திடீர்னு பார்த்தா.. ரம்யா பாண்டியன் தங்கச்சி மாதிரியே இருக்காங்களே.. யாரு இது?
சென்னை: எல்லாமே திடீர் திடீர்னுதான் நடக்குது நம்ம ஊர்ல. அந்த வகையில் இப்போது திடீரென ஒரு டிவி பிரபலம் வெகு பிரபலமாகி விட்டார் சமூக வலைதளங்களில். அவர்தான் கண்மணி.
இந்த கண்மணி வேறு யாருமல்ல.. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். திடீர்னு இவரைப் பார்த்தால் ரம்யா பாண்டியன் தங்கச்சி சாயலில் இருக்கிறார்.
அனிதா சம்பத் எப்படி சமூக வலைதளங்களில் ரசிகர்களின் டார்லிங்காக வலம் வந்தாரோ,, டிட்டோ இவரும் அதே போல வீடியோ போடுவது, அபிநயம் காட்டுவது, சிரிப்பது என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.

லாஸ்லியா போலவே
டிவி செய்தி வாசிப்பாளர்களிலேயே முதலில் பிரபலமானது நம்ம லாஸ்லியாதான். இலங்கைத் தமிழ்ப் பெண்ணான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். பிறகென்ன அடுத்தடுத்து நிறைய நியூஸ் ரீடர்களை பிக் பாஸ் வீடு பார்த்து விட்டது. பாத்திமா பாபு வந்து போனார். அனிதா சம்பத் வந்து அழுது விட்டுப் போனார்.

அனிதாவின் ராஜபாட்டை
அனிதா சம்பத் கதை தனிக் கதை. அவர் முதலில் பிரபலமானது சமூக வலைதளங்களில்தான்.. அவருக்குக் கிடைத்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்துதான் மெல்ல மெல்ல லைம்லைட்டுக்கு அவரை கூட்டி வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலவையான கருத்துக்களைப் பெற்றார் அனிதா சம்பத். இப்போது அதே ரூட்டைப் பிடித்துள்ளார் அதே சன் டிவியைச் சேர்ந்தவரான கண்மணி சேகர்.

கண்மணி சேகர்
பக்கா மெட்ராஸ்காரரான கண்மணி படிச்சதெல்லாம் லயோலாதான். ஸோ இயல்பாகவே இவருக்குள் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் எக்கச்சக்கமாகவே இருக்கிறதாம். நல்லா போட்டோ எடுப்பார். போட்டோவுக்கும் நல்லா போஸ் கொடுப்பார். இவர் போடாத வீடியோக்கள் இல்லை. மாடர்ன் டேஸ் அபிநய சரஸ்வதி போல இவரும் ஸ்டைலாக கலக்குகிறார்.

ஹேப்பியா இருக்கணும்
பெருசா எந்த குறிக்கோளும், இலக்கும் இல்லையாம். ஆனால் எப்பவும் ஹேப்பியாக, உற்சாகமாக, ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைய இருக்காம். வாழ்க்கையை அதன் போக்கிலேயே ரசிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவராம். சேலையில் பாந்தமாக இருந்தாலும் மாடர்ன் உடைதான் இவருக்கு ரொம்ப இஷ்டமாம்.

மாடர்ன் மங்கை
டிவி செய்தி வாசிக்கும்போது மட்டும்தான் சேலையாம். மற்ற நேரத்தில் தூக்கிப் போட்டு விடுவாராம். திரும்பிக் கூட பார்க்க மாட்டாராம். சமீபகாலமாக இவரது புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அனிதாவின் ஆர்மியைக் கலைத்து விட்டு அப்படியே கண்மணியின் கண்டோன்மென்ட்களாக இளைஞர்கள் மாறி விட்டனர்.

லாஸ்லியாவா அல்லது அனிதாவா
ரசிகர்களின் ஏகோபித்த அலை மோதல்களைப் பார்த்துப் பூரித்துப் போன கண்மணி அப்படியே ஸ்வீட் ஷாக்காகி தினசரி ஒரு வீடியோ போடுவதை தவம் போல செய்து வருகிறாராம்.. சும்மா சொல்லக் கூடாது.. ஜாலியாதான் இருக்கிறது ஒவ்வொரு வீடியோவும். இவரது வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள்.. நோட் பண்ணுங்கப்பா அக்காதான் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் என்று ஏற்றி விட்டு வருகின்றனர். அதையும்தான் பொறுத்திருந்து பார்ப்போமே!
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications