Kanmani serial: என்னடா சோதனை..சவுந்தர்யா கண்ணன் கல்யாணம் கேட்பாரற்று கிடப்பில்...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் பெரியவர் தர்மதுரை இறந்துவிட, குடும்பமே இப்போது தலை கீழாக மாறிக் கிடக்கிறது. ஆட்சி அதிகாரம் என்று கிருஷ்ணவேணி தனது கணவரை தூண்டி விடுகிறார்.
சவுந்தர்யா காதலிச்ச ஆகாஷை, இப்போது அவளது சித்தப்பா பெண் அதாவது கிருஷ்ணவேணியின் பெண் காதலிக்கிறாள். ஆனால், ஆகாஷ் பாவ ம் சவுந்தர்யாவின் தங்கை வளர்மதியை கல்யாணம் செய்து கொள்வது நன்றாக இருக்காது என்று மறுக்கிறான்.
அடிக்கடி அவங்க வீட்டுக்கு போக நேரும்.. அப்போது சவுந்தர்யாவை நான் பார்த்தாலும் தர்ம சங்கடம், அவளுக்கு என்னை பார்த்தாலும் எதாவது கஷ்டம் தோணும்.எதுக்கும்மா வேணாம் என்று ஆகாஷ் மறுத்துடறான்.

சவுந்தர்யா பெரிய மனசுக்காரி
இதை ஆகாஷின் அம்மா கிருஷ்ண வேணியிடம் சொல்ல, கிருஷ்ணவேணி, வளர்மதியை விட்டு சவுந்தர்யாவிடம் ஆகாஷிடம் பேசி சம்மதம் வாங்க ஆலோசனை சொல்றாங்க. சவுந்தர்யாதான் பெரிய மனசுக்காரி ஆச்சே.உடனே ஆகாஷை சந்திச்சு. நாம படிச்சவங்க ஆகாஷ்..இறந்த காலம் ஒரு பிரச்சனையே இல்லை.இப்போதைய காலத்துக்கு வந்துரு. நீ வளர்மதியை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லுன்னு கேட்க, அவனும் சவுந்தர்யாவின் தங்கை வளர்மதியை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிறான்.

உடனே கல்யாணம் என்றால்
ஆகாஷின் அம்மா ஆகாஷுக்கு உடனடியாக கல்யாணம் நடக்கறது நல்லதுன்னு ஜோசியர் சொல்லி இருக்கார்.அதனால உடனே இருபத்து ரெண்டு நாட்களுக்குள் கல்யாணம் வைக்கணும் அது முடியமான்னு கேட்கறாங்க ஆகாஷ் அம்மா.அது பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் பேசி சம்மதம் வாங்கிடறேன். அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் நிச்சயம் செய்துடலாம் என்று கிருஷ்ணவேணி அம்மா சொல்றாங்க.

தர்மதுரை விஜயலட்சுமி
புருஷன் தர்மதுரை இறந்துவிட, குடும்பத்தில் எதிலும் கலந்துக்காமல் தன் அறையே கதி என்று இருக்கிறார் மனைவி விஜயலட்சுமி. அவங்க பெண் சவுந்தர்யா கல்யாணம் பற்றி கூட பேசாமல், வளர்மதியின் கல்யாணத்தை பேசி, அவங்க கிட்ட ஆசீர்வாதம் செய்ய சொல்றாங்க கிருஷ்ணவேணி. விஜயலட்சுமியும் வளர்மதியை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கறாங்க.

விஜயலட்சுமி கண்ணன்
அங்கு இருந்த கண்ணன் அக்கா விஜயலட்சுமி முகத்தைப் பார்க்க, விஜயலட்சுமி தம்பி முகத்தை பார்க்க, அங்கு நின்று இருந்த சவுந்தர்யா கிளம்பிடறா.சவுந்தர்யாவைவிட சின்ன பொண்ணு வளர்மதி. அவளின் கல்யாணத்தை பேசும், இவங்களுக்கு , அக்கா சவுந்தர்யாவுக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் பேசி முடித்த பின்னர் தங்கை வளர்மதியின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்றோ,அல்லது இரு கல்யாணத்தையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்றோ தெரியவில்லையே..
குடும்பத்தில் அப்பா இல்லை என்றால் இப்படித்தானோ?












Click it and Unblock the Notifications