கனா காணும் காலங்கள் சீரியல் "நரேஷ்”க்கு திடீர் என்கேஜ்மென்ட்.. மணப்பெண் இந்த பிரபலம் தானா?
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் நரேஷுக்கு திடீரென எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு காதலித்து வருவதாக நரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நரேஷ் மற்றும் மாதவியின் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் வெளியான நிலையில் அவர்களுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீசன் இரண்டில் மதன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நரேஷ். இவர் இந்த தொடரின் கதைப்படி சிறகுகள் பள்ளிக்கு புதியதாக தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு மாதவி என்பவரோடு நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்று இருக்கிறது.
நரேஷூம் மாதவியும் சில ஆண்டுகளுக்கு காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இருவரும் அதிகமான ரீல்ஸ் வீடியோக்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். அதனாலே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.

இதனால் ரசிகர்கள் இவர்களிடம் சில வருடங்களாகவே எப்ப கல்யாணம் இன்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இருவரும் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்புதான் இதே கனா காணும் காலங்கள் சீரிஸில் நண்பர்களாக அபி, கௌதம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் தீபிகாவும், ராஜா வெற்றி பிரபுவும் திருமணம் செய்திருந்தனர். இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து இப்போது நரேஷ் எங்கேஜ்மென்ட் முடிந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நரேஷ் எங்கேஜ்மென்ட்க்கு கனா காணும் காலங்கள் டீம் சென்று அவர்களோடு ஜாலியாக எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் எப்போ இவர்களுக்கு திருமணம் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications