Kanmani serial: இப்படியே உசுப்பேத்தி குடும்பத்தை ரண களமாக்கிடறது!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் பூர்ணிமா பாக்கியராஜ் நடித்து இருக்கார். ஆரம்பத்தில் தனது சொந்த குரலில் பேசி நடித்தபோது கொஞ்சம் கூட எடுபடவில்லை.
இப்போது டப்பிங் வேறு ஒருவர் பேச, பூர்ணிமா பாக்கியராஜ் வெறும் நடிப்பு மட்டுமே. இதனால் பூர்ணிமா பாக்கியராஜ் சீரியலில் நடிப்பதை மட்டும் பார்க்கையில் நன்றாக இருக்கிறது.
இவரை குடும்பத்தின் தலைவியாக வைத்து, சீரியலை கொண்டு போவதும், மிக அப்பாவியாக நல்ல குடும்ப பெண்ணாக பூர்ணிமா பாக்கியராஜ் நடிப்பை சீரியலில் பார்ப்பதும் நன்றாக இருக்கிறது.

வளர்மதி சவுந்தர்யா
சவுந்தர்யா காதலிச்ச ஆகாஷை மறந்து, கண்ணன் மாமாவை காதலிக்க ஆரம்பிச்சு, கல்யாணமும் நடந்து விடுகிறது. அதே ஆகாஷை சவுந்தர்யாவின் சித்தப்பா பெண் வளர்மதி காதலிச்சு, கல்யாணம் செய்துக்கறா. என்றாலும், சவுந்தர்யாவை ஆகாஷ் மதிப்பது வளர்மதிக்குப் பிடிக்கவில்லை.

உடைகள் கல்யாணம்
ஆகாஷ் மீது வளர்மதி ரொம்ப காதலில் இருக்கிறாள். இதை கல்யாண உடைகளை ஒரே மாதிரி வாங்கிய போதே சவுந்தர்யாவுக்கு வளர்மதி உடைகளை மாற்றியதன் மூலம் உணர்த்தி பேசியும் இருக்கிறாள். இருப்பினும் இதை வளரவிடக் கூடாதது என்று சவுந்தர்யா வளர்மதிக்கு புத்திமதியும் சொல்லியாச்சு.

வளர்மதி பொஸசிவ்
இருப்பினும் வளர்மதி பொஸசிவ்வாக இருக்கிறாள். சவுந்தர்யாவும், ஆகாஷும் பேசிக்கொண்டாலும் பிடிக்கலை .முகத்தைக் காட்டுகிறாள். இது கூட அறியாதவள் போல சவுந்தர்யா நடந்துக் கொள்வது வளர்மதியை உசுப்பேத்துவது போல இருக்கிறது. கோயிலுக்கு போகலாம் என்று இரு ஜோடிகளும் கிளம்ப, சவுந்தர்யாவும் பச்சை சேலை, ஆகாஷும் பச்சை சட்டை.

ராத்திரியே பிளான்
ரெண்டு பேரும் ஒரே மாதிரி உடுத்தி இருக்கீங்க என்று கண்ணன் சொல்வது, இதை பார்த்து வளர்மதி சூடாகி, சூடான காபியை ஆகாஷ் சட்டை மீது கொட்டிவிடுகிறாள், ரெண்டு பேரும் ராத்திரியே பேசி வச்சுக்கிட்டீங்களான்னு இவ கேட்க, இல்லை தற்செயலா என்று ஆகாஷ் சொல்ல, காபியும் தற்செயலாத்தான் ஆகாஷ் கொட்டிருச்சு.போயி வேற சட்டை போட்டுக்கோன்னு சொல்றா வளர்மதி.

அப்போதாவது பேசாமல்
சரி ஆகாஷ் வேற சட்டை போட்டுக்கிட்டு வந்துட்டான்னு விடறாங்களா... என்ன ஆகாஷ் சட்டையை மாத்திக்கிட்டு வந்துட்டியா? இது கூட நல்லாத்தான் இருக்கு ஆகாஷ். இந்த சட்டையில் ஸ்மார்ட்டா இருக்கேன்னு சவுந்தர்யா மீண்டும் உசுப்பேத்தறா வளர்மதிக்குத்தான் பிடிக்கலையே பேசாமல் இருந்துவிடுவோம்னு அடிப்படை அறிவு கூடவா சவுந்தர்யாவுக்கு இருக்காது?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications