Kanmani serial: எமோஷன்ஸ்.. சின்னவரே சூப்பர் நடிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் பொறுமை பொறுமை என்றாலும், எமோஷனலை அடக்குவது என்பது எளிதல்ல. இதற்கு யாரும் விதி விலக்கு இல்லை.

சின்னவரே சின்னவரே என்று அந்த ஊர் மக்களே அழைக்கும் கண்ணன் அண்மை காலமாக பொங்கி எழுவது பார்க்க நன்றாக இருக்கிறது.

சன் டிவியின் கண்மணி சீரியலில்தான் சஞ்சீவ் சின்னவர் கண்ணணாக நடித்து.எல்லார் மனதிலும் திருமதி செல்வம் சீரியலுக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்து இருக்கார்.

சின்னவரை மதிப்பதில்லை

சின்னவரை மதிப்பதில்லை

சின்னவர் என்று ஊர் மக்கள் கண்ணனை அன்போடு அழைத்தாலும், வீட்டில் அக்கா மாமா தர்மராஜ், அக்கா பெண்கள் மட்டுமே கண்ணனை பாசமாக நேசிக்கிறார்கள். இவர்கள் தவிர, வீட்டோடு இருக்கும் இரண்டு மாப்பிள்ளைகள், மாமாவின் தங்கைகள், அவர்களின் மாப்பிள்ளைகள், சின்ன மாமா, சின்ன அத்தை என்று யாரும் கண்ணனை மதிப்பதில்லை.

அக்காவுடன் ஒட்டிக்கிட்டு

அக்காவுடன் ஒட்டிக்கிட்டு

அக்காவுடன் பின் வாசல் வழியாக வந்தவன், ஒண்ட வந்த பிடாரி என்றெல்லாம் கண்ணனைத் திட்டுவது இவர்கள் வழக்கம். அதுவரை மாமாவுக்காக அடக்கி வாசித்த கண்ணன்,. மாமா இறந்ததும் அடியோடு மாறிப் போகிறான். அவன் இருக்கும் தைரியத்தில்தான் அக்காவும் நிம்மதியாக இருக்கிறார்கள்.

தேவை சின்னத் திரைக்கு

தேவை சின்னத் திரைக்கு

தனக்கு பாலில் விஷத்தை கொடுத்தது யார் என்று தெரிந்துகொண்டு, குமரேசனை மிரட்டும் காட்சிகளில் அருமையாக நடித்து இருக்கார். அரை பக்க டயலாக்கை கோவத்தோடு, கொஞ்சமும் பிசகாம ல் ஒரே டேக்கில் பேசி முடித்து இருக்கும் சஞ்சீவ் போன்ற கலைஞர்கள் சின்னத் திரைக்கும் தேவை.

அரிது இப்போது

அரிது இப்போது

சின்னத்திரையில் சொந்த குரலில் பேசி நடிக்கும் நடிகர் நடிகைகள் அரிதாகி உள்ளனர். இதனால், இவர்களின் தனித் தன்மை தெரியாமல் எல்லாமே டப்பிங் என்று அடிக்கடி கேட்ட குரலாகவும், ப்ரோம்ப்டிங் கொடுத்து பேசும் போது நிறுத்தி நிறுத்தி கோர்வை இல்லமல் பேசுவது என்பதும் பார்க்க அபத்தமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+