Kanmani Serial: ரைட்டுல கண்மணி.. லெப்ட்டுல ரோஜா.. சென்டர்ல நாம.. பலே சன் டிவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கடந்த ஒரு வாரமா ரொம்ப விறுவிறுப்பு. என்னடா...ஒரேயடியா சுறுசுறுப்பா எபிசோட் கடக்குதே... அப்புறம் கன்டென்ட் கிடைக்காம போனால் என்ன பண்ணுவாங்கன்னு நம்மையே யோசிக்க வச்சு இருக்காங்க.

அம்மா கிருஷ்ணவேணி வில்லத்தனம் செய்துக்கொண்டு இருக்க. போகப் போக மகள் வளர்மதியை மெயின் வில்லியா கொண்டு வந்து கதை விறுவிறுன்னு நகருது. இப்போதைக்கு தர்மதுரை ஐயா மரணத்தை வச்சு கதையில் விறுவிறுப்பு கொண்டு வந்துட்டாங்க.

8:30 மணி ஸ்லாட் என்பது கண்மணிக்கு முன் இந்த அளவுக்கு மக்களை எந்தத் சீரியலும் கட்டிப் போட்டதில்லை என்று சொல்கிறார்கள். இனி இந்த நேரத்தையும் சன் டிவி மிகப் பெரிய வணிகமாக்கும் என்றும் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே ரோஜா சீரியல் மாலை 7 மணி நேரத்தை ஆக்கிரமித்து வருகிறது. கடும் போட்டியில் ரோஜா, கண்மணி சீரியல்கள் உள்ளன.

7:30 ஸ்லாட் திருமுருகன்

7:30 ஸ்லாட் திருமுருகன்

சன் டிவியில் சித்தி முதல் சீசன் ஆரம்பித்த சமயத்தில்தான் சன் டிவி சீரியல்களில் அனைத்து சானல்களையும் முந்தியது. அதுவரை பொதிகை, ராஜ் தொலைக்காட்சி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் மக்கள் சீரியல்கள் மற்ற நிகழ்ச்சிகள் என்று பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். சித்தி ஏற்படுத்திய அதே சூட்டில்தான் 7:30 மணி ஸ்லாட்டை சன் டிவி திருமுருகனுக்கு ஒதுக்கித் தந்தது.

மெட்டி ஒலி

மெட்டி ஒலி

திருமுருகனும் தனக்கு சன் டிவி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு 7:30 மணி நேரத்தை மக்கள் சன் டிவி முன் அமரும் நேரமாக மாற்றி, வணிக ரீதியான வெற்றியை சன் டிவிக்கு கொடுத்தார். மெட்டி ஒலி முடிந்து, திருமுருகன் பெரியத் திரைக்கு சென்றார். அதற்குப் பின்னர் 7:30 மணி ஸ்லாட் அந்த அளவுக்கு வணிக வெற்றியை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

நாதஸ்வரம் சீரியல்

நாதஸ்வரம் சீரியல்

சன் டிவி மறுபடியும் திருமுருகனுக்கு நாதஸ்வரம் சீரியல் தயாரித்துக் கொடுக்க வாய்ப்பு தந்தது.மீண்டும் 7:30 மணி நேரம் வணிக ரீதியாக சன் டிவிக்கு வெற்றியை தந்தது. இதில் இருந்து அந்த ஸ்லாட்டை சன் டிவி திரு பிக்சர்ஸ் திருமுருகனுக்கே ஒதுக்கித் தந்து வருகிறது. அன்றிலுருந்து இன்றுவரை 7:30 மணி ஸ்லாட் வணிக நேரமாக இருக்கிறது.

சித்தி- சித்தி 2

சித்தி- சித்தி 2

சித்தி முதல் சீசன்... அடுத்தடுத்தான ராதிகா சரத்குமார் தொடர்கள் வரை 9:30 மணி ஸ்லாட் ரேட்டிங் நேரமாக பார்க்கப்பட்டது. ஆனால், சந்திரகுமாரி சீரியல் ஃ பெயிலியர் ஆனதில் இருந்து 9:30 மணி நேரம் என்பது டோட்டலா ஃ பெயிலியர் ஸ்லாட்டகவே இருந்து வருகிறது. மாறாக 9 மணி ஸ்லாட் ரேட்டிங் நேரமாக பார்க்கப்படுகிறது.

கண்மணி 8:30 ஸ்லாட்

கண்மணி 8:30 ஸ்லாட்

சன் டிவியில் நாயகி சீரியல் முடிந்து 8:30 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் மக்களை வெகுவாக கவர்ந்து ரேட்டிங்கில் இடம்பிடிக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளது. 7 மணிக்கு ரோஜா, 9 மணிக்கு கண்மணி சீரியல் என்று இரண்டு சீரியலும் பரபரப்பாக இருப்பதாக ரசிகர்கள் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+