சன் டிவி சீரியல் கதாநாயகிக்கு இன்று எளிமையாக திருமணம்.. மாப்பிள்ளை இந்த நடிகர் தான்! சூப்பர் ஜோடி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் நடித்த நடிகை அக்ஷிதாவிற்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது கூர்க் முறைப்படி எளிமையாக அக்ஷிதா போபாய் திருமணம் நடைபெற்று இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகை அக்ஷிதா சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகமாக பரிச்சயமானவர்தான். சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல், சுமங்கலி சீரியலில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு அதிகமான பிரபலத்தை கொடுத்தது என்றால் அது "கண்ணான கண்ணே சீரியல்" தான். இந்த சீரியலில் கதாநாயகிக்கு இணையாக இவரும் அதிகமாக பாராட்டப்பட்டு இருப்பார்.

அதுவும் கதாநாயகிக்கு தங்கையாக இவர் நடித்து பலருடைய மனங்களை கவர்ந்திருந்தார். கண்ணான கண்ணே சீரியலில் இவர் "ப்ரீத்தி" என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த கேரக்டர் மூலமாக இவர் அதிகமாக பிரபலம் அடைந்திருந்தார். அந்த சீரியலில் அக்கா மீது உள்ள பாசம், அப்பாவையும் அக்காவையும் பேச வைப்பதற்காக இவர் படும் கஷ்டங்கள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன்னுடைய நடிப்பை ஸ்கோர் செய்திருந்தார்.
அந்த சீரியல் முடிவடைந்ததும் அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் சீதாவின் அக்காவாக நடித்திருக்கிறார். அந்த சீரியலில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இவர் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னாவாக நடித்திருந்தார்.

இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே இவருக்காக சீரியலை பலர் அந்த சீரியலை பார்ப்பதாக கூறி வந்தனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இந்த சீரியலில் அவர் கொலை செய்யப்படுவது போல காட்சிகள் வைத்து விட்டனர். அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறியிருந்தார். அதோடு அதிகமாக சுற்றுலா புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் எங்கேஜ்மென்ட் முடிந்து இருந்தது. அப்போது அவருடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்தது. காரணம் அவருடைய எங்கேஜ்மென்ட் வித்தியாசமாக நடைபெற்றது. அவருடைய ட்ரெஸ்ஸிங் வித்தியாசமாக இருந்தது. அதற்கு காரணம் அவர் அவருடைய கூர்க் முறைப்படி எங்கேஜ்மென்ட் செய்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவருடைய திருமணமும் கூர்க் முறைப்படி எளிமையாக நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்ததும் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு அன்ஷிதாவின் கணவரும் பாப்புலரானா நடிகர் தான். பெங்களூரை சார்ந்த பிரீத்தம் சுரேஷ் என்பவரோடு தான் இவருக்கு திருமணம் முடிவடைந்து இருக்கிறது. அதோடு பிரீத்தம் சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தள ப்ரொபைலில் அவர் ஒரு எக்சிடியூடிவ் ப்ரொடியூசர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல இவர் பிரபலமான நடிகராக தான் இருக்கிறார். அதிலும் அதிதி சங்கரோடு கூட வேற மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications