Kanmanai Serial: அது சரி... அப்ப அந்த பாலை யாருதான் குடிச்சா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம் நடக்க கூடாது என்று சென்னையிலிருந்து ஒரு டாக்டரிடம் கிட்டத்தட்ட கோமாவுக்கு போவது மாதிரியான போதை மருந்து வரவழைச்சதா கிருஷ்ணவேணி சொன்னாங்க.
ஆனால், அந்த பாலை கண்ணன் குடிக்கலை. அதே கிருஷ்ணவேணி அம்மா, இந்த கல்யாணம் நடக்க கூடாது என்று கண்டிஷன் போட்ட சம்பந்தி அம்மாவுக்கு அந்த பால்தான் என்று தெரியாமல், அதை குடிக்க கொடுக்கறாங்க.
கடைசியில் சம்பந்தி அம்மாவும் ஒண்ணும் நடக்கமால் காலையில் முழிச்சுக்கறாங்க. ஆனால், இவங்க பையன் ஆகாஷ், அதுவும் வளர்மதியின் மாப்பிள்ளையைத்தான் காணோம்.

கை மாறிய பால்
கண்ணனுக்கு குமரேசன் பாலில் மருந்து கலந்து கொடுத்தான்.அந்த பாலை குடிப்பதற்குள் கண்ணனுக்கு போன். அதற்குள் அன்பு அக்கா வந்து பால் தர்றாங்க.குமரேசன் பால் குடுத்துட்டான்னு கண்ணன் சொல்ல, இருந்தாலும் நீ பாசத்தோடு குடுக்கற பாலை குடிக்கறேன்க்கான்னு சொல்லி கண்ணன் அந்த பாலை வாங்கிக்கறான்.

மறுத்து சவுந்தர்யாவுக்கு
இந்த பாலை யாருக்குக்கா கொண்டு போறேன்னு கண்ணன் கேட்க, சவுந்தர்யாவுக்குத்தான். அவளும் எதுவும் சாப்பிட கூடாதேன்னு சொல்லிட்டு போறாங்க. விஜயலட்சுமி இந்த பால் யாருக்கு கொண்டு போறேன்னு கிருஷ்ணவேணி கேட்கறாங்க.சவுந்தர்யாவுக்குத்தான்னு இவங்க சொல்ல,அவளுக்கு வேற பால் குடு. சம்பந்தி அம்மா கோவத்துல இருக்காங்க.அவங்களுக்கு இந்த பாலை தருகிறேன்னு வினை விதைச்சவங்களுக்கே அந்த பால் போகுது.

கல்யாணத்தை நிறுத்த
அது சரி, கல்யாணத்தை நிறுத்த முதல் நாள் இரவுதான் பாலை குடிப்பாங்க.இவங்க என்னடான்னா கல்யாண டான்ஸ் ஆடணும்னே காலையில் இந்த பால் கொடுக்கும் வைபோகத்தை நடத்தி இருக்கிறார்கள்.கொஞ்சமும் லாஜிக் இல்லாமல்.

கடத்திதான் செல்லப்பட்டான்
வளர்மதியின் மாப்பிள்ளை ஆகாஷ் கூட கடத்தித்தான் செல்லப்பட்டான். அப்படியானால் அளந்த பாலை குடித்தது யார்? இரவில் பால் குடித்தால்தானே எழுந்திரிக்காமல் கோமாவுக்கு போன மாதிரி படுத்து கிடப்பார்கள் என்று கிருஷ்ணவேணி தனது சம்பந்தியிடம் சொன்னார். பின்னே இப்படி கதையை கொண்டு போகிறீர்கள்?. பார்க்கும் மக்கள் முட்டாள்களா?.
காலையில் கண்ணனுக்கு பால் தர வேண்டியதன் அவசியமென்ன? கல்யாணம் எப்படி நிற்கும்?
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications