கனா காணும் காலங்கள் சீசன் 3: ஆரம்பமே அதகளம்.. அதிலும் முதல் எபிசோடில் அதிர்ச்சி கொடுத்த கூல் சுரேஷ்
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 30ஆம் தேதி கனா காணும் காலங்கள் சீசன் 3 ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த நிகழ்ச்சிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் முதல் நாள் நான்கு எபிசோடு வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
கனா காணும் காலங்கள் சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த பெயரில் விஜய் டிவியில் தான் கனா காணும் காலங்கள் சீரியல் தொடங்கியது. இந்த சீரியலில் பள்ளியில் கதை நடப்பது போன்று சீரியல் பயணித்தது. அதில் பலருடைய ரியல் லைப்பில் சந்திக்கும் பிரச்சனைகள் அந்த சீரியலில் காட்டப்பட்டது, இந்த சீரியலுக்கு கூடுதல் பலமாக இருந்தது. அதனாலேயே இந்த சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சொந்த வாழ்க்கை மற்றும் படிப்பு அவர்களுடைய கனவு, காதல், நட்பு என எல்லாவற்றையும் உள்ளடக்கி இந்த சீரியல் இருந்ததால் இப்ப வரைக்கும் இந்த சீரியலை ரசிகர்களால் மறக்க முடியவில்லை. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியின் காரணமாகவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்று தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு கொரோனா காலகட்டத்தில் ஓடிடி வளர்ச்சி பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்ததும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் சீரியலில் இரண்டாவது பாகம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது.
இதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இந்த சீரிஸின் எபிசோடுகள் வெளியாகி கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனா காணும் காலங்கள் சீரிஸின் இரண்டாவது பாகம் முடிவடைந்ததை தொடர்ந்து மூன்றாவது பாகம் நேற்று அதாவது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

முதல் நாள் 4 எபிசோடுகள் வெளியாகி இருக்கிறது. கனா காணும் காலங்கள் சீசன் 3 தொடரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய சக்தி, நண்டு ஜெகன் மற்றும் பிர்லா போஸ், நடிகர் கூல் சுரேஷ், நடிகர் கிங்ஸ்லி மனைவியான நடிகை சங்கீதா, அதுபோல சுரேஷ் சக்கரவர்த்தி என பலர் நடித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இரண்டாவது சீசனில் நடித்த ஒரு சில நடிகர்களும் மூன்றாவது சீசனில் தொடர்ந்து நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் முதல் நாள் எபிசோடு ரசிகர்களை கவரும் வகையில் இருக்கிறது. அதிலும் ஆரம்பத்திலேயே நடிகை சங்கீதா மகா என்ற மாணவியின் அம்மாவாக நடித்திருக்கிறார். அவர் கோவில் திருவிழாக்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவது போன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரை மேடை நிகழ்ச்சிகளுக்கு கூல் சுரேஷ் கூட்டிக்கொண்டு செல்கிறார்.

அந்த நிலையில் அந்த ஊரில் சுரேஷ் சக்கரவர்த்தி பெரிய பணக்காரராக இருக்கிறார். அவர் பெண்கள் விஷயத்தில் சபலப்பட்டவராக இருக்கும் நிலையில் அவருக்கு பெண்களை அரேஞ்ச் செய்து கொடுக்கும் கேரக்டர்களிடம் கூல் சுரேஷ் இருக்கிறார். சுரேஷ் சக்கரவர்த்தி சங்கீதாவின் மகளை தனக்கு வேண்டும் என்று கேட்டு இருந்த நிலையில் சங்கீதா தன்னுடைய மகளை அங்கிருந்து தப்பித்து வெளியே போகும் படி அனுப்பி விடுகிறார். மகா கடந்த சீசனில் வந்த கலையரசனை சந்திக்கிறார்.
கலையரசன் இப்போது கலெக்டராக இருக்கும் நிலையில் அவர் சிறகுகள் பள்ளிக்கு போகும் படி அவருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறார். இந்த நிலையில் மகா சிறகுகள் பள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். முதல் எபிசோடிலேயே கூல் சுரேஷ் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டுகிறார். காமெடி நடிகராக அவரை பார்த்து இருந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

அதுபோல அடுத்தடுத்த எபிசோடுகளும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. அதிலும் மாணவர்களுக்குள் இருக்கும் சண்டை காட்சிகள் வழக்கம் போல இந்த சீசனிலும் தொடங்குகிறது.அதிலும் இரண்டு மாணவர்களின் தந்தைகள் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கிறார்கள். ஒரு மாணவனின் தந்தை லஞ்சம் வாங்கும் உயர் அதிகாரியாக இருக்கிறார். அவருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது.

ஆனால் இன்னொரு மாணவனின் தந்தை ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் ஆக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்து பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இவர்கள் புதியதாக சிறகுகள் பள்ளியில் சேர்ந்திருக்கும் நிலையில் அங்கேயும் பிரச்சனைகள் வெடிக்கிறது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில கேரக்டர்கள் அடுத்த வாரம் அறிமுகம் என்ட்ரி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications