கனா காணும் காலங்கள் ஜோ யுதன் பாலாஜிக்கு இரண்டாவது திருமணம்! பொண்ணு இவங்க தான்!
சென்னை: 90களின் இளைஞர்களுக்குப் பள்ளிப் பருவ நினைவுகளைத் திரும்பக் கொண்டுவரும் சீரியல் என்றால், அது விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தான். அந்த சீரியலில், ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் யுதன் பாலாஜி. பல வருடங்களாகச் சினிமா மற்றும் சின்னத்திரையிலிருந்து விலகி இருந்த அவர், தற்போது தனது காதலி சுஜிதாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தி, அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

ஜோ முதல் சினிமா நாயகன் வரை
கனா காணும் காலங்கள் சீரியலில் யுதன் பாலாஜி நடித்த ஜோ கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு, இதன் நடிகர்கள் பலரும் சினிமாவுக்குச் சென்றனர். கனா காணும் காலங்கள் குழுவினரை மையமாக வைத்து உருவான பட்டாளம் திரைப்படத்தில், அவர் மீண்டும் ஜோ கதாபாத்திரத்தில் நடித்தார். கனா காணும் காலங்கள் சீரியலில் நகைச்சுவை மற்றும் குறும்புத்தனமான கேரக்டரில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த யுதன் பாலாஜி, பட்டாளம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் இறுதியாக இறந்துபோவது போன்ற காட்சியில் நடித்தார்.
நகர்வலம் மற்றும் பூபதி பாண்டியன் இயக்கிய காதல் சொல்ல வந்தேன் ஆகிய படங்களிலும் அவர் கதாநாயகனாக நடித்தார். காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில், தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் கடைசியில் இறந்துவிடும். பாபி சிம்ஹா மற்றும் பார்வதி நாயனார் நடித்த வெள்ளை ராஜா என்ற படத்திலும் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இரண்டு திருமணங்கள்
சினிமாவிலும், சின்னத்திரையிலும் ஒரு நம்பிக்கைக்குரிய நடிகராக வலம் வந்த யுதன் பாலாஜி, கடந்த 2016ஆம் ஆண்டு பிரீத்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில காரணங்களால், இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அவர்கள் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டனர்.
இந்தச் சூழலில், தற்போது அவர் தனது காதலியான சுஜிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்டு, திரையுலக பிரபலங்களும், அவரது ரசிகர்களும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை
கடந்த 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு யுதன் பாலாஜி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. பல வருடங்களாக அவரைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், அவர் தற்போது தமிழ்நாட்டில் இல்லை என்றும், ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள், ரசிகர்களின் மத்தியில் வைரலானது. "ஜோவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!", "இப்போது ரொம்ப மாறிவிட்டார்!" என்று அவரது ரசிகர்கள் இவரைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். கனா காணும் காலங்கள் சீரியலில் பார்த்த அந்தப் பள்ளிப்பையன், இன்று ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளதை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications