கருப்பு ஆடு.. நடிகர் சிவக்குமார் வீட்டுக்குள்ளே? சூர்யாவின் கங்குவா தோல்விக்கு காரணம்? பிரபலம் நறுக்
சென்னை: விமர்சனங்களால்தான், கங்குவா படம் ஓடவில்லை என்று சூர்யா குடும்பத்தினர் சொல்வதை தான் ஏற்கவில்லை என்று பிரபல டைரக்டர் கே.ஆர். தெரிவித்துள்ளார்.. சூர்யாவை அரசியல்வாதிகள் டார்கெட் செய்வதாக கசிந்து வரும் தகவலையம் கே.ஆர். திடமாக மறுத்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், கங்குவா பட தோல்வி குறித்தும், அதற்கான காரணத்தையும் கூறியிருந்தார்.

"சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்" என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, "எதிர்மறை விமர்சனங்களால் "கங்குவா" திரைப்படம் கடும் சரிவை சந்தித்துள்ளது. எனவே, தியேட்டருக்கு வெளியே யூடியூப் சேனல்கள் படம் தொடர்பான விமர்சன பேட்டிகளை எடுக்க கூடாது" என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, பிரபல டைரக்டர் கே.ஆரிடம் Medica Circle யூடியூப் சேனலில் கருத்து கேட்கப்பட்டது.
தொழில் தர்மம்: இதற்கு கே.ஆர். சொல்லும்போது, "என்னுடைய நண்பர்தான் திருப்பூர் சுப்ரமணியம்.. பல வருடங்களாக இந்த துறையில் உள்ளார்.. படம் எடுத்து பாதிக்கப்பட்டதால் இப்படி சொல்கிறார்.. 1000 பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்பது போல, எந்தவொரு படத்தையும் பலவாறாக புரமோஷன் செய்வதும் தொழில் தர்மம்தான். அதை நான் தவறென்று சொல்ல மாட்டேன்.
ஆனால், "கங்குவா" படத்தில் அது ஓவர்டோஸ் ஆகிவிட்டது. நம்ப முடியாத அளவுக்கு மிகையாக சொல்லப்பட்டுவிட்டது. எதிர்பார்த்திருந்த அனைவருக்குமே இந்த படம் ஏமாற்றத்தை தந்துவிட்டது.. எந்த படமாக இருந்தாலும், முதல் நாளே, அவைகளின் விமர்சனங்களை படித்துவிடுவேன். பெரும்பாலும் ஆந்திர படங்களுக்குதான், அபத்தமான விமர்சனங்கள் இருக்கும். அதனால், ஆந்திர படங்களின் விமர்சனங்களை நம்ப மாட்டேன்.
விமர்சனங்கள்: ஆனால், தமிழ் படங்களில், விஜய், அஜித் படங்கள் என்று வரும்போதுதான், ரசிகர்கள் முதல்நாள் ரிலீஸின்போது விமர்சனங்களை காரசாரமாக முன்வைப்பார்கள்.. ஆனாலும், நம்ம ஆளுங்க விமர்சனம் சொன்னால் அதில் ஒரு தர்மம் இருக்கும். அநியாயமாக சொல்ல மாட்டாங்க. அதிலும் பெண்கள் சொல்லும் விமர்சனங்கள், எப்போதுமே 95 சதவீதம் நல்லவிதமாகவே இருக்கும். தப்பான படமே இருந்தாலும், அதை தப்பா சொல்ல மாட்டாங்க. மனிதாபிமானம் பெண்களிடம் அதிகமாகவே இருக்கும்.
இந்த கங்குவா படத்தை மட்டும் ஏன் இவ்வளவு சொல்கிறார்கள்? அப்படியானால், இதுக்கு முன்னாடி படங்கள் எதுவுமே தோல்வி அடையவில்லையா? விமர்சனங்கள் எதுவுமே மோசமாக வந்ததில்லையா?
தங்களை டார்கெட் செய்வதாகவும், அதனால்தான் படம் ஓடவில்லை என்றும் சூர்யா குடும்பத்தினர் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.. 2000 கோடி, 5000 தியேட்டர்கள் என்று இந்த படத்தை மிகைப்படுத்தி சொன்னதுதான் முக்கிய காரணம்.
யாரந்த எதிரி: சூர்யாவை எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. இவருக்கு யார் எதிரி என்றுதான் தெரியல? அரசியலில் எதிரி என்கிறார்கள்-. அப்படியெல்லாம் எனக்கு தெரிந்து யாருமே இல்லை.. முக்கிய காரணம், கங்குவா படம் சரியில்லை, சவுண்ட் சிஸ்டம் பற்றி, ஏதாவது ஒரு இடத்தில் குறை சொன்னால் பரவாயில்லை.. ஆந்திராவில் தெலுங்கு, மலையாளம், இந்தியில் எல்லாம் திட்டறாங்க
பான் இந்தியா என்றால் இப்படியான பிரச்சனைகள் வரத்தான் செய்யும். விக்ரம் படத்தை எடுத்துக் கொண்டால், முதல்நாள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.. ஆனால், 2வது ஷோவில் தாறுமாறாக பிக்கப் ஆகிவிட்டது. கேஜிஎப், பாகுபலி போன்றவைதான் பான் இண்டியா படங்கள்.. டப் பண்ணப்படும் படங்களும், பான் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் படங்களும், பான் இந்தியா படங்களாகிவிட முடியாது.
விமர்சனங்கள்: எனவே, விமர்சனத்தால் படம் கெட்டுவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது. முதலில் இதை சூர்யா குடும்பத்தினர் ஏற்று கொள்ள வேண்டும்.. அவர்கள் அனைவருமே சினிமா அறிவுள்ளவர்கள்தான்.. சினிமாவை பற்றி அனைத்தும் அறிந்தவர்கள்தான்.. சவுண்டு சிஸ்டம் பற்றி தெரியலையா? அல்லது மற்ற டெக்னிஷியன்கள் இதுகுறித்து அவர்களிடம் சொல்லவில்லையா? குடும்பமே ஏதோ மாயையில் சிக்கிவிட்டார்கள்.. ஏதோ தவறாக போய்விட்டது. எப்போதுமே மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தவறிலிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும்.
ஜால்ராஅடிக்க பலர் இருந்தாலும், உண்மை பேசக்கூடிய நண்பர்களை, கூடவே வைத்திருக்க வேண்டும். அவங்க ஆளுங்களுக்கே கால்ஷீட் தந்து கொண்டிருந்தால் எப்படி? வெளியில் உண்மையான மார்க்கெட் நிலவரத்தை அவர்களுக்கு எடுத்துச்சொல்ல ஆட்கள் கிடையாது.
திறமையான நடிகர்: அதேபோல, தன்னுடைய படங்களை ஓடிபிக்கு தருவதாலும் மக்களுக்கும், தியேட்டருக்குமான தொடர்பும் மெல்ல குறைந்துவிடும். கங்குவா நடிகர் திறமையானவர்.. அவரை குறை சொல்ல முடியாது. சிவக்குமார், சூர்யா, கார்த்திக் என ஒட்டுமொத்த குடும்பமும் மிக நல்ல குடும்பம். டிசிப்ளின் நிறைந்தவர்கள்.. ஆனால், சமீப காலமாகத்தான் இப்படியெல்லாம் நடக்குது..
சூர்யா குடும்பத்தினரை யாரும் டார்கெட் செய்யவில்லை.. ஆனால், இப்படி "டார்கெட்" என்று முதல்முதலில் கிரியேட் செய்தவர் யார்? அந்த நபர் அவங்களுக்குள்ளேயேதான் இருக்காங்க.. அவர் யாரென்று நான் சொல்ல விரும்பல. ஓவராக பூஸ்ட் செய்து, சூர்யா குடும்பத்தினரின் கவனத்தை பெறுவதற்காக, ஓவராக ஜால்ரா அடித்து இப்படி செய்கிறார்கள். அதனால், உங்க கால்லயே பாம்பு சுத்தியிருக்கு. அதை யாருன்னு கண்டுபிடிங்க
கர்மவினை: உள்ளுக்குள்ளேயே ஆள் இருக்காங்க.. இதைதான் கர்மவினை என்பார்கள்.. இதற்கு பிறகாவது உண்மைத்தன்மை என்ன? வீட்டுக்குள் என்ன நடக்குது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் மீது பழிபோடுவதில் பிரயோஜனமே இல்லை.. தப்பானதை சரி செய்ய வேண்டியிருக்கு.. தற்போது கோயில்களுக்கு சூர்யா, ஜோதிகா சென்று வருவதை பார்க்கும்போது, உணர துவங்கிவிட்டார்கள் என்றே தெரிகிறது.. அப்படி உணர்ந்துகொண்டால், அது நல்ல விஷயம்தான்" என்று கே.ஆர். தெரிவித்துள்ளார்.
-
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications