For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புருஷன் ஆசையா கேட்டதுல தலைகால் புரியாத கண்மணி .. எத்தனை நாளைக்குடா ஏமாறுவாங்க?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் செழியனுக்கு இன்கிரிமெண்ட் போடறாங்க.. ஒரு ரூபாய் இல்லை, ரெண்டு ரூபாய் இல்லை 11 ஆயிரம் ரூபாய் இன்கிரிமெண்ட்.

கம்பெனியில எல்லாரும் ட்ரீட் கேட்கறாங்க.. அதுவும் உங்க மனைவி சமைக்கற மட்டன் பிரியாணிதான் வேணும்னு சொல்றாங்க. இவனும் பொண்டாட்டி கண்மணிக்கு போன் செய்து 6 பேருக்கு பிரியாணி செய்து தர முடியுமா கண்மணின்னு கேட்கறான்.

புருஷன் ஆசையா கேட்டதுல தலைகால் புரியாத கண்மணி, இன்கிரிமென்ட், பிரியாணி விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்றா. எல்லாருக்கும் மகிழ்ச்சி.. பாவம் செழியன் மேல ஆசைப்பட்ட சுகாசினிக்கு வயிறு எரியுது.

சிக்கன், மீன்

சிக்கன், மீன்

மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மீன் வறுவல் செய்துடறேங்கன்னு சொல்றா. இத்தனை எதுக்கு கண்மணி.. பிரியாணி மட்டும் போதும்னு சொல்றான் செழியன்.இல்லைங்க சாப்பிடறவங்க வயிறாற சாப்பிடணும்ங்கன்னு கண்மணி சொல்ல சரி செய்து குடுத்துவிடு கண்மணின்னு சொல்றான் புருஷன்.

என் மீட்டர்... மேட்டர் மாஸ்டருக்கு தெரியும்.. ஜீனியஸ் கோவை சரளாஎன் மீட்டர்... மேட்டர் மாஸ்டருக்கு தெரியும்.. ஜீனியஸ் கோவை சரளா

இரு சாப்பாட்டுல

இரு சாப்பாட்டுல

இருடி இரு.. நல்லா சமைச்சு வை.. சாப்பாட்டை எப்படி கெடுக்கறேன்னு பார்னு சுகாசினி மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு, வேலைய பார்க்க போறா. கண்மணி, சுமதி, மேகலா மூவரும் அருமையா சமச்சு டேபிள் மேல வச்சுட்டு, ஆட்டோ கூப்பிட போக, எல்லாத்தையும் திறந்துட்டு உப்பு, காரத்தை அள்ளிக் கொட்டறா சுகாசினி.

சந்திர லேகா சீரியலில்

சந்திர லேகா சீரியலில்

சந்திர லேகா சீரியலில் மாமனாருக்கும், புருஷனுக்கும் அருமையா விதம் விதமா சாப்பாடு சமைச்சு எடுத்துட்டு போக ரெடி பண்றா நிலா.. ஏற்கனவே மாமியார் தன் சொந்தகார பொண்ணை மகனுக்கு கட்டி வைக்க நினைக்கறாங்க.அது மிஸ்ஸானதுல வயித்தெரிச்சல் மாமியாருக்கு.

கேரியரில்

கேரியரில்

டேபிள் மேல் சாப்பாட்டை கேரியரில் வச்சுட்டு, உள்ள போறா நிலா. அதுக்குள்ளே, மாமியார் உப்பு, காரத்தை கொட்டிடறாங்க. நிலா வந்து எடுத்துக்கிட்டு போறா. அங்க ஏற்கனவே நிலா புருஷன் மேல ஆசைப்பட்ட அனு வேலை செய்யறா. அனுக்கிட்ட தான் செய்த வேலையை சொல்லி, எப்படி அங்க சாப்பிடறாங்க என் பையனும், புருஷனும்னு பாருன்னு மாமியார் சொல்றாங்க.

ஓஹோ சாப்பாடு

ஓஹோ சாப்பாடு

ஆஹா.. ஓஹோ சாப்பாடுன்னு மாமனாரும், புருஷனும் புகழ்ந்து தள்ள அனு கடுப்பாகி, ஆன்ட்டி.. நீங்க என்ன சொன்னீங்க.. இங்க ரெண்டு பேரும் ருசிச்சு சாப்பிடறாங்கன்னு போன்ல சொல்ல.. அவ்ளோ உப்பு காரத்தை கொட்டினோமே எப்படி நல்லாருக்கும்னு யோசிக்கறாங்க நிலாவின் அத்தை.

எடுத்து வை

எடுத்து வை

நிலாவின் மாமியார் வேலைக்காரிகிட்ட சாப்பாடு எடுத்து வைன்னு சொல்றாங்க. வேலைக்காரியும் சாப்பாட்டை எடுத்து வைக்கறா. வாயில வச்சா உப்பு, காரம்..என்ன இப்படி இருக்குன்னு கேட்க, ஐயோ எனக்குத் தெரியாதும்மா.. நிலாம்மாதான் இனிமே நான் சாப்பாடு எடுத்துக்கிட்டு போவேன்.. நானே சமைச்சுக்கறேன்னு சொல்லிட்டு, இந்த சாப்பாட்டை உங்கள்ளு வைக்க சொன்னாங்கன்னு சொல்றா.

மாத்தி யோசி

மாத்தி யோசி

சோ, இப்போ இங்க நிலா ஏமாறலை. எத்தனை நாளைக்குத்தான் இப்படி சீன வைப்பீங்க.. சமைச்சவங்க மாட்டிக்கிட்டு முழிக்கறதுன்னு. மாத்தி யோசிச்சு இருக்காங்க.

பிரியாணி

பிரியாணி

லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில், பாக்கியலட்சுமி பிரியாணியை எல்லாரும் ரசிச்சு, ருசிச்சு சாப்பிட தயாராகறாங்க. அந்த வீட்டுல பாக்கிய லட்சுமியை பிடிக்காத குஷ்பூவின் ஓரகத்தி டாக்டர் அநியாயத்துக்கு, உப்பு காரத்தை கொட்டிட்டு, எப்படி சப்படறீங்கன்னு வேடிக்கை பார்க்கறா.

ஆஹா.. ஓஹோ..

ஆஹா.. ஓஹோ..

இங்கேயும் எல்லாரும் பாக்கியலட்சுமி பிரியாணியை ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து சாப்பிட, என்னவாயிருக்கும்னு யோசிக்கறா டாக்டர்.கடைசியில வேலைக்காரி பொன்னம்மா இந்த டாக்டரம்மா கொட்டின, உப்பு காரத்தை பார்க்கறா. அதை கீழே கொட்டிட்டு புதுசா சமைக்க ஆரம்பிக்கறாங்க.

குஷி

குஷி

இங்கேயும் தந்திரம் வேலைக்கு ஆகலை.. இதெல்லாம் பார்க்கும் ஆடியன்ஸ் நிஜமாவே குஷியாகிடறாங்க. இல்லேன்னா இப்படி சமையலை கெடுக்கறாளேன்னு டென்ஷன்ல இருப்பாங்க.

English summary
Everyone in the company asks for the treat .. That's your wife's cooking biriyani is just saying
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X