Upendra: கூலி பட நடிகர் உபேந்திரா மனைவியை ஏமாற்றிய நபர் கைது! விசாரணையில் வெளிவந்த தகவல்!
சென்னை: இப்போ உள்ள காலத்துல ஆன்லைனில் ஒரு பொருள் ஆர்டர் பண்ணினாலே ரொம்பவும் கவனமா இருக்கணும்! ஆனா, கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் , இயக்குநராகவும் கலக்குற உபேந்திரா குடும்பத்துக்கே பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது. அவர் மனைவியோட போனை ஹேக் பண்ணி,1.5 லட்சம் ரூபாயைச் சுருட்டிய ஒரு சைபர் க்ரைம் ஆள் இப்போது போலீஸ் GRIPல சிக்கி இருக்கான்!

யார் இந்த நடிகர் உபேந்திரா
உபேந்திரா கன்னட சினிமாவில் ஒரு 'ரியல் ஸ்டார்'! அவர் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர்னுப் பல அவதாரங்கள் எடுத்தவர். தமிழில் கடைசியாக 'கூலி' படத்துல நடிச்சிருந்தார். இவரை எல்லாரும் 'ரியல் ஸ்டார்' உப்பேன்னு தான் கூப்பிடுவாங்க!. இவருடைய மனைவிதான் நடிகை பிரியங்கா உபேந்திரா (முன்னாள் பிரியங்கா திரிவேதி). இவங்க தமிழ், கன்னடம், தெலுங்குன்னு பல மொழிகள்ல நடிச்சிருக்காங்க. இந்தத் தம்பதிக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. உபேந்திரா எப்போதுமே ரொம்ப நேர்மையானவர். ஆனா, அவர் குடும்பத்துக்கே இந்தக் கதி வந்ததைப் பார்த்துப் பலரும் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்க!
ஆன்லைன் ஆர்டர்ல வந்த ஆப்பு
கடந்த செப்டம்பர் மாசம், உபேந்திரா மனைவி பிரியங்கா ஆன்லைன்ல (ONLINE)ல ஒரு பொருளை ஆர்டர் பண்ணி இருக்காங்க. அதுக்குப் பிறகு அவங்க PHONEக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கு. அதுல இருந்த ஒரு LINKஐத் தொட்டவுடனே, அவங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஹேக் ஆகி இருக்கு!. ஹேக்கர், பிரியங்காவோட வாட்ஸ்அப்ல இருந்த நம்பர்கள் எல்லாத்துக்கும், "உடனே 55,000 அவசரமாக வேண்டும்!"னு மெசேஜ் அனுப்பி இருக்கான். இதை உண்மைன்னு நம்பி நிறையப் பேர் PAYMENT பண்ணிருக்காங்க! மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் ஹேக்கர் கைக்குப் போயிருக்கு!. இதுல கொடுமை என்னன்னா, பிரியங்காவோட பையன்கூட, 50,000 பணம் அனுப்பி இருக்கானாம்!
உபேந்திரா வெளியிட்ட வீடியோ
இவங்க டென்ஷன்ல இருக்கும்போதே, மெசேஜ் வந்த நம்பருக்கு உபேந்திரா கால் பண்ணப் போனா, அவர் போனும் ஹேக் ஆகி இருக்கிறது தெரிஞ்சுருக்கு!. உடனே உபேந்திரா ஒரு வீடியோ வெளியிட்டு, "தயவு செஞ்சு, என்னுடைய நம்பர் அல்லது என் மனைவியோட நம்பர்ல இருந்துப் பணம் கேட்டு மெசேஜ் வந்தா, தயவு செய்து அனுப்பாதீங்க!"ன்னு சமூக வலைதளத்துலக் கேட்டுக்கிட்டார்.
இதைத் தொடர்ந்து, பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்துல மோசடி குறித்து புகாரும் கொடுத்தாரு.
பீகாரில் சிக்கிய பெரிய தலை
உபேந்திரா கொடுத்த புகாரைத் தொடர்ந்து விசாரிச்ச சதாசிவநகர் போலீஸ், இப்போ அந்தக் ஹேக்கரைக் கண்டுபிடிச்சுட்டாங்க!. அவன் பீகாரைச் சேர்ந்த விகாஸ் குமார்ன்னுத் தெரிய வந்திருக்கு. இவனும் இவனோட கூட்டாளிகளும் பெரிய அளவுல சைபர் க்ரைம் பண்ணிட்டு வர்றதாப் போலீஸ் சொல்லியிருக்காங்க. இப்போ விகாஸ் குமாரை போலீஸ் கைது செஞ்சு, விசாரணைக்காகப் பெங்களூருக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. மத்திய பிரிவு சைபர் போலீஸும், சதாசிவநகர் போலீஸும் சேர்ந்து இந்தக் கேஸை விசாரிச்சுட்டு இருக்காங்க.
ஒரு சூப்பர் ஸ்டார் குடும்பத்துக்கே இந்தக் கதின்னா, சாதாரண மக்களோட நிலைமை என்னன்னு பார்க்கும்போது பயமா இருக்கு! எந்த LINKஐத் தொடறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் யோசிங்கப்பா!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications