Kanmani Serial: சவுண்டு பேச்சை கேட்டு அவளை கல்யாணம் செய்து.. அவஸ்தை ஆகாஷ்!
சென்னை: என்னதான் காதலித்தவர்கள் நண்பர்களாக மாறினாலும், இந்த உலகம் அதை ஏற்றுக் கொள்வது என்பது கடினம்தான் என்பதை சன் டிவியின் கண்மணி சீரியல் நன்றாகவே உணர்த்துகிறது.
ஆகாஷை வெளிநாட்டில் படிக்கும்போது காதலித்தவள் சவுந்தர்யா. வீட்டுக்கு வந்த பிறகு, கல்யாண ஏற்பாடுகள் நடக்குது.இவளை சிறு வயதில் இருந்தே காதலித்த சின்னவர் கண்ணனுக்கு ஏமாற்றம்.
கடைசியில் ஆகாஷுடன் நடக்க இருந்த கல்யாணம், அவனின் அம்மாவால் நின்று போக, இப்போது கண்ணன் மாமா மீது காதல் வந்து, சவுந்தர்யா கண்ணன் கல்யாணம் நடக்குது.

வளர்மதி ஆகாஷ்
சவுந்தர்யாவின் சித்தப்பா பெண் வளர்மதிக்கு ஆகாஷ் மீது காதல் வந்துருது. ஆகாஷ் அந்த வீட்டில் பெண் எடுக்க வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும், ஆகாஷ்தான் வேண்டும் என்கிறாள் வளர்மதி. அவனை சவுந்தர்யா சமாதானம் செய்கிறாள். நம்ம படிச்சவங்க ஆகாஷ், காதல் எல்லாம் இனக் கவர்ச்சியில் வந்தது. என் அடி மனசில் என் மாமா மேலதான் காதல் இருந்திருக்கு.

என்னை நீயும்
என்னை நீயும் மறந்துட்டு, வேறு வாழ்க்கைக்கு தயாராகிட்ட. அப்புறம் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறதில் என்ன தப்பு. உனக்கும் வளர்மதியை பிடிச்சு இருக்கு. வளருக்கும் உன்னை பிடிச்சு இருக்கு. நாம மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம் ஆகாஷ். இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுன்னு சொன்ன உடனே ஆகாஷ் சம்மதிக்கிறான்.

சந்தேகத் தீ
இப்போது வளர்மதிக்கு ஆகாஷ் சவுந்தர்யா எது சொன்னாலும் கேட்கிறான்.அவள் சொல்றதை மட்டும்தான் கேட்கிறான்னு நினைப்பு வருது.முதல் இரவில் ஆகாஷின் அம்மாவுக்கு மிகவும் உடம்பு சரி இல்லாமல் போக, அவன் சவுந்தர்யாவை நினைச்சுக்கிட்டுத்தான் தன்னை தொடலைன்னு ஓவரா பேசுகிறாள் வளர்மதி. விளைவு, முதலிரவில் முதன் முதலில் கணவன் ஆகாஷ் தொட்டது, கன்னத்தில் பொளேர் என்று அறை விட்டதன் மூலமாகத்தான்.

ஆகாஷ் வெறுப்பில்
இப்படி வளர் சந்தேகப் படுவதில் ஆகாஷ் வெறுப்பில் இருக்கிறான். சவுந்தர்யாவுடன் சேர்த்து வைத்து சந்தேகப்படுகிறாள். பாவம் இவளிடம் மாட்டிக்கொண்டு பாடாய் படுகிறான். இந்த நிலையில்தான் தனது அம்மா கண்ணனுக்கு வைக்க சொன்ன விஷமே ஆகாஷின் அம்மா கைக்கு குடிக்கும் பாலாக வந்து விடுகிறது.
இப்படி பல கோணங்களில் கதை நகர்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications