Kanmani serial: நாடியே இல்லாத கையைப் பிடிச்சு செத்து 4 மணி நேரமாச்சுன்னா எப்படி?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் முத்துச்செல்வி எதையோ நினைச்சு எதையோ செய்யப் போக, அது இன்று தர்மதுரை ஐயா இறப்பு வரை வந்துவிட்டது.
சின்ன பிள்ளைங்க எப்போதுமே எந்த நாடகமும் ஆடி, எதையும் வெல்ல முடியாது. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு எதையும் பளிச்சுன்னு சொல்லிடணும்
இப்படி சின்னப் பெண்ணான முத்துச்செல்வி, என்னவோ தர்மதுரை ஐயா குடும்பத்துக்கு, இந்த ஊரை விட்டு போகும் போது நல்லதை செய்துவிட்டு போவோம்னு பெரிய பெரிய விஷயங்களில் தலையிட, விளைவு எப்படி எப்படியோ திரும்பி அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்க தர்மதுரை இறக்க நேரிடுகிறது.

குடும்பமே ஆஸ்பத்திரிக்கு
தர்மதுரை, விஜயலட்சுமியின் இரண்டாவது பெண்ணுக்கு கீழே விழுந்து லேசா தசைப் பிடிப்பு. அதுக்கு குடும்பமே கிளம்பி அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போறாங்க.. ஏற்கனவே தர்மராஜ் ஐயாவுக்கு மனசு சரியில்லை, உடம்பு அசதியா இருக்குன்னு வேற சொல்றார். அதான் அவள் புருஷன் இருக்கானே... அவன் பார்த்துக்க மாட்டானா? ஒரு புருஷனுக்கு மனசு சரியில்லேன்னு தெரிஞ்சும் அவரைத் தனியா எந்த மனைவியும் விட்டுட்டு போக மாட்டா.

தனியா பேசணும்
தங்கச்சி மகனும், தனது இரண்டாவது மாப்பிள்ளையுமான குமரேசன் தப்பு செய்து இருக்கான்னு, அவனை எல்லார் முன்னாலும் வச்சு கேட்காமல் தனியா அழைச்சுக்கிட்டு போறார். அப்போது வந்த தங்கச்சி,என் பையனை எங்கே அண்ணா தனியா பேசணும்னு கூட்டிகிட்டு போறேன்னு கேட்டும். அண்ணன் உன் கூட தனியா பேசணும்னு அழைச்சுட்டு போனார் என்ன பேசினார்னு கேட்காமல் விட்டால் எப்படி?

தனியா யார் கூடவும்
பணக்காரங்க வீட்டில் தனியா யார் கூடவும் நம்பி பேசிவிடக் கூடாது என்பது எவ்வளவு உண்மை. ரத்த பசங்களையே நம்பாத அளவுக்கு ஜாக்கிரதையா இருந்துக்கணும். இதுதான் பணக்காரங்க வீட்டின் எழுதப்படாத விதிமுறை.ஜாக்கிரதையா இருந்துக்கணும்.மாப்பிள்ளையிடம் தனியா பேசப் போன தர்மதுரை ஐயாவை, மாப்பிள்ளை குமரேசன் தள்ளி விட்டுடறதோட, அவர் கடைசியாக கேட்ட மாத்திரையை எடுத்தும் குடுக்காம இருக்க, தர்மதுரை ஐயா உயிரை விட்டுடறார்.

எவ்ளோ தூக்கம்
ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தவங்க இவ்ளோ நேரம் ஒரு மனுஷன் தூங்குவானான்னு யோசிக்க வேணாம்.ஒரு பொண்டாட்டி தொட்டுப் பார்த்து, எதாவது ஜுரமான்னு கேட்க கூட, அவரின் நெற்றியைத் தொட்டு பார்க்க மாட்டாங்களா? கணவன் மனைவி அந்யோன்மா இருக்கறதுன்னா என்னங்க? செட்டப்பை மாத்தி கெட்டப்பை மாத்தின்னு சொல்ற மாதிரி, நீங்க கணவன் மனைவி அன்யோன்யத்தையே மாத்திருவீங்க போல இருக்கு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications