தோ வாரேன்.. திடீரென கையில் ஆயுதத்துடன் வந்திருக்கிறார் கமல்! அடுத்த ஆட்டம் ஆரம்பம்
சென்னை: கமல்ஹாசன் அடுத்தது எந்த படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற கேள்விக்கு ஒரு வழியாக விடை கிடைத்து விட்டது. அதுவும் பெரிய அறிவிப்பு, டைட்டில், கதாநாயகி என எதையும் சொல்லாமல் "தோ வாரேன்" என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி கையில் ஆயுதத்துடன் ஒரு மிரட்டலான லுக்கை வெளியிட்டு ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது ராஜ்கமல் பிலிப்ஸ்.
சமீப காலமாக கமல்ஹாசனின் அடுத்த படம் எது என்பதில் தொடர்ந்து குழப்பம் இருந்து வந்தது. அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த படம் தாமதம் ஆனது. அதே நேரத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் இணையும் படமும் வரிசையில் இருக்கிறது. இதனால் தக் லைஃப் படத்துக்குப் பிறகு கமல் அடுத்து எதில் களம் இறங்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் கேள்வியாகவும் இருந்தது. இந்த குழப்பத்துக்கு நடுவில் தான் இப்போது ஒரு புதிய கமல் படம் திடீரென வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதுவும் சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் உடன்.

பர்ஸ்ட் லுக்
ராஜ்கமல் பிலிப்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கமல் கருப்பு சட்டை, ஆலிவ் பச்சை நிற பேண்ட் அணிந்து கையில் ஒரு ஆயுதத்துடன் நடந்து வருவது போல இருக்கிறார். புகைப்படத்தை விட அதில் இருக்கும் கமலின் பார்வை தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. தோ வாரேன் என்று பதிவிட்டு இயக்குனர் சு அருண்குமாரையும் டேக் செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். அதாவது அடுத்த படம் இதுதான் நானும் ரெடி தோ வாரேன் என்பது போல இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
கமலின் புது பட அப்டேட்
படத்தின் கதை என்ன? ஹீரோயின் யார்? மற்ற நடிகர்கள் யார்? எப்போது படப்பிடிப்பு? படத்தின் பெயர் என்ன? என்ற கேள்விகளுக்கு இப்போதைக்கு பதில் இல்லை. ஆனால் கையில் ஆயுதத்துடன் கமல் கொடுத்திருக்கும் அந்த லுக் மட்டும் போதும், அதுவே எதிர்பார்ப்பை தூண்டுகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். சு அருண்குமார் என்ற பெயர் வந்தாலே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீரதீர சூரன் போன்ற வித்தியாசமான கதைகள் தான் நினைவுக்கு வரும்.

சித்தா பட இயக்குனர்
குறிப்பாக சித்தா படத்தை பார்த்தவர்களுக்கு அருண்குமார் எந்த மாதிரியான கதைகளை எடுக்கக் கூடியவர் என்பது தெரியும். ஒரு சென்சிட்டிவான விஷயத்தை வெறும் சினிமா மசாலாவாக இல்லாமல் மனிதர்களின் உணர்வுகளோடு கையாண்ட விதத்துக்காக அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்படிப்பட்ட இயக்குனருடன் இப்போது கமல் கைகோர்த்து இருப்பதுதான் எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படுத்துகிறது. சரி ஆண்டவரே வாருங்கள் இந்த முறை என்ன கொண்டு வரீங்கன்னு பார்க்கலாம் என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
