னுடைய புன்னகையை பதிலாக கொடுத்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications