கனவெல்லாம் நீதானே பாடலில் வரும் ஜோடி.. இப்போ எப்படி இருக்கிறாங்க? வதந்திகளுக்கு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோசியல் மீடியா இன்று எப்படி ஒரு மனிதரை ஒரே இரவில் பிரபலம் ஆக்குகிறதோ அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புகைப்படமும் ஒரு பாடலும் சேர்ந்து இரண்டு பேரை உலகம் முழுக்க பேச வைத்து விட்டது. கனவெல்லாம் நீதானே என்ற பாடல் ஒலிக்க பின்னணியில் ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தான் அது. அந்த ஒரு வீடியோவை பார்த்த பலரும் அது உண்மையான காதல் ஜோடி என்று நம்பி விட்டார்கள். அவர்கள் பற்றி பல கதைகளும் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் நிலைமை என்ன என்று தகவல் கிடைத்து இருக்கிறது.

இப்போது எத்தனையோ பாடல்கள் பிரபலமாகி கொண்டிருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு திலீப் வர்மாவின் "கனவெல்லாம் நீதானே ஆல்பம்" பாடல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் இடம் பிடித்திருக்கும். அந்த சமயத்தில் இப்போது போன்று செல்போன் வசதி அதிகமாக கிடையாது. ஆனாலும் இந்த பாடலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

கனவெல்லாம் நீதானே பிரபலங்கள்

இந்த பாடல் ஒலிக்க பின்னணியில், ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த போட்டோவை வைத்தும் பல கதைகளும் சொல்லப்பட்டது. அதிலும், இந்த அண்ணனும் அக்காவும் காதலிச்சாங்க... வீட்ல எதிர்ப்பு வந்ததால தற்கொலை பண்ணிக்கிட்டாங்க என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர், அந்த பொண்ணு தான் தற்கொலை செய்து கொண்டங்களாம் அதனால காதலன் சோகத்தில் வாழ்கிறார் என்றும் சிலர் கதை கட்டி இருக்கிறார்கள்.

Kanavellam Neethane Dileep Varma 90s Kids Songs 90

வதந்திகள்

இன்னும் ஒரு சிலர் இவர்கள் 2 பேருமே தற்கொலை பண்ணிக் கொண்டதால அவங்களுடைய நண்பர்கள்தான் அவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இப்படி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள் என்று எத்தனையோ கதைகள். ஆனால் இவர்களுக்கு என்னதான் ஆனது? உண்மையில் இவர்கள் இப்போ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகள் 90ஸ் கிட்ஸ் பலருடைய மனதில் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் வந்து போகும்.

கண்டுபிடிக்கப்பட்ட பிரபலங்கள்

இதைப் பற்றி பலரும் இணையத்தில் தேடிப் பார்த்துக் கொண்டோ இருக்கிறார்கள். அந்த தேடலுக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது. அந்த இளைஞரின் பெயர் மில்டன் பால் ஆனந்த். அந்த இளம் பெண்ணின் பெயர் ஜெபா எஸ்தர் ராணி. சமீபத்தில் இவர்களுடைய வீடியோவை வைத்து பலரும் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடியபோது தான் இவர்களுடைய இன்ஸ்டா ஐடி மற்றும் யூடுயூப் தளம் பலருடைய கைகளில் சிக்கி இருக்கிறது.

Kanavellam Neethane Dileep Varma 90s Kids Songs 90

சோசியல் மீடியா அக்கவுண்ட்

அதாவது இவர்கள் இருவரும் பிரைவேட்டாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை வைத்திருக்கிறார்கள். அதில் நெருங்கிய நண்பர்களை மட்டும் அக்செப்ட் செய்து வைத்திருக்கிறார்கள். அதுபோல மில்டன் என்கிற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் இவர்கள் இருவருடைய திருமணம் மற்றும் ரிசப்ஷன் வீடியோவும் பகிரப்பட்டு இருக்கிறது. அதிலும் மொத்தம் 7 வீடியோஸ் தான் போட்டு இருக்கிறது. அந்த யூடியுப் சேனலும் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் என்ன ஆனது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை, இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற செய்தி கிடைத்திருந்தாலும் ஏன் இவர்கள் பற்றிய தேடல்களுக்கு பதில் சொல்லவில்லை என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

ரசிகர்கள் கருத்து

எது எப்படியோ இவர்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்தாலே போதும் என்று பலர் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் சின்னதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் கிடைத்து விட்டாலே அதை வைத்து பல சேனல்களில் பேட்டி கொடுத்து வருபவர்களை பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் அதை வைத்து நாங்க தான் அந்த ஜோடி, இப்போது இப்படி இருக்கிறோம்... இதை செய்து கொண்டிருக்கிறோம் என்று எந்த வீடியோவும் போட்டு பந்தா பண்ணவில்லையே என்பதே இவர்களை தேடிக்கொண்டிருக்கும் ரசிகர்களின் பாராட்டாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+