கனா காணும் காலங்கள் சீரியல் “சங்கவி”யை நினைவிருக்கா? நடிகை மட்டுமல்ல டாக்டரும்.. ஆளே மாறிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் சங்கவி கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகை மோனிஷா பல வருடம் கழித்து மீண்டும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறி இருக்கிறார். மோனிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோனிஷா நடிகையாக மட்டுமல்லாமல் டாக்டராகவும் இருக்கிறார்.

பொதுவாக சினிமா மற்றும் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர்கள் ஒரு சிலர்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் முதல் சீரியல் அல்லது சினிமாவில் நடித்துவிட்டு அவர்களுக்கென்று ஒரு நல்ல இடத்தை பிடித்து விடுகிறார்கள். பிறகு ஆளே காணாமல் போய்விடுகிறார்கள். அந்த நடிகர்கள் நடித்த சினிமா அல்லது சீரியலை பார்க்கும் போது தான் இவர்களுக்கு என்ன ஆனது என்று மக்கள் மத்தியில் ஒரு தேடல் ஏற்படுகிறது.

Monisha Kana Kaanum Kaalangal Vijay TV

கனா காணும் காலங்கள் சங்கவி

அது போல தான் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த பலர் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய அடுத்தகட்ட வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அதிலும் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்த ஒரு சிலர் சினிமா மற்றும் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை மோனிஷா ரவிச்சந்திரன்

இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல். 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் ஒளிபரப்பாகி வந்தது. இது அப்போதைய இளைஞர்களுக்கு பேவரைட் சீரியலாக இருந்தது. இந்த சீரியலை பார்ப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் காத்திருந்த கதை எல்லாம் உண்டு. பள்ளி மற்றும் கல்லூரி காலத்தை இந்த சீரியலில் அழகாக காட்டி இருப்பார்கள். காதல், நட்பு, சண்டை, கோபம் என எல்லாம் கலந்து கலவையாக இந்த சீரியல் இருந்தாலும் இதில் நடித்த பலர் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்கள்.

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை

கனா காணும் காலங்கள் சீரியலில் சங்கவி கேரக்டர் பலருடைய ஃபேவரைட் ஆக இருந்தது. அந்த சீரியலில் சங்கவி (மோனிஷா) மற்றும் இர்ஃபான் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த சீரியலுக்கு பிறகு மோனிஷா டாக்டர் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இவருக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாகவும் கனவாகவும் இருந்தாலும் அவருடைய குடும்பத்தினர் முதலில் படிப்பு பிறகு தான் நடிப்பு என்று நடிப்புக்கு டாட்டா சொல்லி விட்டார்கள்.

Monisha Kana Kaanum Kaalangal Vijay TV

நடிகை முதல் டாக்டர் வரை

இதனால் இவர் படிக்க வேண்டும் என வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்த சீரியலுக்கான கடைசி இரண்டு எபிசோடுகள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போனாராம். பிறகு வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு சில வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். அதற்கு முன்பு நியூஸ் ரீடராகவும் சில மாதங்கள் தொலைக்காட்சியில் வேலை பார்த்திருக்கிறார். ஆனால் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.


இதயம் முரளி பட நடிகை

கனடா, துபாய் என்று வெளிநாடுகளில் இருந்த இவர் இப்போது சென்னைக்கு மீண்டும் வந்திருக்கிறார் அதோடு சினிமாவுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். நடிகர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இது பற்றி அவரே தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

மீண்டும் கம்பேக்

பெற்றோருக்காக சில வருடங்களாக மருத்துவர் வேலை பார்த்துவிட்டு இப்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. அதனால் நடிக்க வந்துவிட்டேன். கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பிறகு பெரிதாக யாரிடமும் பேச முடியவில்லை. இர்ஃபான் திரைப்படம் வெளியாகும் போது மட்டும் அவருக்கு போன் செய்து அவருக்கு வாழ்த்து சொல்லி இருந்தேன். அதற்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்தி விட்டதால் யாரிடமும் டச் இல்லை என்று மோனிஷா ரவிசந்திரன் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+