barathi kannamma serial: பாரதியின் கண்ணம்மாவுக்கு அநியாயமும் அக்கிரமும் மட்டுமே...!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி விரும்பி கல்யாணம் செய்துக்கொண்ட கண்ணம்மாவுக்கு எப்போதும் அநியாயமும் அக்கிரமமும் மட்டுமே நடக்குது. பிறந்த வீட்டில் சித்தி கொடுமை என்றால் புகுந்த வீட்டில் மாமியார் கொடுமை.
கருப்பாக இருக்கும் கண்ணம்மாவை பாரதி காதலித்து கல்யாண செய்துக்கொண்டது மட்டும்தான் இதுவரை அவளுக்கு நடந்த நல்லது.மற்றபடி எப்போதும் அக்கிரமம் அநியாயம்தான் நடக்குது.
ஒரு சில காட்சிகள் பார்க்கும்போது பலரும் வாய்விட்டு திட்டிவிடும் அளவுக்கு கண்ணம்மாவுக்கு அநீதி நடக்குது.எல்லாம் டூ மச் கற்பனையாத்தான் இருக்குது.

கருப்பு கண்ணம்மா
டாக்டராக இருக்கும் பாரதி, கருப்பு கண்ணம்மாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான். ஆனால், பாரதியின் அம்மா சவுந்தர்யாவுக்கு கருப்புன்னாலே ஆகாது. பெண்ணுக்கு பிறந்த தனது பேத்தி கருப்பா இருக்குன்னு அந்த குழந்தையை தொட்டு கூட கொஞ்சாமல் இருக்காங்களாம். ஆரம்பத்தில் கருப்பு என்கிற ஒரு விஷயத்தை வச்சு கதையை சீரியலாக்கி எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அதைத் தொட்டு வேறு குறைகள் என்று கண்டுபிடித்து, குழ்ந்தை இல்லை என்று சொல்லி அவளை வீட்டை விட்டு துரத்தும் அளவுக்கு சீரியஸாக சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

சித்தி பாட்டி
சவுந்தர்யா அம்மா கண்ணம்மாவின் பாட்டி சித்தி இருவரையும் கூப்பிட்டு, உங்க கண்ணம்மாவை நீங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போங்கன்னு சொல்றாங்க. அதுக்கு சித்தியும் பாட்டியும், ஏற்கனவே வீட்டுக்காரர் பக்கவாதத்தில் விழுந்து கிடக்கறார். இப்போ இவளையும் அழைச்சுட்டு போயி வீட்டில் வச்சுக்கிட்டா வருமானம் இல்லாம எப்படி சமாளிக்கறதுன்னு சொல்றாங்க. அதுக்கு சவுந்தர்யா அம்மா சொல்றாங்க, எத்தனை லட்சம் வேணும், சொல்லுங்க நான் தரேன்.. அவளை கூப்பிட்டுக்கிட்டு வீட்டுக்கு போயிடுங்கன்னு சொல்றாங்க.

லட்சமா ஓகேஓகே!
எத்தனை லட்சமா, அப்படீன்னா சரி சம்பந்தி.. நாங்க கண்ணம்மாவை கூட்டிகிட்டு போறோம்னு சொல்றாங்க. இந்த சீனை பார்க்கும்போது பலரும் வாய்விட்டு கண்ணம்மாவின் சித்தியையும், பாட்டியையும் திட்டறாங்க. இதுதான் சீரியல் எடுப்பவர்கள் சக்ஸஸ். எப்படியாவது சீரியல் பார்ப்பவர்களை உணர்ச்சி பெருக்கில் கொண்டு வந்து விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று எல்லாரும் பேசி வச்சுக்கிட்டு சீரியல்கள் எடுப்பார்கள் போலும். ஒண்ணை பார்த்த மாதிரியே அத்தனை சீரியல்களும் கொந்தளிப்பை வரவைக்குது.

குறை ஒன்றுமில்லை
கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் குறை ஒன்றும் இல்லை. ஆனால், குழந்தை பிறக்காதுன்னு வெண்பா பொய்யா கொடுத்த ஒரு சான்றிதழை வச்சுக்கிட்டு சீரியல் பயணிக்குது.வெண்பா நல்லவ இல்லை. கண்ணம்மா அவளை நம்பாதேன்னு நீயா நானா விவாதத்தில் கலந்துக்கொண்ட சில பெண்கள் சீரியலை சீரியஸா எடுத்துக்கிட்டு பேசும் அளவுக்கு கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.
இதுதான் வெற்றின்னு அவங்க நினைச்சு செயல்பட்டுக்கிட்டு மென்மேலும் இந்த கொந்தளிப்பை அதிகமாக்க ஒவ்வொரு எபிசோடையும் லாஜிக் இல்லாமல் எடுத்துக்கிட்டு இருக்காங்க.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications