Kamal Haasan: அப்பா அந்த நடிகையை காதலிச்சாங்க.. ஹேராம் படத்தில் அவங்க பெயர்! ஸ்ருதிஹாசன் உடைத்த ரகசியம்
சென்னை: தமிழ் சினிமாவின் 'உலகநாயகன்' கமல்ஹாசன் பற்றி நாம எல்லாருக்கும் தெரியும். பல மொழிகள் பேசுவார், அதுவும் அந்தந்த மாநில மக்கள் மாதிரியே பேசுவார்னு. ஆனா, அவர் எதுக்காக பெங்காலி மொழி கத்துக்கிட்டார்னு உங்களுக்குத் தெரியுமா? அவருடைய மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தான் அந்த சுவாரஸ்யமான ரகசியத்தை இப்போ சொல்லியிருக்காங்க.

சமீபத்துல ஒரு பேட்டியில, நடிகர் சத்யராஜ்கிட்ட பேசிட்டு இருக்கும்போது, ஸ்ருதிஹாசன் இதை சொல்லியிருக்காங்க. "எங்க அப்பா அளவுக்கு எனக்கு பல மொழிகள் தெரியாது. அவர் பெங்காலி கத்துக்கிட்டது ஏன் தெரியுமா? அப்போ அவருக்கு பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது லவ். அவங்களை இம்ப்ரஸ் பண்ணதான் அவர் பெங்காலி கத்துக்கிட்டார்!"னு சொல்லியிருக்காங்க. இது படத்துக்காக எல்லாம் இல்லைன்னு ஸ்ருதி சொன்னதும், சத்யராஜ் உட்பட எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க.
அபர்ணா சென் யார்
சரி, இந்த அபர்ணா சென் யாருனு தெரிஞ்சுக்கலாம். அபர்ணா சென், கமல்ஹாசனை விட 9 வயசு பெரியவங்க. ஒரு நடிகை மட்டுமில்லாம, திறமையான இயக்குனர் மற்றும் எழுத்தாளரும் கூட. பல தேசிய விருதுகள் வாங்கிய புத்திசாலி. இப்படிப்பட்ட ஒருத்தர் மீது கமலுக்கு காதல் வந்ததுல ஆச்சரியம் இல்லைனு இப்போ பேசிக்கிறாங்க.
அதனாலதான், 'ஹேராம்' படத்துல ராணி முகர்ஜியின் கதாபாத்திரத்துக்கு 'அபர்ணா'னு பேர் வெச்சிருப்பாரு கமல். இப்போ உங்களுக்கு ஒரு புரிதல் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்! ஸ்ருதி இப்படி வெளிப்படையா சொன்னது, அவங்க அப்பா-மகள் உறவு எந்த அளவுக்கு இயல்பானதுனு காட்டுது.

ஸ்ருதிஹாசனின் வெற்றி
அதே பேட்டியில ஸ்ருதி, தான் ரஜினிகாந்தின் 'கூலி' படத்துல நடிச்சது பற்றியும் பேசியிருக்காங்க. அந்த படத்துல சத்யராஜோட மகளா நடிச்ச ஸ்ருதி, தனது வெயிட்டான கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பா நடிச்சிருக்கிறதா விமர்சனங்கள் வந்துருக்கு. 'கூலி' படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ரஜினியோட நடிச்ச ஸ்ருதியை அடுத்து, கமல் ஹாசனும் தன் நண்பர் ரஜினிகாந்தோடு சேர்ந்து நடிக்கப் போறாங்க. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகப் போகிற இந்தப் படத்துக்கு இப்போதே பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. லோகேஷ், ரஜினி, கமல் இரண்டு பேரையும் 'கேங்ஸ்டர்'களா காட்டப் போறார்னு சொல்லியிருக்காங்க. ஆமா, இனிமேல் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்புல மட்டும்தான் நடிக்கப்போறாராம் கமல்.

மொத்தத்துல, இந்த ஒரு பேட்டி, திரையுலகத்துல பல சுவாரஸ்யமான செய்திகளுக்கு வழி வகுத்திருக்கு. அதுபோல நடிகர் கமல்ஹாசன் தன்னோடு நடித்த நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்ததாக அந்த நேரத்தில் செய்திகள் பரவி வந்தது. அது குறித்து சில வருடங்களுக்கு முன்பு காபி வித் டிடி நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசி இருந்தார்.
இப்போது எப்படி ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பா காதலை பற்றி ரகசியங்களை உடைத்து விட்டாரோ அதேபோல கமல்ஹாசனும் தன்னுடைய காதலை வெளிப்படையாக பேசியிருந்தார். அதாவது ஸ்ரீவித்யாவுக்கு எனக்கும் இருந்தது காதல்தான். அது சில காரணங்களால் கல்யாணத்தில் முடியாமல் போனது. அதற்காக அதற்கு காதல் இல்லை என்று சொல்ல முடியாது, இப்போதும் என்னுடைய மனதில் ஸ்ரீ வித்யா இருக்கிறார் என்று அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார். பொதுவாக பலர் காதலித்து இருந்தாலும் சில வருடங்கள் கழித்து ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிரிந்து விட்டால் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கமல்ஹாசன் தன்னுடைய காதலை வெளிப்படையாக ஒத்துக் கொண்டது அனைவரையும் வியக்க வைத்தது. அதேபோல இப்போது பெங்காலி நடிகையை அவர் காதலித்த விஷயத்தை ஸ்ருதிஹாசன் ஓபன் ஆக போட்டு உடைத்திருக்கிறார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications