கமல்ஹாசன் தான் என் முதல் எதிரி! நேரில் பார்த்தா அவ்வளவுதான், ஆதங்கப்பட்ட பெண்.‌. ரசிகர்கள் செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் கமல்ஹாசன் குறித்து பேசிய வீடியோவை இணையத்தில் கமல்ஹாசன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். அதில் அந்த பெண், "கமல்ஹாசன் தான் தன்னுடைய எதிரி" என்று கூறி இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பது பற்றி அவர் சொன்னது தான் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக நடிகர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. அதனாலேயே பலர் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு சினிமாவில் அறிமுகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள். முன்னணி நடிகராக வேண்டும், தன்னுடைய ரசிகர்கள் தன்னை பாராட்ட வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகர்களுக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகர்கள் தான் புகழின் உச்சத்தில் வலம் வருகிறார்கள். அவர்களுடைய திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் செய்யும் தொல்லையும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

Kamal Haasan Thug Life

ரசிகர்களின் அலப்பறை

சில ரசிகர்கள் செய்யும் அலப்பறையால் சாதாரணமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஆனாலும் ரசிகர்கள் தங்களுடைய நடிகர்களை கடவுளுக்கு சமமாக கொண்டாடி வருவதை பார்க்கும் போது அவருடைய குடும்பத்தினர் சிலர் வேதனையில் இருக்கிறார்கள். சில நடிகர்களில் ரசிகர்கள் செய்யும் அலப்பறையால் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் அதுபோல தான் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர் செய்த செயலால் அவருடைய மனைவி அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் "வா தமிழா வா" நிகழ்ச்சியில் வேதனையோடு பேசி இருக்கிறார்.

வா தமிழா வா நிகழ்ச்சி

வா தமிழா வா நிகழ்ச்சியில் 90ஸ் சினிமா ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்ளாத அவருடைய குடும்பத்தினரும் கலந்து கண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது ஒரு பெண் தன்னுடைய முதல் எதிரி நடிகர் கமல்ஹாசன் என்று கூறி இருக்கிறார். அதோடு "நான் இப்போது கமல்ஹாசனை நேரில் பார்த்தால் அவ்வளவுதான், அவரை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்" என்று சொல்லும்போது ஆக்ரோஷமாக பேசியதை பார்த்து வா தமிழா வா நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் நடிகர் ஆரி "என்ன ஆச்சு எதற்காக உங்களுக்கு கமல்ஹாசன் மீது இவ்வளவு கோபம்?" என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் வெறுப்போடு பேச தொடங்கி இருந்தார்.

வீடு முழுக்க கமல்ஹாசன்

என்னுடைய கணவர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர். அவர் கமல்ஹாசன் உடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் கமல்ஹாசனுடைய கெட்டப் போட்டு விடுவார். கல்யாணம் ஆகி எல்லாரும் வீட்டுக்கு போனதும் முதலில் சாமி முன்பு தான விளக்கு ஏற்ற சொல்லுவாங்க. ஆனால் நான் விளக்கேத்துனது கமல்ஹாசன் அவர்களுக்கு உடைய போட்டோ முன்பு தான். என்னுடைய பெட்ரூம் முழுக்க கமல்ஹாசன் போட்டோ தான் இருக்கும்.

கமல்ஹாசன் ரசிகர் செய்த செயல்

என்னுடைய கல்யாண வீடியோவில் எல்லா பாடலும் கமல்ஹாசன் பாடல் தான் இருக்கு. நான் கல்யாணம் முடிந்ததும் கர்ப்பமாகி விட்டேன், முதல் தலை தீபாவளிக்கு என்னுடைய பெற்றோர் எங்களை எங்க வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போயிருந்தாங்க. நான் கர்ப்பமாக இருக்கும் போது அவர் ரெண்டு நாள் வீட்டுக்கு வரல. மனைவி கர்ப்பமாய் இருக்கும் போது கணவன்மார்கள் தாடி, மீசை எல்லாம் வைப்பாங்க. என் புருஷனும் வச்சிருந்தாரு.

கணவர் கொடுத்த அதிர்ச்சி

ஒரு நாள் நான் வாந்தி எடுத்து எங்க அம்மா வீட்டில் முடியாமல் படுத்து இருக்கிறேன். அப்போ ரூமுக்குள் திடீர்னு ஒரு ஆளு வந்துட்டு போற மாதிரி இருந்தது யாருன்னு பார்த்தா அது என் புருஷன் தான். "குருதிப்புனல்" ரிலீஸ் ஆன அன்று குருதிப்புனல் கெட்டப்பில் தாடி மீசை எல்லாத்தையும் மொத்தமா எடுத்துட்டு வந்து மொட்டை மொழுக்கைனு வந்தாரு. எனக்கு அதிர்ச்சி ஆகிட்டு.

பெண்ணின் புலம்பல்

எல்லாரும் குழந்தை பிறந்த பிறகு தானே கோவிலுக்கு போய் முடி எடுப்பாங்க. ஆனால் இவர் இப்படி செஞ்சிட்டு வந்துட்டாரு என்று அந்த பெண் ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார். அந்த வீடியோவை கமல்ஹாசனின் ரசிகர்கள் ஷேர் செய்து இது தான் ஆண்டவர் பவர் என்று கேப்ஷன் கொடுத்து வருகிறார்கள். அதோடு கமல்ஹாசனின் ரசிகர்கள் இந்த அம்மாவின் புலம்பலை தங்களுக்கு கிடைத்த பாராட்டாக ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+